UPSC MAINS PAPER -A PREVIOUS YEAR TAMIL LANGUAGE QUESTION PAPERS

 

2024 UPSC MAINS PAPER A PREVIOUS YEAR TAMIL LANGUAGE QUESTION PAPER

 

 

Q1. பின்வருவனற்றுள் ஏதேனும் ஒன்று குறித்து 600 சொற்களில் கட்டுரை வரைக. (100)

 

(a) மக்களாட்சியும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும்

(b) இந்தியாவில் குடிநீருக்கான சிக்கல் ஏற்படுமா?

(c) பழங்குடிப்பண்பாட்டைப் பாதுகாத்தல்: முயற்சிகளும் வாய்ப்புகளும்

(d) காலிப்பாத்திரங்களே அதிகம் ஓசை எழுப்புகின்றன

 

 

Q2. பின்வரும் பகுதியைக் கவனமாகப் படித்து, அதன் இறுதியில் தரப்பட்டுள்ள வினாக்களுக்குத் தெளிவாகவும் சரியாகவும் சுருக்கமாகவும் விடை எழுதுக: (12×5=60)

 

திறனாய்வு இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது, ஏனெனில், அதன் எல்லைக்குள் இலக்கியத்தைப் போலவே ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கிறது, இலக்கியத்திற்குள் சிலவற்றை உள்வாங்கும் நிலை ஏற்படும்போது, அதன் சாராம்ச ஓட்டம் தடைபடும், இசைக்கோலம் ஒன்றில் பொருத்தமற்ற இசைக்குறிப்பு நுழைக்கப் பட்டால், இசையின் தன்மை மாறுவதுபோல இலக்கியத்தின் தன்மையிலும் குறை ஏற்படும்.

 

மகிழ்ச்சி, உண்மையான உணர்ச்சிகளின் வெளிப்பாடு தவறான உணர்ச்சிகளில் துயரத்தை உணர்கிறோம். ஒரு மனிதன் சிலநேரங்களில் தவறான மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். உனர்ச்சிகளில்கூட வன்முறைச் செயல்பாடுகளில் ஒருவருக்கு மகிழ்ச்சி கிடைக்கலாம். அடுத்தவர் சொத்தைப் பறிப்பதில் அல்லது தன்னலத்தோடு அடுத்தவரைத் துன்பறுத்துவதில் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், அது மனித மனத்தின் இயல்பான போக்கு அல்ல.

 

ஒரு திருடன் வெளிச்சத்தைவிட இருட்டை அதிகம் விரும்பலாம். அது வெளிச்சத்தின் மேன்மையைக் குறைத்து விடாது.

 

மற்றவர்கள் ஒவ்வாருவரின் உணர்வுகளும் நல்லுணர்வுகளாக இருக்கும் போது, நாமும் நம்முடைய நல்லுணர்வுகளால் ஒன்றிணைய முடியும். அன்பே நம்மை மற்றவரோடு இணைக்கும். ஆத்திரம் நம்மை வேறுபடுத்திவிடும். ஆத்திரம் கொண்ட ஒரு மனிதரால் மற்றவர்களோடு எப்படி ஒன்றினைய முடியும் ? ஆகவே, அன்பே உண்மையானது ஒதுக்கி வைத்தலும் அகம்பாவமும் தவறான ஒன்று.

 

பக்தியை வெளிப்படுத்துவதற்கு உறுதியான சில பொருள்கள் தேவைப்படுகிறது. இரக்கம் காட்ட வேண்டும்; ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் பொறுமையும் உறுதியும் வேண்டும், அதைப்பெறுபவராகவும் இருக்க வேண்டும். இதன்முலம் நாம் அறிவது என்னவென்றால், நமது விழிப்புணர்வு புறக்காரணிகளோடு ஒத்திசைந்து நிற்க்கக்கூடியது என்பதைத்தான். வெளியுலகத்தில். இயற்கைப் போக்கோடு ஒத்திசைந்து போவதைத் தவிர்க்க முடிந்தால், நம்முன்னே மகனின் இறப்புக்காகக் கண்ணீர்த்துளிகளை விடும் ஒருவரோடு இணைய முடியாது. பெரும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் மகிழ்ச்சியோடும் சேரமுடியாது. அதன் பிறகு இந்த உலகத்தின் இருப்புக்கும் மேலே உயர்ந்து அடைவதற்கு ஏதுமில்லை என்பதை உணரலாம். அந்த நிலைதான் நிர்வாணம் எனும் பற்றின்மை. இந்தமாதிரியான சூழ்நிலை குறித்து இலக்கியம் மதிப்பெதுவும் கொண்டிருக்கவில்லை. எவர் ஒருவர் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல உணர்கிறாரோ, உலகத்திற்கு அளிக்கிறாரோ, இன்பத்தையும் துன்பத்தையும் தனது எழுத்தில் உருவாக்கும் வல்லமையுடன் இருக்கிறாரோ அவரே நல்ல இலக்கியவாதி, ஒன்றுக்குள்ளேயே இன்பமல்லாத ஒன்றை அனுபவிப்பது என்பது போதாது. அதனை வெளிப்படுத்தும் திறனுடன் கலைஞர் திகழவேண்டும் ஆனால், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு திசைகளில் மனிதர்கள் முன்னகரவும் வேண்டும்.

 

ஒரே மாதிரியான உணர்வுகள் எல்லா மனிதர்களிடத்திலும் இருந்தபோதிலும், வேறுபட்ட சூழ்நிலைகள் தாக்கம் செலுத்துகின்றன என்பதும், பொறுப்புணர்வைத் தீர்மானிக்கின்றன என்பதும் உண்மை. விவசாயிகளோடு தங்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்களுடன் வாழும் வாய்ப்பு உண்டானால், அவர்களின் துயரங்களும் மகிழ்ச்சியும் நம்முடையது போன்று தோன்றுவது இயல்பு. அவர்களுடைய வாழ்க்கைச் சூழல், நம்முடைய ஆழமான உணர்வுகளைத் தாக்கம் செய்யும், இதேபோல்தான் மற்ற உணர்வுகளும் தாக்கம் செய்யும் என்பதை உணர வேண்டும், சிலமனிதர்கள் விவசாயிகளுக்காகவோ, தொழிலாளர்களுக்காகவோ, ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்காகவோ பிரசாரம் செய்வது நீதியற்றது என விளக்கம் தரப்படுகிறது, இந்த இடத்தில் இலக்கியத்திற்கும் பிரசாரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு என்பது என்ன ? என்று கேட்டுக் கொள்ளலாம். ஒரு பிரசாரத்தில் ஒருவரை விளம்பரப்படுத்தும் நோக்கம் இல்லை என்ற போதிலும், குறிப்பிட்ட நோக்கம் ஒன்றை நிறைவேற்றும் ஆர்வம் அதில் இருக்கும், அந்த ஆர்வம் வழிமுறைகளைப்பற்றிக் கவலைப்படாது இலக்கியம் ஒவ்வொருவரையும் மென்மைப்படுத்தக் கூடிய-குளிர்ச்சியான காற்றுப் போன்றது, பிரசாரம் என்பது, வேரோடு தாவரங்களையும் மரங்களையும் பிடுங்கிப்போடும் சூறைக்காற்றைப்போன்றது, ஒரே நேரத்தில் குடிசை வீடுகளையும் மாளிகைகளையும் அசைத்துவிடக் கூடியது. தெளிவற்ற ஒரு பிரசாரம், மகிழ்ச்சிக்கான ஒன்றல்ல, ஆனால் ஒரு புத்திசாலியான கலைஞர் தமது கலை ஆக்கத்திற்குள் அழகையும் அதன் சாயல்களையும் நிரப்புவதன் மூலம் பிரசாரப் பொருண்மையைக்கூட நல்ல இலக்கியத்தின் பகுதியாக மாற்றிவிடுவார்.

 

(a) திறனாய்வு இலக்கியத்தின் பகுதியாகக் கருதப்படுவது ஏன்?

 

(b) உண்மையான வெளிப்பாட்டுணர்வு, தவறான வெளிப்பாட்டுணர்வு என்றால் என்ன?

 

(c) மனித மனத்தின் இயல்பானபோக்கு இதுவல்ல என்பது எதனை ?

 

(d) இந்த எழுத்தாளரின் கருத்துப்படி யார் உண்மையான இலக்கியவாதி ?

 

(e) இலக்கியம், பிரசாரம் இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை விளக்குக.

 

 

Q3. கீழ்க்காணும் பகுதியை அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவில் சுருக்கி, உங்கள் சொந்த நடையில் எழுதுக. தலைப்புத் தேவையில்லை. (60)

 

பொறாமை என்பது எப்போதும் குறிப்பிட்ட தனிநபரை மையமிட்டு உருவாகும் குணம் என்பதைக் கவனிக்க வேண்டும். யாரோ ஒருவர் செல்வந்தராகவோ, மதிப்புடையவராகவோ, தைரியம் உடையவராகவோ இருப்பதைப்பார்த்து பொறாமைப் படுவதில்லை நம்மை இன்னொருவருடனோ, மற்றவரை வேறு ஒருவருடனோ ஒப்பிட்டுப் பார்க்கும் போது போறாமை உருவாவதை அறியலாம். உருவான பொறாமை அவருக்கு எதிராக நிறுத்துகிறது. ஒருவரோடு நெருக்கமான உறவு அல்லது தொடர்பு இல்லாதவரிடம் பொறாமை உண்டாவதில்லை. அவர்களை நம்மோடு ஒப்பிட்டுக் கொள்வதில்லை ஐரோப்பாவில் வாழும் செல்வந்தர் பற்றிக் காசிநகரில் வாழும் பணக்காரர் அறிந்து கொள்வதுகூட இல்லை. ஒரு இந்திக் கவிஞருக்கு ஆங்கிலக்கவி ஒருவர்மீது பொறாமை உண்டாவதில்லை. பொறாமை என்பது எப்போதும் நெருங்கிய உறவினர், பால்யகாலம் முதல் நண்பர்களாக இருந்தவர்கள், வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள், அண்டை வீட்டார் ஆகியோர் மீதே பொறாமை உருவாகி வளர்கிறது. குழந்தைப் பருவம் முதல் நண்பர்களாக இருந்த இருவரில் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பொறாமைக்குணம் வளர்த்தெடுக்கிறது, இரண்டு நண்பர்களில் ஒருவர் தனது முயற்சிகளினால் குறிப்பிட்ட இடத்தை நல்ல பதவியை அடையும் போது, தானும் அதுபோல் அடைய வேண்டும் என்று நினைக்காமல் அவரது வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என நினைக்கிறது பொறாமை. ஆனால் நீண்டநாள் நண்பர் தனது வளர்ச்சியைத் தடுப்பதற்கு முயற்சி செய்வார் என நினைப்பதில்லை.

 

ஒருவர் அவரிடம் உள்ள பொறாமைக் குணத்தைக் கைவிட நினைக்க வேண்டும், கைவிடும் போது ஒன்றிணைப்பு ஏற்படும், மற்றவர்கள் மீது காட்டும் பரிவுணர்வக்கான கூறுகளை வளர்த்தெடுக்க முடியும், நம்முடைய செயல்பாடுகள் வழியாக நல்லெண்ணங்களின் ஒளியை உருவாக்க முடியாது என்று நினைப்பதைவிட, அதன் எதிர்நிலையில் நம்பிக்கை உண்டாக்கும் எண்ணங்களை உருவாக்க முடியம் என நினைக்க வேண்டும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின்மை வெல்ல உள்ளது. முடியாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் நம்முடைய முமுமையான அறிவு, புத்திசாலித்தனம் கொண்டு அதனை வென்றுவிட முடியாது.

 

இப்போது, எது முக்கியம் என்றால் ஒரு தனிநபரிடம் இருக்கும் பொறாமையையும் அதனால் மறைக்கப்படுவனவற்றையும் நீக்குவதற்குத் தனிநபர் மீது சமுகம் செலுத்த வேண்டிய கவனம் என்பதே. ஒருவரின் சமூகம் பற்றிய பார்வையும் புரிதலுமே பொறாமையை உருவாக்குகிறது என்பதால், சமூகத்திற்கும் பங்குண்டு. செழிப்பு, உறுதி, உயர் மதிப்பு போன்றனவற்றைத் தனிநபராகவே ஒருவர் உள்வாங்கி உணரவேண்டும். சமூகத்திற்காக மட்டுமல்லாமல் தனது மகிழ்ச்சியும் அதற்குள் அடங்கியிருக்கிறது என்பதாக நிணைக்க வேண்டும். நாம் செல்வந்தராக இல்லை அல்லது உறுதியானவராக இல்லை என்று நினைக்கலாம். ஆனால் அவரையும் சமூகத்தில் சமமாகக் கருதவேண்டும். உயர்வாக நினைக்க்க்கூடாது, அந்த நிலையில்தான் பொறாமைத் தன்மையின் இறுக்கம் வலியை உண்டாக்காது. இது எப்படித் தனித்துவமானதாக மாறுகிறது என்றால், சமூகத்தின் பார்வையில் படும் விதமாகச் சிலவற்றைச் செய்ய வேண்டும் என நினைக்கும்போதுதான். பொறாமை என்னும் நஞ்சு எவர் ஒருவருக்கும் பிறப்பு முதலே வருவதில்லை சமூகத்தின் இருப்பு, போக்கு காரணமாகச் செயற்கையாகவே உருவாகிறது. இந்தப்புரிதலின் வழியாக, மோசமான எண்ணங்களால் வழிநடத்தப்படும்போது நம்முடைய நலனுக்கு எதிராகவே நாம் செயல்படுகிறோம்; அதன் மூலம் மற்றவர்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கிறோம் என்பதை உணர வேண்டும்.

 

ஒரு நீதிமான் நீதியை வழங்குகிறார் ஒரு கொத்தனார் செங்கல்களை அடுக்கிச்சுவர் எழுப்புகிறார். சமூகத்தில் இருப்பின்படி நீதிமான், கொத்தனார் ஆகியோர் இடையே உயர்வு-தாழ்வு இல்லை, ஆனால் நீதிமான் உயர்வானவர், கொத்தனார் கீழானவர் என்ற எண்ணம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவர்களிடையே உண்டாகும் பொறாமை நிரந்தரமாகத் தங்கி விடுகிறது, அதிலிருந்து விடுபட்டு ஒற்றுமையுடன் முன்னோக்கி நகர்வது எப்போதாவது தான் நடக்கிறது, ஒருவரிடம் வெளிப்படும் இரக்ககுணமும், வருத்தப்படும் தன்மையுமே அவரது பெருமையையும் சிறுமையையும் வெளிப்படுத்தும். வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மக்களின் வாழ்க்கைக்குப் பொருளீட்டவும் உதவுவேன் என நினைக்க வேண்டும். பணியாளர்கள் வெவ்வேறு விதமான பாகுபாட்டுடன் செயல்படுகின்றனர் என நினைக்கிறார்கள் அதனால் பலவிதமான அதிருப்தி உள்ளது, அதனை மாற்றி தங்கள் பணிகளுக்கு மரியாதையை உண்டாக்க வேண்டும். இந்தப் பணி இடத்தில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை என்பதைச் சொல்லும் விதமாக விளம்பரம் செய்யவேண்டும். அனைவரும் பார்க்ககூடிய இடத்தில் பெரிதாக அவற்றை வைக்க வேண்டும், குறிப்பான சிலவற்றில் மக்கள் சக்கியைத்திரட்டிக் கவனம் குவிப்பதின் மூலமே பணி இடங்களில் நிலவும் பாகுபாடுகளை இல்லாமல் ஆக்க முடியும்.

 

 

Q4. பின்வரும் பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதுக. (20)

 

குடிசைத்தொழில்கள், சிறுமுதலீட்டு வணிகங்கள் குறித்த பேச்சுகள் திரும்பவம் இந்தியாவின் பேசுபொருளாக மேலெழும்பி வருகின்றன. வீடு போன்ற சிறிய அளவிலான தொழில் இடங்கள், குறைந்த முதலீடு, எண்ணிக்கையில் குறைவான தொழிலாளர்கள் என்பதை நோக்கிப் பயணிக்கலாம் என்பதே இதன் முதன்மைக் காரணம். தனிநபர்களை உற்பத்தியாளர்களாக மாற்றும் இந்த தொழில்மாதிரிகள் அவர்கள் தரமான வாழ்க்கைகுத் தேவையான வருமானத்தைத் தருவதோடு வேலையின்மைப் பிரச்சினைக்கும் தீர்வு தருவதாக இருக்கிறது, இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு இவ்வகையான வளர்ச்சியைத்தரும் சிறுதொழில்களே என சரியான மகாத்மா காந்தி முன்பேகண்டறிந்து கூறினார். அதனை விடுதலைப் போராட்ட காலத்திலேயே முன்வைத்தார். மரபான தொழில்களில் ஈடுபட்டுப் பொருளீட்டிய மக்களிடமிருந்து கற்றுக்கொண்டு, அதனை உள்வாங்கிய நிலையிலேயே அதனைச் சொன்னார், தனது முன் உணர்வின் அடிப்படையில் அவர் சொன்ன அத்திட்டங்களை, விடுதலைக்குப்பிந்திய அரசியல் தலைமைகள் பெருமளவு ஏற்றுக்கொள்ளவில்லை, பெருந்தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து ஆதிக்கம் செய்ய உதவின. அப்பெருந்தொழிற்சாலைகள் பொருளாதாரத்தில் உயர்நிலையில் இருந்தவர்களின் தனியுடைமைகளாக இருந்தன, பெருகிவரும் மக்கள்தொகை, கல்வி அறிவின் பரவல், ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு, வேலை வாய்ப்பைத் தேடிநிற்கும் மனிதவரிசைகள் சிந்தனையாளர்களிடம் போன்றனவற்றைக் திரும்பவும் கண்ட காந்தியச் சிந்தனைகள் மறு உயிர்ப்புப் பெற்றுள்ளன. அவர்கள் இப்போது பரிந்துணர்வுடன் மறுபரிசீலனை செய்கின்றனர். இன்று நாட்டின் தேவையை நிறைவு செய்வதற்கு சிறுதொழில்களில் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பது உணரப்பட்டுள்ளது, முன்பிருந்தே தொடராமல் விட்டது தவறு என்பதும் உணரப்படுகிறது. அதன் விளைவாக நாடு முழுவதும் செயல்படும் குடிசைத்தொழில்களுக்கு உதவும் வலைப்பின்னல் தொடர்புகள் உண்டாக்கப்பட்டு வருகிறது.

 

Q5. பின்வரும் பகுதியைத் தமிழில் மொழிபெயர்க்க. (20)

 

In our democratic system, the press has a vital role. While there has been large-scale expansion of the print and visual media in recent years, a focused approach to dealing with major societal and political issues has still to evolve. There is, as yet, excessive and exaggerated coverage of exposures and scandals and far too little well-informed comment or analysis of the various deep-rooted factors which generate the continuing malaise. The media could make an extremely useful contribution by devoting adequate coverage to tasks well done, highlighting the achievements of honest and efficient public servants and organizations, according special attention to developments in the remote and backward areas of our country. Our media is free and unfettered. It should be able to expose cases and incidents involving irregular and unlawful exercise of authority and abuses of all kinds. The existing ills in our socio-political environment will, on present reckoning, take considerable time to remedy. The Department of Personnel and Administrative Reforms should focus on establishing institutions responsible for all personnel matters appointments, postings, transfers etc. without any external interference. Also, there is a need for adoption of a robust code of ethics to be followed by those involved in public functioning.

 

 

Q6. (a) கீழ்க்காணும் சொற்களை உமது சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக : (2x5=10)

 

(i) மெதுவாக

(ii) கரிசல்

(iii) பொய்கை

(iv) பேதை

(v) மன்றல்

 

(b) பின்வரும் இணைச் சொற்களின் பொருள் வேறுபாடு புலப்படுமாறு ஏற்ற சொற்றொடர்களில் அமைத்து எழுதுக: (2x5=10)

 

(i) திரை - திறை

(ii) களம் - கலம்

(iii) ஊண் - ஊன்

(iv) வலி - வளி

(v) விழிப்பு – விளிப்பு

 

(c) பிரித்து எழுதுக: (1x5=5)

 

(i) பலகையொலி

(ii) தந்திய டி

(iii) குறுஞ்சுனை

(iv) தமிழழகன்

(v) தயிர்க்குடம்

 

(d) எதிர்ச்சொற்கள் தருக (1x5=5)

 

(i) நெட்டை

(ii) முற்போக்கு

(iii) கனவு

(iv) வன்மை

(v) இருள்

 

(e) எதிர்மறை வாக்கியமாக மாற்றுக: (1x5=5)

 

(i) அவள் மழையில் நனைந்தாள்

(ii) புத்தகம் அலமாரியில் உள்ளது

(iii) கரும்பு ஒரு தாவரம்

(iv) இரவில் கடும்பனி பொழிந்தது

(v) தோல்விகண்டு துவண்டுவிடக் கூடாது

 

(f) பிழை நீக்கி எழுதுக: (1x5=5)

 

(i) நந்தினி மல்லிகையைச் சூடினால்

(ii) நாளும் இரண்டும் சொல்லுக்கு வறுதி

(iii) நீடுதுயிழ் நீக்கப்பாடிவந்த நிலா

(iv) பொங்குக பொங்கள்

(v) கன்டவர் விண்டிலர்

 

 

 

 

2023 UPSC MAINS PAPER A PREVIOUS YEAR TAMIL LANGUAGE QUESTION PAPER

 

 

Q1. பின்வருவனற்றுள் ஏதேனும் ஒன்று குறித்து 600 சொற்களில் கட்டுரை வரைக. (100)

 

(a) நுகர்வோர்களின் வாழ்க்கை முறையும் சுற்றுச் சூழழும்

(b) அலைபேசிக்கு (Mobile Phone) அடிமையாதல்

(c) இணையவழிக் கல்வியின் வரம்புகள்

(d) பயங்கரவாதம் : ஒரு சவால்

 

 

Q2. பின்வரும் பகுதியைக் கவனமாகப் படித்து, அதன் இறுதியில் தரப்பட்டுள்ள வினாக்களுக்குத் தெளிவாகவும் சரியாகவும் சுருக்கமாகவும் விடை எழுதுக. (12x5-60)

 

ஒரு விவசாயி வயல்களில் வேலை செய்யும் போது, அவர் உணவு தானியங்களையும் தொழிற் சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களையும் உற்பத்தி செய்கிறார். பஞ்சாலைகள் மற்றும் விசைத்தறிகள் மூலம் பருத்தி, துணிகளின் வடிவம் பெறுகின்றன. வாகனங்கள் ஒரு பொருளை ஒரு இடத்திவிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்கின்றன. பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பினை நாம் அறிவோம். ஒரு ஆண்டில் நாட்டில் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறதோ அது மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது. நாம் ஏற்றுமதிக்கான விலையைப் பெறுகிறோம்; இறக்குமதிக்கான விலையைக் கொடுக்கிறோம். அதில் உள்ள நிகர இலாபம் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கலாம். பெறப்பட்ட வருவாயைச் சேர்த்தால், அந்த ஆண்டுக்கனை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெறலாம்.

 

மொத்தத் தேசிய உற்பத்திக்குப் பங்களிக்கும் அனைத்துச் செயல்பாடுகளையும் நாம் பொருளாதார நடவடிக்கைகள் என்று அழைக்கிறோம். பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அவர்கள் எந்த மட்டத்தில் பணிபுரிந்தாலும் - அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயனடைவர். அவர்களில் சிலர் நோய் மற்றும் காயம், மோசமான வானிலை, பண்டிகைகள் அல்லது சமூக மற்றும் மதக் கொண்டாட்டங்கள் போன்றவற்றால் வேலைக்கு வர முடியவில்லை என்றாலும் அவர்கள் தொழிலாளர்களாகவே கருதப்படுகின்றனர். வேலைகளில் ஈடுபடும் முக்கியத் தொழிலாளர்களுக்கு உதவி செய்பவர்களும் தொழிலாளர்களாகவே கருதப்படுகின்றனர். பொதுவாக முதலாளியிடம் வேலைக்குப் பதிலாக ஏதாவது ஊதியம் பெறுபவர்களைத் தொழிலாளர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் இது அப்படியல்ல. சுயதொழில் செய்பவர்களும் தொழிலாளர்களே.

 

இந்தியாவில் வேலையின் தன்மை பன்முகம் கொண்டது. சிலருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும்; சிலருக்குச் சில மாதங்கள் மட்டுமே வேலை கிடைக்கும். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. தொழிலாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடும்போது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் தொழிலாளர் பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். 2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 473 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், நகர்ப்புறத் தொழிலாளர்களை விடக் கிராமப்புறத் தொழிலாளர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. இந்த 473 மில்லியன் தொழிலாளர்களில் நாண்கில் மூள்று பங்குத் தொழிலாளர்கள் கிராமப்பற மக்களர்வார்கள்.

 

இந்தியாவில் வேலை செய்பவர்களில் ஆண்களே பெரும்பான்மையாக உள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள மொத்தத் தொழிலாளர் படையில் மூன்றில் ஒரு பங்கு பெண் தொழிலானர்கள் இருந்தாலும், நகரங்களில் 20 சதவிகிதப் பெண்கள் மட்டுமே பணிக்குப் பங்களிப்பவர்களாக இருக்கின்றனர். சமைப்பது, தண்ணீர் எடுப்பது, எரிபொருள் சேகரிப்பது ஆகியவற்றடன் பெண்கள் வயல்களிலும் வேலை செய்கிறார்கள். பணமாகவோ, உணவு தானியமாகவோ அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதில்லை; பலருக்குப் பலசந்தர்ப்பங்களில் பணம் தருவதில்லை. இந்தக் காரணங்களுக்காகப் பெண்களைத் தொழிலாளர் பிரிவில் சேர்ப்பதில்லை; பெண்களையும் தொழிலாளர்களாகவே கருதவேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

(a) தொழிலாளி யார்?

 

(b) மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

 

(c) இந்திய வேலை வாய்ப்பின் தன்மை யாது?

 

(d) எந்தப் பெண்களைத் தொழிலாளர்களாகக் கருதவில்லை?

 

(e) இந்திய மக்கள் தொகையில் தொழிலாளர்களின் விகிதம் யாது?

 

 

Q3. கீழ்க்காணும் பகுதியை அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவில் சுருக்கி, உங்கள் சொந்த நடையில் எழுதுக. தலைப்புத் தேவையில்லை. (60)

 

நாகரிகம், பண்பாடு ஆகிய இரண்டு சொற்களும் அதிகம் பயன்படுத்தக்கூடிய சொற்களாகத் திகழ்கின்றன. ஆனால் அவை மிகவும் குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்ட சொற்களாகவும் இருக்கின்றன. மணித சமுதாயம் நெருப்பைப் பற்றி அறியாத காலத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இன்று ஒவ்வொரு வீட்டிலும் சமைப்பதற்கு நெருப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். முதன் முதலில் நெருப்பைக் கண்டு பிடித்த மணிதன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளனாக இருந்திருக்க வேண்டும். மனிதர்களுக்கு ஊசி மற்றும் நூல் அறிமுகப்படுத்தப்படாத காலத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இரும்புத் துண்டிற்கு ஊசியின் வடிவம் கொடுத்த மனிதனும் ஒருசிறந்த கண்டுபிடிப்பாளனாக இருந்திருக்க வேண்டும்.

 

இந்த இரண்டு உதாரணங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். முதல் உதாரணத்தில் இரண்டு செய்திகள் உள்ளன : முதலாவதாக நெருப்பைக் கண்டுபிடித்த ஒரு குறிப்பிட்ட மணிதனின் சக்தி; இரண்டாவது நெருப்பின் கண்டுபிடிப்பு. அதுபோலவே இரண்டாவது உதாரணத்தில் ஊசி-நூல் ஆகியன உள்ளன. முதலில் ஊசி மற்றும் நூலைக் கண்டுபிடிக்கும் சக்தி உள்ளது. இரண்டாவதாக ஊசி மற்றும் நூலின். கண்டுபிடிப்பு உள்ளது. நெருப்பு மற்றும் ஊசி, நூல் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட நபரின் திறன், போக்கு அல்லது உத்வேகம் ஆகியன வற்றுடன் கலாச்சாரமும் உள்ளது. அவருடைய அழைக்கப்படுகிறது. கண்டுபிடிப்பே நாகரிகம் என்று

 

பண்பட்ட மனிதன் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பான்; ஆனால் அவனது வழியினர் அந்தக் கண்டுபிடிப்புகளைத் தங்கள் முன்னோர்களிடமிருந்து விருப்பமின்றிப் பெறுகின்றனர். புத்திசாலித்தனம் அல்லது விவேகத்தின்வழி யார் ஒருவர் சில புதிய உண்மைகளைப் பார்த்திருக்கிறாரோ அவர்தான் உண்மையான பண்பட்ட மனிதர். ஆனால் தன்னிச்சையாக மரபுரிமையாகப் பெற்ற அவரது வழியினர் தங்கள் முன்னோர்கள் வழி நாகரிகமானவர்களாக மாறலாம். ஆனால் கலாச்சாரம் என்று அதனை அழைக்க முடியாது. அதற்கு ஒரு நவீன உதாரணத்தை எடுத்துக் கொள்ளவாம். நியூட்டன் புவியீர்ப்புக் கொள்கையைக் கண்டுபிடித்தார். அவர் ஒரு பண்பட்ட மனிதராக இருந்தார். இன்று இயற்பியல் மாணவர் நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கையை நன்கு அறிந்திருக்கிறார். ஆனால் அதனுடன் நியூட்டனுக்குப் பழக்கமில்லாத பல செய்திகளைப் பற்றிய அறிவும் உள்ளது. இதையும் மீறி இன்றைய இயற்பியல் மாணவனை நியூட்டனை விட நாகரீகமானவன் என்று சொல்வலாம். ஆனால் நியூட்டனைப்போல் பண்பட்டவன் என்று சொல்ல முடியாது.

 

நெருப்புக் கண்டுபிடிப்புக்குப் பசி ஒரு உத்வேகமாக இருக்கலாம். ஊசி மற்றும் நூல் கண்டுபிடிப்பில், வெப்பம் மற்றும் குளிரில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், உடலை அலங்கரிக்கவும் ஒரு சிறப்பு வழி இருந்திருக்க வேண்டும். இப்போது வயிறு நிரம்பிய, உடலை மூடிய ஒரு மனிதனைக் கற்பனை செய்து பாருங்கள்; அவன் திறந்த வானத்தின் கீழ் படுத்து இரவில் மின்னும் நடச்த்திரங்களைப் பார்க்கும்போது, முத்துக்கள் நிரம்பிய இந்தத் தட்டு என்ன என்பதை அறியும் ஆர்வத்தால் மட்டுமே அவனால் தூங்க முடியாது. அவிற்றை நிரப்பி உடலை மூடும் ஆசை தாய்க் கலாச்சாரமல்ல. உண்மையில் பண்பட்ட மனிதனால் வயிறு நிரம்பினாலும் உடலை மூடியிருந்தாலும் சும்மா உட்கார முடியாது. நமது நாகரீகத்தின் பெரும் பகுதியை நாம் அத்தகைய பண்பட்ட மனிதர் களிடமிருந்து பெற்றுள்ளோம். அவர்களின் உணர்வு முதன்மையாக வெளிப்புற உடல் நிகழ்வுகளால் பாதிக்கப்படுகிறது; ஆனால் அதில் சில பகுதிகள் குறிப்பிட்ட உண்மைகளின் காரணங்களை எந்த உடல் உத்வேகத்துக்கும் அடிபணியாமல், இயற்கைக் கலாச்சாரத்தைப் புரிந்து கொண்டு வாழும் முனிவர்களிடமிருந்தும் நாம் பெற்றுள்ளோம். இரவில் நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டுத் தூங்காத முனிவர் இன்றைய அறிவின் முதல் வெளிப்பாடுகளில் ஒருவராவார்.

 

 

Q4. பின்வரும் பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதுக. (20)

 

காலம் விலை மதிப்பற்றது. உண்மையில் உலகில் காலம் மட்டுமே வரையறுக்கப்பட்டதாகும். செல்வத்தை இழந்தால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். வீட்டை இழந்தால் அதை மீண்டும் பெறலாம். ஆனால் நேரத்தை இழந்தால் அதனை மீண்டும் பெறமுடியாது.

 

நாம் வாழ்க்கையில் ஏதாவது செய்ய விரும்பினால், எதையாவது சாதிக்க விரும்பினால் நேரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்வது அவசியமாகும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நாம் அடைய விரும்பும் அனைத்தையும் அடைய முடியும்.

 

"நேரம் பணம்" என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் உண்மையானதல்ல. உண்மையில் நேரம் மட்டுமே சாத்தியமான செல்வமாகும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே செல்வத்தைச் சம்பாதிக்கவும் சேர்க்கவும் முடியும். மறுபுறம் நீங்கள் உங்கள் நேரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், நீங்கள் செல்வத்தைச் சேர்க்கும் - சம்பாதிக்கும் வாய்ப்பை இழக்கிறீர்கள்; நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருந்தால், நீங்கள் நேரத்தை வீணடிப்பதை நிறுத்தி விடுவீர்கள்; நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேடத் தொடங்குவீர்கள்; குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கான வழிகளைத் தேடத் தொடங்குவீர்கள். நீங்கள் உண்மையிலேயே நேரத்தை மேலாண்மை செய்ய விரும்பினால், உங்கள் நனவு மனத்தை மட்டுமல்ல நனவிலி மனத்தையும் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமே குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் வெற்றிபெறக்கூடிய புதிய வழிகளை உங்களுக்குச் சொல்லும்.

 

 

Q5. பின்வரும் பகுதியைத் தமிழில் மொழிபெயர்க்க. (20)

 

We cannot deny the importance of games in life as games make a person sound in body and mind. Society expects of a person to fulfil all his duties, for which it is important for him to keep healthy. He may be very intelligent, but his intelligence is of no use if he is not healthy. In some ways, the human body is like a machine. If it is not made use of, it starts to work badly. People who are not fit grow weak; they become more prone to disease. Any form of game is useful, if it gives the body an opportunity to take regular physical exercise. Playing encourages the spirit of sportsmanship. It enables one to deal with life's problems in a wise and natural manner. The important thing in playing is not the winning or the losing, but the participation. We have to remember some other things about playing games. First, it is the physical exercise that is important for health, not the games themselves, and there are other ways of getting this. Is not India the home of yoga? When we think of the phrase a healthy mind in a healthy body we should not forget that it is the mind which is mentioned first. And if we let games become the most important thing in our lives, then we undermine the importance of the mind.

 

 

Q6. (a) கீழ்க்காணும் சொற்களை உமது சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக : (2x5-10)

 

(i)கீழ்வானம்

(ii) செம்மை

(iii) ஏர்

(iv) மரம்

(v) கைமாறு

 

 

(b) பின்வரும் இணைச் சொற்களின் பொருள் வேறுபாடு புலப்படுமாறு ஏற்ற சொற்றொடர்களில் அமைத்து எழுதுக: (2x5=10)

 

(i) வளை வழை

(ii) தினை - திளை

(iii) வாழ் - வாள்

(iv) விளி - விழி

(v) புல் - புள்

 

 

(c) பிரித்து எழுதுக: (1 x5=5)

 

(i) அறப்போர்

(ii) மக்கட்பேறு

(iii) செவ்வானம்

(iv) கட்செவி

(v) எட்டெழுத்து

 

 

(d) எதிர்ச்சொற்கள் தருக : (1 x5=5)

 

(i) பகை

(ii) வேண்டும்

(iii) கேள்வி

(iv) நல்லது

(v) நேர்

 

 

(e) எதிர்மறை வாக்கியமாக மாற்றுக: (1 x5=5)

 

(i) அழுத குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும்

(ii) கற்றனைத்தூறும் அறிவு

(iii) மூங்கில் ஒரு மரம்

(iv) மாணவி தவறாமல் வகுப்புக்கு வருகிறாள்

(v) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

 

 

(f) பிழை நீக்கி எழுதுக : (1 x5=5)

 

(i) வெண்ணீர்க் குழியல்

(ii) கேழ்வி ஞானம்

(iii) சீறும் சிரப்பும்

(iv) திறைகடலோடித் திறவியம் தேடு

(v) அன்பிர்க்கும் உண்டோ அடைக்குந்தாள்

 

 

 

 

2022 UPSC MAINS PAPER A PREVIOUS YEAR TAMIL LANGUAGE QUESTION PAPER

 

 

Q1. பின்வருவனற்றுள் ஏதேனும் ஒன்று குறித்து 600 சொற்களில் கட்டுரை வரைக. (100)

 

(a) புதுப்பிக்கும் ஆற்றல் : வாய்ப்புகளும் சவால்களும்

(b) தகவல் தொடர்புப்புரட்சியின் சிறப்புகள்

(c) விளையாட்டுத்துறையில் வணிகமயமாதலின் பெருக்கம்

(d) உடல்நலத்தில் உணவுப்பழக்கத்தின் விளைவு

 

 

Q2. பின்வரும் பகுதியைக் கவனமாகப் படித்து, அதன் இறுதியில் தரப்பட்டுள்ள வினாக்களுக்குத் தெளிவாகவும் சரியாகவும் சுருக்கமாகவும் விடை எழுதுக. (12x5=60)

 

மிகப்பெரும் அளவிலான தரவுத்தகவல்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு காலனிய ஆட்சி இருந்தது. தங்களின் வணிக உறவுகளை வரன்முறைப் படுத்துவதற்காக வணிகச்செயல்பாடுகள் பற்றிய விரிவான தகவல் பதிவுகளை ஆங்கிலேயர் வைத்திருந்தார்கள். அவர்கள் வளரும் நகரங்களின் வாழ்வியல் படிநிலைகளை, திசைப்போக்குகளைப் பிடியில் வைத்திருக்க வழக்கமான புள்ளி விவர அளவீடு, புள்ளி விவரத்தொகுப்பு மற்றும் பல்வேறு அலுவலக அறிக்கைகளைப் பிரசுரித்தார்கள்.

 

காலனிய அரசு தொடக்க ஆட்சியாண்டிலிருந்து புவியியல் வரைபடங்களை உருவாக்குவதில் கவனமாக இருந்தது. அந்தஅரசு சரியான வரைபடங்கள் என்பது நில எல்லைகளையும், நில அமைப்பையும் புரிந்துகொள்ளத் தேவையானவை என்று நம்பியது. இந்த அறிவு பல்வேறு பகுதிகளைச் சிறப்பாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியது. நகரங்கள் வளரத் தொடங்கிய போது, நகரங்களின் வளர்ச்சியைத் திட்ட மிடுவதற்கு மட்டுமன்றி, வணிகவளர்ச்சிக்கும் ஒருங்கிணைந்த நிர்வாக அதிகாரத்திற்கும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. நகர வரைபடங்கள் மலைகளின் இருப்பிடங்கனையும், ஆறுகளையும், வனங்களையும் நமக்குத்தெரிவிக்கின்றன. இந்த வரைப்படங்கள் இராணுவப் பயன்பாட்டிற்குத் திட்டவரையறை செய்ய மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. மற்றொருபுறம், அந்த வரைபடங்கள் மலைத்தொடர்களின் இடங்கள், வீடுகளின் நெருக்கம் மற்றும் தரம், சாலைகளின் நிலை ஆகியவற்றைக் காட்டுகின்றன. அவை வணிக வாய்ப்புகளை அளவிடவும், வரி விதிப்புகளைத் திட்டமிடவும் பயன்படுகின்றன.

 

ஆங்கிலேயர் 191 நூற்றாண்டின் பிற்பகுதியில் வரன்முறைப்படுத்தப்பட்ட ஆண்டு வரிவிதிப்பின் மூலம் நகரங்களை நிர்வகிக்க, நிதியை உயர்த்த முயன்றனர். முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற இந்தியப் பிரதிநிதிகளிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்தனர். மக்கள் பிரதிநிதித்துவப் பங்களிப்புடன் நகராட்சி போன்ற நிறுவனங்களில் தேவையான நீர் வழங்குதல் சாக்கடை அமைத்தல், சாலை அமைத்தல், பொதுமக்கள் உடல் நலம் முதலான சேவைகளை ஆங்கிலேயர் செய்தார்கள். நகராட்சிப் பதிவேட்டு அறைகளில் புதிய வகையான பதிவுகள் நகராட்சி நிர்வாகச் செயல்பாடுகளைப்பற்றி உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன.

 

நகரங்களின் வளர்ச்சி கணக்கீடுகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் நடுவில் பல உள்ளுர் புள்ளிவிவரக் கணக்கெடுப்புகள் வேறுபட்ட ஆட்சிப்பகுதிளில் நிகழ்த்தப்பட்டன. இந்திய அளவிலான முதல் கணக்கெடுப்பு 1872-இல் முயற்சிக்கப்பட்டது. அதன்பிறகு 1881 முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறையிலான கணக்கெடுப்பு தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. இந்தக் கணக்கெடுப்புத் தரவுகள் இந்தியாவில் நகரமயமாதலை ஆராய்வதற்கு மதிப்பிட முடியாத மூலங்களாக இருக்கின்றன.

 

அந்தப் பதிவேடுகளைப் பார்க்கும்போது, வரலாற்று மாறுதல்களை அளவிடுவதற்கு மிகக்கடுமையான தரவுகளாக அவை நமக்குத் தோன்றுகின்றன. நோய், இறப்புகுறித்த அட்டவணைகள், வயது, பாலினம், சாதி, தொழில் குறித்த மக்களின் புள்ளி விவரப் பதிவுகள் முடிவில்லாப் பக்கங்களாக உள்ளன. அவை மிகப் பெரும் எண்ணிக்கையிலான தரவுகளைத் தந்து உண்மைத் தகவலின் மீது மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன. எப்படியிருந்த போதிலும் வரலாற்றாளர் மிகப்பெரும் எண்ணிக்கையிலான தரவுகள் தவறாக வழிநடத்தக்கூடும் என்று அறிவார்கள். மிகப்பெரும் எண்ணிக்கையிலான தரவுகளை நாம் பயன்படுத்தும் முன்பு அந்தத் தரவுகளைத் தொகுத்தவர்கள் யாரென்றும், அது ஏன் என்றும், எப்படித் தொகுத்தார்கள் என்றும் புரிந்து கொள்வது தேவையாகும். என்ன அளவிடப் பெற்றது என்றும், என்ன அளவிடப் பெறவில்லை என்றும் நாம் மேலும் தெரிந்துகொள்வது தேவையானது.

 

(a) காலனி ஆட்சியை நடத்துவதில் தரவுகளின் முக்கியத்துவம் என்னவாக இருந்தது ?

 

(b) காலனி ஆட்சியாளர்களுக்கு வரைபடங்கள் முக்கியமாக இருந்தது ஏன் ?

 

(c) காலனியப் பதிவேடுகள் வழி நகரமயமாதல் எப்படி ஆராயப் படவேண்டும் ?

 

(d) தரவுகள் எப்போதும் கபடமற்றவையாக இல்லை என்று வரலாற்றாளர்கள் ஏன் நம்புகிறார்கள்?

 

(e) காலனி ஆட்சியாளர்களின் வரிக்கொள்கை என்னவாக இருந்தது ?

 

 

Q3. கீழ்க்காணும் பகுதியை அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவில் சுருக்கி, உங்கள் சொந்த நடையில் எழுதுக. தலைப்புத் தேவையில்லை. (60)

 

'வளர்ச்சி' என்ற சொல் குறிப்பிட்ட சமூகத்தின் நிலையை விளக்கவும், மாறுதல் முறைகளை மக்கள் அனுபவித்ததை விளக்கவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித சமூகங்களுக்கும். அவற்றின் உயிரியல், இயற்பியல் சூழல்களுக்கும் இடையிலான ஊடாட்டஉறவு சமூகங்களின் நிலையை மனித வரலாற்றின் நீண்ட காலத்தில் பெரும்பாலும் தீர்மானிக்கிறது. மனித இனத்திற்கும் அதன் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான ஊடாட்ட உறவுமுறை சமூகத்தால் வளர்க்கப் பட்ட தொழில் நுட்பங்கள் மற்றும் நிறுவனங்களின் அளவைச் சார்ந்திருக்கிறது. அதே நேரத்தில், தொழில்துட்பம் மற்றும் நிறுவனங்கள் மனிதனுக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான படிநிலை வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்தத் தூண்டுதல் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கவும், முடுக்கிவிடவும் நிறுவனங்களின் உருவாக்கத்திற்கும் மாற்றத்திற்கும் உதவுகிறது. இதனால் வளர்ச்சி என்பது, பொருளாதாரம், சமூகம், சுற்றுச் சூழல் முதலானவற்றின் நேர்மறையான மற்றும் மாற்ற இயலாத பல பரிமாணங்களிலான கருத்தியலாகவும் இருக்கிறது.

 

வளர்ச்சி என்ற கருத்தியல் 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் செயலிலும், பரிணமித்தலிலும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் வளர்ச்சி என்ற கருத்தியல் பொருளாதார வளர்ச்சி என்ற ஒரே பொருண்மையில் இருந்தது. அந்தப் பொருளாதார வளர்ச்சி என்பது, பொருளியல் வளர்ச்சியில் மொத்த தேசிய உற்பத்தியில் தனிநபர் வருமானமாகவும், தனிநபர் நுகர்வாகவும் இருக்கிறது. ஆனால் உயர் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருந்த போதிலும் மிகுந்த வறுமையை நாடுகள் அனுபவித்தன. சமமற்ற பகிர்வின் காரணமாக இது நிகழ்ந்தது. எனவே, 1970களில் 'மறுபகிர்வுடன் வளர்ச்சி' 'வளர்ச்சி மற்றும் நேர்மை' என்பன போன்ற தொடர்கள் வளர்ச்சி என்பதன் வரையறையில் இணைக்கப்பட்டன. 'மறுபகிர்வு மற்றும் நேர்மை' என்பதோடு தொடர்புடைய வினாக்களைப் பயன் படுத்தும்போது, வளர்ச்சி பற்றிய கருத்தியல் பொருளாதார அடுக்குகளை மட்டும் குறிப்பதில்லை. அது நலவாழ்வு மேம்பாடு, மக்களின் வாழ்வியல் தரம், உடல்நலம், கல்வி, வாய்ப்புகளில் சமத்துவம், அரசியல் உரிமை, குடி உரிமை முதலானவற்றின் சிக்கல்களை உள்ளடக்கியது. 1980களில் வளர்ச்சி என்பது, சமூகத்தில் அனைவருக்குமான சமூக, பொருளியல், நல்வாழ்வு பரவுவதை உள்ளடக்கமாகக் கொண்டு பரிணமித்தது.

 

மேற்கத்திய உலகில் 1960- இன் நிலைபேறான வளர்ச்சி பற்றிய எழுச்சியாக, பிற்பகுதியில் கருத்தியல் ஒரு பொது சுற்றுச்சூழல் குறித்த சிக்கல்களில் விழிப்புணர்வாகப் பரிணமித்தது. இது சுற்றுச்சூழலின் மீது தொழில் துறையின் வளர்ச்சி விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியது குறித்த மக்கள் கருத்துகளைப் பிரதிபலித்தது.

 

உலக சமுதாயத்தின் சுற்றுச்சூழல் அக்கறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, ஐக்கிய நாட்டு அவை நார்வே பிரதமர் குரோ ஹார்லெம் புருண்ட்லேண்ட் தலைமையில், உலகச்சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆணையத்தைத் (உ.சு.வ.ஆ.) தோற்றுவித்தது. அந்த ஆணையம் 'நமது பொது எதிர்காலம்' என்ற தலைப்பிலான அறிக்கையை 1987-இல் அளித்தது. அது 'புருண்ட்லேண்ட் அறிக்கை' என்றும் அழைக்கப் படுகிறது. உ.சு.வ.ஆ. எளிய வெளிப்படையான பெருவாரியாகப் பயன்படுத்துகின்ற வரையறையைத் தந்துள்ளது. இந்த அறிக்கை நிலைபேறான வளர்ச்சி என்பது. "எதிர்காலத் தலைமுறை தமது சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைக் கருத்தில் கொள்ளாமல் சமகாலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது" என்று கருதப்படுவதாக வரையறுக்கிறது. (292 சொற்கள்)

 

 

Q4. பின்வரும் பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதுக. (20)

 

பிரேம்சந்த், கதைகள் நம்மைச் சுற்றிச் சிதறிக் கிடக்கின்றன என்று சொல்கிறார். அக்கதைகளைக் கைப்பற்றுவது கேள்வியாக இருக்கிறது. அது அவ்வாறு இருப்பதற்கான காரணம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொன்றும் தனக்கான வாழ்வியலைப் பெற்றிருப்பதும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டிருப்பதும் ஆகும். அது ஒவ்வொன்றும் தொடக்கம், வளர்ச்சி பிறகு முடிவுகளையும் பெற்றிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு அல்லது மற்ற கதைகளைக் கொண்டிருக்கின்றனர். ஒரு மனிதன் சரியான ஒற்றுமையைப் பிறருடன் கொண்டிருக்க முடியாது. ஒருவரின் வாழ்வியல் கதை மற்ற எவருடனும் பொருந்திப் போகாது.

 

தன் சொந்தக் கதையை எழுத முடியாதவர் என்று எந்த ஒருவரும் இல்லை. என் சுயவரலாறு என் வாழ்வின் கதையாகும். இந்தக் கதை என்னோடு மட்டும் தொடர்புடையது, என் வாழ்வு விரிந்து மற்றவர்களின் வாழ்வியலைத் தொடுகிறது. அது அவர்களின் கதையாகச் சிறப்பாக இருக்கிறது. என் வாழ்வின்விரிவாக்கம் என்பது என் காலத்தின், சமூகத்தின், குழுக்களின் பிரதிநிதித்துவமாக இருக்கிறது. அது அவைகளின் விரிவாக்கமாக உள்ளது. கதையாக எழுத எல்லா மனிதர்களின் வாழ்வு போதுமானது.

 

நீ ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு ஒரு துண்டுத்தாளின் மீது எதையாவது எழுதத்தொடங்கு. தன் வாழ்விலிருந்து ஒருவர் எழுதத் தொடங்குவது மிகச் சிறப்பானதாக இருக்கிறது. சிறுவயதிலிருந்து நிகழ்ந்த ஒவ்வொன்றிற்கும் சென்று, தகுதியானவற்றைக் குலுக்கி எடுத்து எழுது. சுயவரலாறு எதுவோ, அது இதுவாக இருக்கிறது சுயவரலாற்றின் முதல் நிபந்தனை ஒவ்வொன்றையும் உண்மையாகவும் கூறுவதாகும்.

 

இது மேலும் பயிற்சியைத் தேவையாகக் கொண்டது; அறவியல் ஊக்கத்தைக் தேவையாகக் கொண்டது. முழு சுய வரலாறாக இல்லை என்றாலும் குறைந்தது நினைவுக்குறிப்புகள் அல்லது நாட்குறிப்புகள் எழுதப்படலாம். பல நாட்களுக்கான மற்றும் ஆண்டுகளுக்கான நாட்குறிப்புச் சுய உருவாக்கும்.

 

 

Q5. பின்வரும் பகுதியைத் தமிழில் மொழிபெயர்க்க. (20)

 

Socrates was one of the celebrated Greek thinkers who became very influential in the development of Greek philosophy in particular and Western philosophy in general.

 

Socrates tried to bring radical changes in the society. But his attempts in the social field were not accepted and appreciated by the authorities. But convinced of his principles Socrates continued his efforts. The authorities considered him as a threat to their existence and as a result he was arrested and sent to prison. Later, he was given capital punishment because he was frank and outspoken. When he received the news of the death penalty he was not at all shaken.

 

It confused all the officials and even Socrates' own disciples because they had never seen a person accepting the news of his death penalty with a smiling face. When asked why so, he replied, "I have been preparing for death all my life. I have never done anything wrong to any man. That is why I am able to accept even death with a smiling face."

 

In his use of critical reasoning, by his unwavering commitment to truth and through the vivid example of his own life, Socrates set the standard for all subsequent Western philosophy.

 

 

Q6. (a) கீழ்க்காணும் சொற்களை உமது சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக: (2x5=10)

 

(i) கருக்கல்

(ii) வரையறை

(iii) அள்ளிவீசு

(iv) சீர்

(v) மறம்

 

 

(b) பின்வரும் இணைச் சொற்களின் பொருள் வேறுபாடு புலப்படுமாறு ஏற்ற சொற்றொடர்களில் அமைத்து எழுதுக: (2x5=10)

 

(i) பொருப்பு பொறுப்பு

(ii) பனி - பணி

(iii) கழை களை

(iv) கலம் - களம்

(v) குரை - குறை

 

 

(c) பிரித்து எழுதுக: (1x5=5)

 

(i) அரவணைப்பு

(ii) கற்றூண்

(iii) மட்பாண்டம்

(iv) மரவேர்

(v) தூரத்துச் சொந்தம்

 

 

(d) எதிர்ச்சொற்கள் தருக: (1x5=5)

 

(i) கடினம்

(ii) இன்பம்

(iii) தோற்றம்

(iv) நட்பு

(v) இணைப்பு

 

 

(e) எதிர்மறை வாக்கியமாக மாற்றுக: (1x5=5)

 

(i) கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைக்கும்.

(ii) தொல்காப்பியம் முதலில் எழுதப்பட்டது.

(iii) கரும்பை எல்லாரும் விரும்பி உண்பர்.

(iv) வாழை ஒரு செடி.

(v) மாணவன் பள்ளிக்கு ஒழுங்காக வருகிறான்.

 

 

(f) பிழை நீக்கி எழுதுக: (1x5=5)

 

(i) கோபாலன் பத்து மாடு வாங்கினான்.

(ii) கரம் சிரம் புரம் நீட்டாதீர்.

(iii) சிறுவன் பள்ளிக்கு சென்றான்.

(iv) கடவுள் தூண் இருக்கிறார்.

(v) அப்பா வந்தது.

 

 

 

2021 UPSC MAINS PAPER A PREVIOUS YEAR TAMIL LANGUAGE QUESTION PAPER

 

Q1. பின்வருவனற்றுள் ஏதேனும் ஒன்று குறித்து 600 சொற்களில் கட்டுரை வரைக. (100m)

 

(a) குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்சினைகள்

(b) உலக அமைதிக்கான சவால்கள்

(c) தாய் மொழியும் தொடக்கக் கல்வியும்

(d) வாடகைத் தாய்க்கான சமூக அங்கீகாரம்

 

 

Q2. பின்வரும் பகுதியைக் கவனமாகப் படித்து, அதன் இறுதியில் தரப்பட்டுள்ள வினாக்களுக்குத் தெளிவாகவும் சரியாகவும் விடை எழுதுக: (12x5=60)

 

பண்டைய இந்தியாவில் முடியாட்சி மிகவும் செல்வாக்குச் செலுத்தியது. அரசன் அரசின் ஆன்மா என்று அழைக்கப்பட்டான். பண்டைய மதக் குறிப்புகளின் படியும் பழங்கால மத நூல்களின் படியும் அரசன் சமூகத்தின் தெய்வீகப் பிரதிநிதியாக இருக்கிறான். அரசனிடமிருந்து பொருள் உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதால் மக்கள் தங்களின் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை நிலையிலிருந்து விடுபட முடிகிறது. அரசன் இல்லாத வாழ்க்கை, துயரம் நிறைந்தது என்பதைப் பண்டைய இந்திய அறிஞர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளனர். அரசன் அல்லது அரசின் தோற்றம் பற்றிய அறிஞர்களின் கருத்துகள் தெய்வீகக் கொள்கை, அதிகாரக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, சமூக ஒப்பந்தக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

 

கௌடில்யர் மாநிலங்களை அரசின் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் அன்றாடப் பணிகளையும் நலத்தையும் பேணும் நிறுவனமாகக் கருதினார். அரசனின் தோற்றம் பற்றி அவர் மேடையமைத்து விவாதித்து ஆய்வு செய்யவில்லை. ஆனால் அவர் தமது அர்த்தசாஸ்திரத்தில் பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்குவதைப் போலவே பண்டைய வலிமையான கொடுங்கோன்மை காலங்களில் பலவீனமானவர்களைத் துன்புறுத்தியது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் இந்த வகையான அநீதியால் சித்திரவதை செய்யப்பட்டனர். மத்ஸ்ய நியசயா, அதாவது மீன் சட்டம் அல்லது வேறு வார்த்தைகளில் சொன்னால் காடு குறித்த சட்டத்தை ஏற்படுத்தினர். சித்திரவதை செய்யப்பட்ட மக்கள் கூட்டாக ஒரு திறமையான ஒருவனை அரசனாக ஏற்றனர்; அரச நிர்வாகத்திற்காக அவர்கள் தங்கள் விவசாய விளைச்சலில் ஆறில் ஒரு பங்கையும் மற்றும் வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியையும் அரசனுக்குக் கொடுக்க முடிவு செய்தனர்; அரசன் குடிமக்களின் நலன்களைப் பேணும் பொறுப்பினை ஏற்றான்.

 

தான் ஏற்படுத்திய விதிகளை ஏற்காதவர்களை அரசன் தண்டித்தான். அரசனுக்குக் கீழ்ப்படியாதது அல்லது அவனை அவமதிப்பது தடை செய்யப்பட்டிருந்ததாகக் கௌடில்யர் குறிப்பிடுகிறார். அரசன் தன் குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சமுதாயத்தில் மக்கள் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்தே வைத்திருக்கலாம்; பெண்கள் நிறைய நகைகளை அணிந்து கொண்டு தனியாக வெளியில் செல்லலாம்; அரசனின் ஆட்சி மனிதநேய ஆட்சியாகவும் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் ஆட்சியாகவும் இருந்தால் அத்தகைய அரசும் நாடும் எல்லா வகையிலும் செழிப்படையும். இந்த நியதி பண்டைய நூல்களைப் போலவே கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசனின் செல்வாக்கு நிரந்தரமானதல்ல; அவனுடைய அதிகாரங்களும் கட்டுப்பாடற்றவையல்ல. ஆனால் வேத காலத்திற்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் நிலப்பரப்பு அதிகரிக்க அதிகரிக்க அரசனின் அதிகாரங்களும் மதிப்புகளும் அதிகரித்தன; சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு மாறாக அரசனின் பாதுகாப்பு அதிகக் கவனம் பெற்றது. அரசனின் தகுதிக்கேற்ப அவனின் பொலிவும் கம்பீரமும் தோற்றமும் மாற்றம் பெற்றன. அவை அரசனுக்குரிய மரியாதையாகக் கருதப்பட்டன. இந்த உண்மையைப் பற்றிய விரிவான விளக்கம் சுக்கிர நீதியில் உள்ளது.

 

(a) அரசன் மற்றும் நாடு பற்றிய பழங்கருத்துகளைப் பதிவு செய்க. (12)

 

(b) ஏன் 'மீன் சட்டம்' அநீதியானது எனப்படுகிறது? (12)

 

(c) அரசனுக்கும் குடிமக்களுக்குமிடையேயான உறவின் அடிப்படை யாது? (12)

 

(d) மனித நேயத்தின் ஆட்சி என்றால் என்ன?  (12)

 

(e) வேதகாலத்திற்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை? (12)

 

 

Q3. கீழ்க்காணும் பகுதியை அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவில் சுருக்கி, உங்கள் சொந்த நடையில் எழுதுக. தலைப்புத் தேவையில்லை: (60)

 

இராஜா ராம் மோகன் ராயின் நடவடிக்கைகளுக்கு எதிராக இருந்த இந்திய வர்த்தகர்கள் 'பிரம்ம சமாஜத்தின்' செல்வாக்கை அகற்றுவதற்காக, கி.பி. 1830 இல் 'தர்ம சமாஜம்' எனும் சங்கத்தை நிறுவினர். இதற்கிடையில் ஹென்றி டெரிசியோ இந்துக் கல்லூரியில் நவீனச் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அகடெமிக் அசோசியேஷன் இன் லாங்குஎஜ் நிறுவினார். இந்தச் சங்கம் நலிந்த மரபுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து வந்த பிற சங்கங்களை விட வலுவாக இருந்தது; இந்தச் சங்கமே இளம் வங்காளத்தை நிறுவியது. இந்துக் கல்லூரி ஊழியர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் இந்தச் சங்கத்தைச் சிதைத்தது. இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் பின்னர் 'பிரம்ம சமாஜத்தில்' சேர்ந்தனர். இராஜா ராம் மோகன் ராயின் மரணத்திற்குப் பிறகு, இந்தச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வங்காள வர்த்தகரான துவாரகநாத் தாகூரின் கைகளுக்குச் சென்றது. 19ஆம் நூற்றாண்டின் நான்காவது மற்றும் ஐந்தாவது பத்தாண்டுகளில் அறிவைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்ட இது போன்ற சமூக அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. 1851 இல் பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன் என்ற தேசியவாத அரசியல் அமைப்பு நிறுவப்பட்டது.

 

பம்பாயிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நாட்டின் இந்தப் பகுதியில் பணக்கார மற்றும் மரியாதைக்குரிய பார்சிகள் அத்தகைய இயக்கங்களின் தலைமையை ஏற்றனர். இந்தப் பார்சிகள் காலனித்துவ ஆட்சியை ஆதரித்தனர். அவர்கள் வளர்ந்து வரும் இளம் மராட்டிய அறிவு ஜீவிகள்; ஐரோப்பியப் பாரம்பரியத்தில் இயங்கும் எலிபின்ஸ்டன் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள். ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் நிர்வாகத்தில் இந்தியர்களின் பங்கேற்பை ஆதரித்த ஆங்கில மராத்தி 'பாம்பே மிரர்' நிறுவனத்தை நிறுவிய பால்சாஸ்திரி ஜம்பேகர் முக்கியமான அறிவாளிகளில் ஒருவர். அவர் வரிகளை விதிக்கும் காலனித்துவக் கொள்கையை விமர்சித்தார். மற்றொரு அறிவு ஜீவியான ராம் கிருஷ்ணா விஸ்வநாத் மராட்டிய மொழியில் இந்திய வரலாற்றைப் பற்றிய நூலொன்றினை எழுதினார். அதில் அவர் பிரிட்டிஷ் கொள்கைகளை விமர்சித்தார். ஆனால் ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்தால் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய முடியும் என்றும் அவர் நினைத்தார். புனேயிலிருந்து வெளியிடப்பட்ட 'பிரபாகர்' இதழில் தமது கட்டுரைகளை எழுதி வந்த மற்றொரு அறிவு ஜீவியான கோபால் ஹரி தேஸ்முக் இந்தியா சுதந்திரம் இழந்தமைக்கான காரணத்தை ஆய்வு செய்தார். நிலப்பிரபுத்துவப் பாரம்பரியமும் இந்திய உயரடுக்கினருக்கும் சாமானிய மக்களுக்குமிடையிலான இடைவெளியும் இந்தியா சுதந்திரம் இழந்தமைக்கான இரண்டு முக்கியமான காரணங்களாக அவர் கருதினார்.

 

1852 இல் நிறுவப்பட்ட பம்பாய் சங்கத்தின் உறுப்பினர்களிடையே ஒரு பெரிய கருத்து வேறுபாடு எற்பட்டது. அப்போது ஆங்கிலேயர்கள் அனுபவித்த அதே உரிமைகளை இந்தியர்களும் அனுபவிக்க வேண்டும் எனக் கோரினர். இதன் விளைவாக உயர் வகுப்பைச் சேர்ந்த மிதமான வணிகர்கள் பம்பாய் சங்கத்திலிருந்து விலகினர். ஜமீன்தார்களால் சுரண்டப்படும் இந்திய விவசாயிகள் பிரச்சினையை சென்னைச் சங்கம் மட்டுமே எழுப்பியது. அந்த நேரத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாசனம் மறுஆய்வு செய்யப்பட்டது; எனவே இந்த மூன்று சங்கங்களும் இலண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியால் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் புகார் மனுக்களை அளித்தன.

 

 

Q4. பின்வரும் பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுக: (20)

 

ஒவ்வொரு நாட்டின் வரலாறும் அந்நாட்டின் புலியியல் சூழலால் பாதிக்கப்படுகிறது. இந்திய நாகரீகம் தொடக்க காலத்திலிருந்து சுதந்திரமாக வளர்ந்து வருகிறது. வடக்கேயுள்ள மலைகளாலாலும் தெற்கேயுள்ள பெருங்கடல்களாலுமுள்ள ஆபத்தான தடைகள் காரணமாக இந்தியா பெரும்பாலும் உலகின் பிற பகுதிகளிலிருந்து பிரிந்துள்ளது. இத்தகைய இயற்கை அரண்களால் இந்தியாவில் பிறநாட்டுத் தாக்கம் அதிகம் இல்லை. 1600 மைல் நீளமும் மேற்கிலிருந்து 50 மேல் அகலமும் கொண்ட இமயமலை மேற்கிலிருந்து கிழக்காக ஒரு சுவரை உருவாக்கியுள்ளது. கிழக்கில் உள்ள பட்கோய், நாகா, லுஷாய் ஆகிய மலைகளும் அவற்றை சுற்றியுள்ள அடர்ந்த காடுகளும் தகவல் தொடர்புக்குத் தடையாக உள்ளன. மேற்குப் பகுதியிலுள்ள ஹைபர், போலன் கணவாய்கள் வழியாக வெளிநாட்டினர் வருவார்கள். பல நூற்றாண்டுகளாக இந்தியாவுடனான தொடர்புக்குத் தெற்குப் பகுதியிலுள்ள கடல் பெருந்தடையாக இருந்தது. பிற்காலத்தில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் விளைவாக அக்கடல் கடல் வாணிகத்திற்கான எளிய பாதையாக மாறியது. பொ.ஆ. 1498 இல் வாஸ்கோடகாமாவின் தலைமையில் போர்ச்சுக்கீசியர்கள் முதன் முறையாகக் கடல் வழியாக இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் இந்தியா மீது தங்கள் இறையாண்மையை நிலைநாட்ட நீண்ட காலமாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். எனினும் இந்தியாவின் புவியியல் அமைப்பால் இந்திய நாகரிகத்தின் மீது வெளிநாட்டுச் செல்வாக்கு ஏற்படவில்லை.

 

Q5. பின்வரும் பகுதியைத் தமிழில் மொழிபெயர்க்க : (20)

 

At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, when we step out from the old to the new. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to the service of India. The service of India means the service of the millions who suffer. It means the ending of poverty and ignorance. It means the ending of disease and inequality of opportunity. The ambition of the greatest man of our generation has been to wipe every tear from every eye. That may be beyond us, but as long as there are tears and suffering, so long our work will not be over. This is no time for petty and destructive criticism, no time for ill-will or blaming others. We have to build the noble mansion of free India where all her children may dwell.

 

It is a fateful moment for us in India, for all Asia and for the world. A new star rises, the star of freedom in the East, a new hope comes into being. May the star never set and that hope never be betrayed !

 

 

Q6. (a) கீழ்க்காணும் சொற்களை உமது சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக: (2x5=10)

 

(i) முயற்சி

(ii) அழுகை

(iii) அருவி

(iv) அரவு

v) கானல்நீர்

 

 

(b) பின்வரும் இணைகளின் பொருள் வேறுபாடு புலப்படுமாறு ஏற்ற சொற்றொடர்களில் அமைத்து எழுதுக: (2x5=10)

 

(i) தினை - திணை

(ii) சுரா சுறா

(iii) ஏரி - ஏநி

(iv) விலை -விழை

(v) விழி - விளி

 

 

(c) பிரித்தெழுதுக: (1x5=5)

 

(i) குறுங்காவியம்

(ii) வெண்மதி

(iii) பைங்கிளி

(iv) செங்கோல்

(v) நெடுநீர்

 

 

(d) எதிர்ச்சொற்கள் தருக : (1x5=5)

 

(i) வெற்றி

(ii) ஆக்கம்

(iii) பகல்

(iv) இரத்தல்

(v) அகம்

 

 

(e) எதிர்மறை வாக்கியமாக மாற்றுக: (1x5=5)

 

(i) அனுமன் சீதையை இலங்கையில் கண்டனன்.

(ii) மாதவி இந்திர விழாவில் கொடிக் கூத்து ஆடினாள்.

(iii) வானின்று நெருப்பு மழை பொழிவதுண்டு.

(iv) அவன் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவான்.

(v) மாணவர்கள் பள்ளிக்குக் கட்டாயம் வர வேண்டும்.

 

 

(f) பிழை நிக்கி எழுதுக: (1x5=5)

 

(i) பள்ளி வளாகத்தில் பறவை பறந்தன.

 (ii) ஆனி மாதம் மலைப் பெய்தது.

 (iii) ஆசிரியர் பணி என்பது ஓர் அரப்பணி ஆகும்.

 (iv) புரவழிச் சாலைத் தொடக்கம்.

 (v) மாதவி நடனம் பயின்றால்.

 

 

 

 

2020 UPSC MAINS PAPER A PREVIOUS YEAR TAMIL LANGUAGE QUESTION PAPER

 

Q1. பின்வருவனற்றுள் ஏதேனும் ஒன்று குறித்து 600 சொற்களில் கட்டுரை வரைக. (100)

 

(a) இந்தியாவில் ஆரோக்கியப் பாதுகாப்பு முறைகள்

(b) இந்திய விவசாயச் சட்டவிதி (2020) முறைகளின் முக்கியத்துவப் பயன்பாடுகள்

(c) தேசியக் கல்விக்கொள்கை எதிர்நோக்கும் சவால்கள் (NEP) 2020

(d) தற்காலச் சூழலில் செயற்கை அறிவூட்டல் முறையின் பயன்கள்

 

 

Q2. பின்வரும் பகுதியைக் கவனமாகப் படித்து, அதன் இறுதியில் தரப்பட்டுள்ள வினாக்களுக்குத் தெளிவாகவும் சரியாகவும் சுருக்கமாகவும் விடை எழுதுக. (12x5-60)

 

வாழ்க்கையும் சுற்றுச்சூழலும் இரண்டறக் கலந்துள்ளமையைத் தெளியலாம், குறிப்பாகச் சொன்னால் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் சுற்றுச்சூழலைச் சார்ந்தேக் காணப்படுகின்றன எனலாம். நம் மனம், உடல், எண்ணங்கள், பலம், செயலாற்றல், நற்குணப்பண்புகள் யாவும் சுற்றுச்சூழலால் உருவாக்கப்பட்டும் காக்கப்பட்டும் ஆக்கம் பெற்றுள்ளன. உண்மையில், வாழ்க்கை, சுற்றுச்சூழல் இவை யாவும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையன மட்டுமின்றி தேவையும் பயனும் உடையதாகவும் உள்ளன.

 

சுற்றுச்சூழல் என்பது, இயற்கை நமக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு மனிதகுல அரணாகவும் வாழ்க்கையை வளப்படுத்துவதற்கு நன்மையாகவும் அமைகின்றது.

 

சுற்றுச்சூழலின் மூலமே இயற்கையிலிருந்து தான் அமைகின்றது. இயற்கை பல்வேறு வகையான தனித்த இயல்புகள் வாய்க்கப் பெற்ஷீதாகும். நிலம், காடுகள், மலைகள், ஆறுகள், நீர் உறைவிடங்கள், பாலைவனங்கள், திறந்த நிலவெளிகள், பள்ளத்தாக்குகள், பலவிதமான அழகான மிருகங்கள், பறவைகள் இவற்றின் கூட்டங்களும் உள்ள, இயற்கையின் சூழலில் ஆறுகளிலும், நீர் உறைவிடங்களிலும் நன்னீர் நிறைந்தும், குளிர் நிறைந்த பகுதிகளில், மேகக் கூட்டங்கள் என அனைத்தும் சுற்றுச்சூழலின் பகுதியாகின்றன. இயற்கையின் பலவிதத்திலுள்ள இத்தகு அமைப்பு மனித வாழ்க்கைக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்ல சிறந்த கொடையாகும். ஆயின் இத்தகு இயற்கையான சுற்றுச்சூழலுக்கு இடையூறுகள் பலவும் விரைவாக ஏற்பட்டுள்ளன. இயற்கையின் வரமான சுற்றுச்சூழல் மனித இனத்தவரால் கண்மூடித்தனமாகவும் எவராலும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் சுற்றுச்சூழலின் முழுமைத் தொகுதியும் சுற்றுச்சூழலின் அமைவும் பாதிப்படைகின்றன. சமநிலை இன்மையும் ஏற்படக் காணலாம். குறிப்பாகத் துருவப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக உறைந்து காணப்பட்ட பனிக்கட்டிகள் உருகும் தன்மையால் அழிவைத்தரவல்ல கடலலைகளால் நகரங்கள் அழிவு எய்தும், மலைகள், காடுகள், மிருகங்கள், சிற்றுயிர்கள் யாவும் அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் அதன் முடிவு நிலையற்ற தன்மையும் நம் மன எண்ணங்களும் செயற்பாடுகளும் குற்றம் நிறைந்ததாகிவிடும் என்பது திண்ணம். இத்தகு சமநிலையற்ற தன்மையால் நிலம், நீர், காற்று மாசடைவதுடன் ஒலி மாசும் ஏற்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவதால் அதன் பொருட்டு சுவாசம், இதயம், வயிறு தொடர்பான பலவிதமான நோய்கள் ஏற்படலாம். மேலும் பார்வைக்கோளாறு கேட்பொலி, மன அழுத்தம் போன்ற நோய்களும் தாக்கலாம். எனவே மனித வாழ்க்கைக்கு இயற்கையும் அதனோடு பல்வேறு நிலைகளில் தொடர்புடைய சுற்றுச்சூழலும் நிலைத்த தன்மை உடையதாய் அமைய வேண்டும். இந்த மண் உலகு நிச்சயமாகக் தாவரங்களால் மட்டும் சூழப்பெற்று நிறைந்த ஒன்றல்ல. தாவரங்களின் அளவுக்கு இணையாக புல், பூண்டு, தழை இவற்றை உணவாக உண்டு வாழ்கின்ற மிருகங்களும் உண்டு. தாவரங்களை உணவாக உண்டு வாழ்கின்ற மிருகங்களின் எண்ணிக்கை அளவுக்குப் புலால் உண்ணுகின்ற மிருகங்களும் உள்ளன. இவை அனைத்தைபும் நோக்குமிடத்து சரியான விகிதத்திலும் சமநிலையிலும் உள்ளன எனலாம். தற்போதைய முடிவின்படி, அறிவியல் கண்டுபிடிப்புக்கள், தொழில் துறைத் தொடர்பான பணிகள், பலவிதமான வளர்ச்சி விரிவாக்கம், மக்கட்தொகைப் பெருக்கம் இவையாவும் இவற்றோடு இணைந்துள்ளன.

 

(a) 'வாழ்க்கையும் சுற்றுச்சூழலும்' ஒன்றோடொன்று மிகவும் தொடர்புடையன. - விளக்குக. (12)

 

(b) இயற்கை, சுற்றுச்சூழல் இவற்றிற்கிடையே உள்ள தொடர்புகள் யாவை? (12)

 

(c) சமநிலையிலான இயற்கை சுற்றுச்சூழலை உருவாக்குவது எங்ஙனம் ? (12)

 

(d) சுற்றுச்சூழல் சமநிலையின்மை காரணமாக ஏற்படலாகும் அழிவுகள் யாவை ? (12)

 

(e) சுற்றுச்சூழல் மாசடைதல் காரணமாக ஏற்படுகின்ற நோய்கள் யாவை ? (12)

 

 

Q3. கீழ்க்காணும் பகுதியை அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவில் சுருக்கி, உங்கள் சொந்த நடையில் எழுதுக. தலைப்புத் தேவையில்லை. (60)

 

இந்திய நாட்டின் ஒற்றுமை, சுதந்திரம் இவை இரண்டும் ஒரு படத்தின் இருபக்கங்கள் எனலாம். ஒற்றுமை நிலைக்குக் களங்கம் ஏற்பட்டால் இந்திய நாட்டின் சுதந்திரம் அழிவு நிலையை அடையும் என்பது வெளிப்படை. எனவே தான் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உறுதிமொழி செய்தல் வேண்டும், இது முக்கியமானதொரு கடமை உணர்வுமாகும். இந்திய நாட்டில் தேசியத்தை விடவும் மொழி தொடர்பான வழக்கு மிகை. நாம் எதையும் தாங்கிக் கொள்ளும் அடக்கப்பண்பு பெறுவதற்குத் தயாராய் இருத்தல் வேண்டும். நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு நாம் சில வேளைகளில் அநீதிகளை எதிர் கொள்ளும் நிலையும் வேண்டும்.

 

இந்தியா வலிமைபெற்ற நாடாகவும் நிலைத்த தன்மை உடைய நாடாகவும் விளங்குவதாலும் வெளியே உள்ள சக்திகள் எவையும் நம்மை ஊறுபடுத்த இயலாது என்பதாலும் இவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் வலிமை பெற்றுள்ள போதிலும் நேர்மைக் கேடாக நாட்டின் ஒரு பகுதி பிறபகுதியுடன் எதிர்த்து நிலை கொள்ள இயலாது. இன்று நம் நாடு நிலைத்த தன்மை உடையதாய் விளங்குவதால் உள்நாட்டுச் சச்சரவுகள் பலவும் முற்றுப் பெற்றுள்ளன. உள்நாட்டில் சச்சரவுகள் முன்னர் போன்று வெறுப்பு மிக்க நிலையும் ஏற்படுத்தும். அத்துடன் மக்களின் பொருளாதாரச் செழிப்புத் தன்மையில் மாற்றம் நிகழவும் அவர்களின் மனப்பான்மையில் மாற்றம் அடையவும் செய்யும்.

 

நாட்டின் ஒற்றுமைக்கான பாதுகாப்புத் தன்மையில் நம்முடைய பங்களிப்பு இன்றியமையாதது. எனவே தான், போராடிப் பெற்ற சுதந்திரத்தை மனதிற்கொண்டு நாட்டின் உயர்வையும் கொள்கைகளையும் உருப்படுத்த நாம் முயற்சி செய்தல் வேண்டும் இந்தியநாடு சுதத்திரம் பெற்று ஏறத்தாள எழுபத்தி மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டது. இந்நிலையில் நாம் இன்னும் பல்வேறு குறிக்கோள்களை எட்ட வேண்டியுள்ளது. சுதந்திரம் என்பது தேவையான உணவைப் பெறுவது மட்டுமல்ல; திறமையான தொழிற்சாலைகளை நிறுவுவது மட்டுமல்ல. சரியான பார்வையில் சுதந்திரம் என்பது ஆன்ம விடுதலை, சுதந்திரமான தூய்மையான தனி மனித உரிமை என்பதாகும். இது பசியால் வருந்துகின்ற ஒரு மனிதனின் முன் பேசுகின்ற அற்பத்தனமான தத்துவப் பேச்சாகும் எனத் தோன்றலாம்.

 

இந்தியா என்பது ஒரு புதிய நாடல்ல. இந்தியாவில் வழக்கிலிருந்த பழமையான மொழிகள் இந்திய நாட்டின் சிறந்த பண்பாட்டுக் கலாச்சாரங்களை வெளிப்படுத்தக் காணலாம். இந்திய நாட்டில் உள்ள மிகப் பழமையான நூலில் உலக மக்கள் அனைவரையும் பற்றி கண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல வெளிநாட்டுப் படையெடுப்புகளால் முன்னரே உள்ள அதன் சொந்த நாகரிகப் பண்பாட்டை இழக்கவில்லை. புத்தம் புதிய கண்டுபிடிப்புக்களும் அறிவியல் விஞ்ஞான ஆக்கங்களும் இந்திய நாட்டின் பழமையான பண்பாட்டைக் கொள்ளையடிக்கவில்லை, 250 ஆண்டுகாலச் சரித்திர உண்மை இன்றும் நம் முன்னர் உள்ளது. ஏறத்தாள 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல அறிவுக் கூறுகளும் உருப்பெற்றுள்ளமை உண்மைத் தன்மையாகும்.

 

விஞ்ஞானத் தொழில் நுட்பமுறையின் தொடக்கம் உலகத்தின் பலபாகங்களிலும் உள்ள நாடுகளில் பழைய மதிப்புகளுக்கும் புதிய நோக்குகளுக்கும் இடையே போராட்டத்தை ஏற்படுத்தியது. இன்று உலகநாடுகள் பலவும் பழமையை இழந்துவிடாத முறையில் புதியதுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. இந்தியா பழமைக்கும் புதுமைக்கும் இடையே நெடுங்காலமாக போராட்டம் நடைபெறும் நாடாக உள்ளது. ஆயின், இந்திய நாட்டின் பழமையான அறிவுத்திறன்கள் யாவும் குறைபாடுடையதும் காலங்கடந்தவைகளும் அல்ல. இந்தியாவின் அறிவு நுட்பம் நிகழ்காலத்தைச் சுமந்து கடந்துச் சென்று எதிர்காலத்திற்கு நகர்ந்து செல்கின்றது. இந்தியா எப்போதும் முன்னேற்றத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. இந்திய நாட்டில் சான்றோர் பெருமக்களான இராமகிருஷ்ணர், விவேகானந்தர், திலகர், அரவிந்தர் போன்றோர் மிகப் பழமையான அறிவு நுட்பத்தைக் கொண்டவர்கள். இத்தகு அறிவு நுட்பத்தை உட்கொண்டு அதனை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. காந்தியடிகளும் பழமை வாய்ந்த சிறந்த மதிப்புக்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆசாரிய வினோபா பாவே அவர்களும் இக்காலத்தையும் எதிர்காலத்தையும் கடந்தகாலம் வழி சிந்தித்துள்ளார். ரவிந்திரநாத் தாகூர் பழமையான அறிவு நுட்பங்களுக்கு மிகப்பெரும் அளவில் ஆதரவு அளித்துள்ளார். நாம் அனைவரும் இன்றும் கூட பழமையை விட்டுவிடவில்லை. பழமை என்பது விலைமதிப்பு மிக்க நம் முதாதையர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியச் சொத்தாகும் ( 400 words)

 

 

Q4. பின்வரும் பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதுக. (20)

 

வாழ்க்கை என்பது கவனத்திற்குரித்தான ஒன்று. உண்மையில் இதில் மிகவும் கவனக்குறைவு நேரிடுமாயின் அது நாம் நடந்து செல்லும் போது பெரும் பள்ளமான குழியிலோ நீர்த்தேங்கிக் காணப்படுகின்ற தூய்மை அற்ற குழியிலோ விழுவது போன்றதாகும். இந்த உண்மை முன்னேற்றமான அறிவியல் பயன்பாட்டிற்கும் பொருந்துவதாகும்.

 

விஞ்ஞான அறிவியலை மனிதகுல நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தினால் அதன் பயனைக் குறித்து எவரும் குறை கூறுவதில்லை. அறிவியலை அழிவுக்குப் பயனாக்கினால் அது நிச்சயமாகத் துன்பத்தைத் தருவதுடன் மனிதகுலம் முழுவதும் வெறுக்கத்தக்க ஒன்றாகிவிடும். அறிவியல் நமக்குப் பல்வேறு நிலைகளில் பொருள் சார்ந்த வசதிகளையும் நன்மைகளையும் தந்தாலும் அதன் ஊறு விளைவிக்கும் ஆற்றல் காரணமாக மனதிற்கு மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தருவதில்லை. பொருள்களின் பெருக்கம், மனித வாழ்க்கையில் விரைவையும் இயந்திர நிலையையும் ஏற்படுத்தியதால் மனித மனங்களில் சமாதானத்தையும் அமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்கச் செய்ததுடன் அறமதிப்புகள், மனிதநேயம் இவையாவும் அழிந்தன. மனித இனம் அறிவியலைத் தவறாகப் பயன்படுத்தியதால் மிகப்பெரிய அழிவுக்கும் வகைவகுத்தது. அறிவியலின் கண்டுபிடிப்பாலே தான் அழிவுக்குக் காரணமான கொடிய ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன.

 

அறிவியலை இயற்கையோடு இணைந்த நிலையில் மனிதர்கள் பயன்படுத்த வேண்டும். அறிவியல் என்பது மனித வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளுக்கும் பயன்பாடு உடையதாகும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை

 

 

Q5. பின்வரும் பகுதியைத் தமிழில் மொழிபெயர்க்க. (20)

 

One of India's greatest musicians was M.S. Subbulakshmi, affectionately known to most people as 'MS'. Her singing brought joy to millions of people not only in all parts of our country, but in other countries around the world as well. In October 1966, MS was invited to sing in the great hall of the General Assembly of the United Nations in New York, while representatives of all the member countries listened. This was one of the greatest honours ever given to any musician. For several hours MS kept that international audience spellbound with the beauty of her voice and her style of singing; when the concert was over, the entire audience stood up and clapped as a sign of their appreciation of not only the singer but of the great music that she had carried with her from an ancient land. India could not have had a better ambassador. MS was the first musician ever to be awarded the 'Bharat Ratna', India's highest civilian honour. She was the first Indian musician to receive the Ramon Magsaysay Award in 1974 with the citation reading "exacting purists acknowledge Shrimati M.S. Subbulakshmi as the leading exponent of classical and semi-classical songs in the Carnatic tradition of South India".

 

 

Q6. (a) கீழ்க்காணும் சொற்களை உமது சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக: (2x5 = 10)

 

(i) பொன்

(ii) மாலை

(iii) நறை

(iv) கானம்

(v) வீறு

 

 

(b) பின்வரும் இணைகளின் பொருள் வேறுபாடு புலப்படுமாறு ஏற்ற சொற்றொடர்களில் அமைத்து எழுதுக: (2x5=10)

 

(i) தின்மை – திண்மை

(ii) வழி –வளி

(iii) அழை அளை

(iv) குறுக்கு –குருக்கு

(v) கோள் – கோன்

 

 

(c) பிரித்தெழுதுக : (1x5=5)

 

(i) ஐந்திணை 1

(ii) குடும்ப உறவு 1

(iii) பதினாயிரம் 1

(iv) பெற்றோர் 1

(v) முகக்கவசம் 1

 

 

(d) எதிர்ச்சொற்கள் தருக : (1x5=5)

 

(i) அரிது

(ii) நிகழ்காலம்

(iii) மறம்

(iv) மறைதல்

(v) வாணாள்

 

 

(e) எதிர்மறை வாக்கியமாக மாற்றுக: (1x5=5)

 

(i) இரவில் கடுமையாக மழை பெய்தது.

(ii) அவன் வகுப்பிற்கு ஒழுங்காக வரமாட்டான்.

(iii) அப்பா எப்போதும் கோபப்படுவார்.

(iv) புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்படவில்லை.

(v) மது அருந்துதல் உடல் நலத்தைப் பாதிக்கும்.

 

 

(f) பிழை நிக்கி எழுதுக: (1x5=5)

 

(1) குறளில் மேலான்மைச் சிந்தனைகள் மிகை.

(ii) அமைச்சர் பெறுந்தகை வந்தார்.

(iii) புஞ்செய் நிலங்கள் உள்ளன.

(iv) ஊளல் செய்தல் குற்றம்.

(v) அறிவு அத்தம் காக்கும் கருவி.

 

 

Quick Access Links