Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

16.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

காமன்வெல்த் போட்டிகள்:

•             ஸ்குவாஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா-ஜோஷ்னா இணை வெள்ளி வென்றனர். இவர்கள் 2014ல் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

•             டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகாபத்ரா-சத்யன் இணை வெண்கலம் வென்றது.

 

•             மகளிர் ஒற்றையர் பாட்மின்டன் இறுதிச் சுற்றில் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் தங்கம் வென்றார். சிந்து வெள்ளியைக் கைப்பற்றினார், இதற்கு முன் 2010-ல் வென்றுள்ளார்.

 

•          ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரரான கே.ஸ்ரீகாந்த் (இந்தியா) மலேசியாவின் லீ சொங் வொய்யிடம் தோல்வியுற்று வெள்ளியைக் கைப்பற்றினார். (பாட்மிண்டன்)

 

•             இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-சிராக் இணை வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

 

•             காமன்வெல்த் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

 

•             இதன் சின்னம் 2001 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.

 

•             குறிக்கோள் - ‘மனிதம் - சமநிலை – வெற்றி’

 

•             தலைமையகம் - இலண்டன்

 

ஆரம்பநிலை:

•             ஆரம்பக்காலகட்டத்தில்  பிரித்தானிய பேரரசு விளையாட்டுக்கள் என அறியப்பட்டு கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் ஹாபில்டன் நகரில் 1930ல் நடத்தப்பட்டது.

 

•          1954-ல் இப்பெயரானது பிரித்தானிய பேரரசு மற்றும் பொதுநல விளையாட்டுகள் என அறியப்பட்டது.

 

•             1970-ல் பிரித்தானிய பொதுநல விளையாட்டுக்கள் என மாற்றப்பட்டது.

 

•             1978 முதல் காமன்வெல்த் (பொதுநல விளையாட்டுகள்) என அதிகாரப் பூர்வமாக்கப்பட்டது. இதில் தற்போது 56 உறுப்பினர் நாடுகள் உள்ளன.

 

விளையாட்டு நிகழ்விடங்களில் சில:

     2002  -மான்செஸ்டர் (இங்கிலாந்து)

     2006  -மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)

     2010  -டெல்லி (இந்தியா)

     2014  -கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து)

     2018  -கோல்கோஸ்ட் (ஆஸ்திரேலியா)

     2022  -ஃபர்மிங்காம் (இங்கிலாந்து)

 

காமன்வெல்த்  போட்டி : சில செய்திகள்

•             21வது காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கியது.

 

•             19 விளையாட்டுகளில் பதக்கங்கள் வெல்வதற்காக பல்வேறு பிரிவுகளில் 12 நாள்கள் போட்டிகள் நடைபெற்றன.

 

•             தொடக்க  அணிவகுப்பில்இந்தியா சார்பில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசியக் கொடியேந்தி அணியை வழிநடத்திச் சென்றார்.

 

•             நிறைவு விழாவில் குத்துச்சண்டடை வீராங்கனை மேரிகோம் தேசியக்கொடியேந்தி அணியை வழிநடத்திச் சென்றார்.

 

•             காமன்வெல்த் கூட்டமைப்புத் தலைவர் லூயிஸ் மார்ட்டின்.

 

•             இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் போட்டியை நிறைவு செய்து வைத்தார்.

 

•             2022ல் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறும்.

 

•             பதக்க வரிசையில் இந்தியா 3வது இடம் பெற்றது.

 

•             பாட்மிண்டன் கலப்பு அணியில் இந்தியா முதல்முறையாக தங்கம் வென்றது.

 

பதக்கப்பட்டியல்

          நாடு                         தங்கம்           வெள்ளி            வெண்கலம்              மொத்தம்

1.ஆஸ்திரேலியா                 80                     59                        59                                198

2.இங்கிலாந்து                      45                     45                        46                                136

3.இந்தியா                                26                     20                        20                                 66

4.கனடா                                    15                     40                        27                                 82

5.நியூசிலாந்து                      15                     16                         15                                 46

6.தென் ஆப்பிரிக்கா           13                      11                        13                                 37

 

•           காமன்வெல்த் உச்சிமாநாடு ஏப்ரல் 16 முதல் 30 வரை லண்டன் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி உட்பட 52 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

•       திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் INS கடற்படை தள வளாகத்தில் ரூ.83கோடி  மதிப்பில் செயற்கைக் கோள் தகவல் சேகரிப்பு மையம் (சேட்டிலைட் எர்த் ஸ்டேஷன்) அமைக்க ISRO தலைவர் சிவன் அடிக்கல் நாட்டினார்.

 

•      மலையாள மொழி பேசும் மக்களின் அறுவடைப் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினமான  ‘விஷீ’ 15.04.18ல் கேரளாவில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

 

•         செவ்வாய், வெள்ளி கிரகங்கள் தொடர்பாக இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வது குறித்து இந்தியாவும் பிரான்சும் ஆலோசனை நடத்தி வருகிறது  (ISRO & CNES- பிரான்ஸ் தேசிய விண்வெளி ஆய்வு மையம்) 1962-ல் அமெரிக்கா முதல்முறையாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi