Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

17.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

•             2007 மே மாதம் 18ஆம் தேதியன்று நிகழ்த்தப்பட்ட ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் பலி, 58 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவமானது உள்ளுர் போலீஸ் விசாரணையிலிருந்து மாற்றப்பட்டு CBI விசாரணைக்கு சென்றது. பின் INA அமைப்பு விசாரணைக்கு எடுத்தது. இதனை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது INA சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு வழங்கிய நீதபதி கே.ரவீந்தர் ரெட்டி தனது பதவியை தீர்ப்பிற்குப்பின் ராஜினாமா செய்தார்.

 

•            உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ரேடார் கண்களுக்குப் புலப்படாத அதி நவீன J-10C ரக போர் விமானங்களை சீனா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. இவை எதிரிகளின் வான் எல்லைக்குள் ரகசியமாக ஊடுருவி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை எனக் கூறப்படுகிறது. (தரை இலக்குகள் மட்டுமின்றி கடலிலும் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை) ஏற்கனவே நான்காம் தலைமுறையைச் சேர்ந்த J-20C ரக ரேடார் மறைவு போர் விமானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

•             ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி (16.4.18) புறப்பட்டுச் சென்றார். முதற்கட்டமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோம் நகருக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் ஸ்டீஃபன் லோஃபெனை சந்திக்க உள்ளார். பின் இந்தியா – நார்டிக் நாடுகளின் (நார்வே, ஃபின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன்) மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றினார்.

 

•             அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (NSG) இந்தியா உறுப்பினராவதற்கு ஜெர்மனி தனது ஆதரவைத் தெரிவிப்பதாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற அந்நாட்டின் இந்தியாவிற்கான துணைத்தூதர் ஜெஸ்பர் வெய்க் கூறியுள்ளார். NSG-ல் தற்போது 48 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

 

•            அகில இந்திய காவல்துறை ஜீடோ சாம்பியன் போட்டிகள் டெல்லி இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகின்றன. எல்லைப்புற எஸ்எஸ்பி பாதுகாப்புப் படை இப்போட்டிகளை நடத்துகிறது. எஸ்எஸ்பி இயக்குநர் ஜெனரல் R.K..மிஸ்ரா பேட்டி. அடையாள சின்னத்தை ஏப்ரல் 16ல் வெளியிட்டார்.

 

•          ஏப்ரல் 15-ஆம் தேதி ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் துவக்கி வைத்துள்ள மீசல்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தின் நல்லெண்ண தூதராக காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மனுபேகர் நியமிக்கப்பட்டுள்ளார். (ஹரியானா ஆளுநர் - கப்டான் சிங் சொலான்கி)

 

•            காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு லண்டன் நகரில் ஏப்ரல் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்நிலையில் இக்கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காமன்வெல்த் நாடுகளில் 30 வயதுக்கும் குறைவானவர்கள் 2.4 பில்லியன் பேர் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இளவரசர் ஹாரி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi