Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

18.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

•              உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படையின் (NCC) தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் இராணுவத்தின் வடக்குப் பிரிவு தலைமைப் பொறியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“இந்தியாவில் பயிலுங்கள்”

•             கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக “இந்தியாவில் பயிலுங்கள்” என்னும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வலைதளத்தை இந்திய ஹேபிடட் மையத்தில், 2018 ஏப்ரல் 18 ஆம் நாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர் முன்னிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்.

 

•       தெற்காசியா, ஆப்பிரிக்கா, காமன்வெல்த் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 30 நாடுகளிலிருந்து மாணவர்கள் இந்தியாவின் 150 தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விண்ணப்பிக்க இந்த வலைதளம் பயன்படும் (www.studyindia.gov.in)

 

‘போஷான் அபியான் திட்டம்’:

•              போஷான் அபியான் திட்டம் 2018 மார்ச் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

•              இத்திட்டத்தின் நோக்கம் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தீர்ப்பதாகும்.

•              இத்திட்டத்தின் கீழ் “National Council on India’s Nutrition Challenges” குறித்த முதல் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.

•              இந்த மாநாட்டில் நிதி அயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், நிதிஅயோக் CEO அமிதாப்காந்த் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

•              தேசிய அளவில் ஏற்படும் ஊட்டச்சத்து சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.

 

தலைமுறைகளுக்கான பாரம்பரியம்:

•              ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8 ஆம் தேதியை உலக பாரம்பரிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் 36 தளங்கள் பாரம்பரிய தளங்களாக உள்ளன. இந்த ஆண்டு  ‘தலைமுறைகளுக்கான பாரம்பரியம்’ (“Heritage for Generations”) என்ற கருதுகோளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

 

‘தர்பன் -பிஎல்ஐ’ (DARPAN – PLI):

•              இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் காப்பீட்டுப் பாலிசிகளை இணையம் வழி புதுப்பித்தலுடன் பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ பாலிசிகளுக்கான பிரீமியம் தொகையை செலுத்த உதவிடும் தர்பன் - பி.எல்.ஐ செயலியை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு.மனோஜ்சின்ஹா 17.04.2018-ல் தொடங்கிவைத்தார்.

 

•      தகவல் தொழில்நுட்ப நவீனமயத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அஞ்சலக செயல்பாடுகள் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கோடு அஞ்சல்துறை புதிய இந்தியாவுக்கான கிராமப்புற அஞ்சல் அலுவலகத்தின் டிஜிட்டல் முன்னேற்றம் (DARPAN) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

 

•               இது நாட்டில் உள்ள 1.29 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் அனைத்தையும் இணைத்து அவை அஞ்சல் மற்றும் நிதி பரிமாற்றங்களை இணையம் வழி மேற்கொள்ளும் திறன் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.

 

•              சர்வதேச ரசாயண ஆயுதங்கள் கண்காணிப்பு அமைப்பிற்கு (OPCW) அனுமதி.

 

•   சிரியாவில் கிளர்ச்சிக் குழுக்களின் கட்டப்பாட்டில் இருக்கும் கிழக்குக் கௌட்டா பகுதியின் முக்கியப்பகுதியான டூமா நகரிலிருந்து கிளர்ச்சிக் குருக்களை வெளியேற்ற டூமா நகரில் சிரியா விஷவாயு தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை சிரியாவும், ரஷ்யாவும் மறுத்தது.

 

•             டூமா நகருக்குள் விஷவாயு தாக்குதல் பற்றி ஆராய OPCW குழுவை அனுப்ப ((Organisation for the Prohibition of Chemical Weapons – UN Joint Mission) அமெரிக்க வலியுறுத்தியது. இதற்கு ரஷியா  எதிர்ப்பு தெரிவித்தது.

 

•                தற்போது OPCW குழுவினை டூமா நகரில் ஆய்வு செய்ய ரஷ்யா அனுமதித்துள்ளது.

 

டெங்கு காய்ச்சலுக்கு ஆயுர்வேத மருந்து:

•              மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்பான மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கவுன்சிலின் (CCRAS – பெல்காம் - கர்நாடகா) ஆய்வகத்தில’ டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்து 7 மூலிகைகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை என்றும் இம்மருந்து அடுத்த ஆண்டுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்வீடன் -இந்தியா இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்து:

•          இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து முதன்முதலாக நடைபெற்ற இந்தோ-நார்டிக் மாநாட்டில் கலந்து கொண்டார்.

 

•              ஸ்வீடன் மன்னர் கார்ல் பதினாறாவது கஸ்டஃபையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

 

•              30 ஆண்டுகளுக்குப் பின் ஸ்வீடன் நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

 

•              ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் தலைநகர் ஸ்டாக் ஹோயில் 17.04.18-ல் அந்நாட்டு பிரதமர் ஸ்டீன் லோவெனைச் சந்தித்தார்.

 

பதக்கப்பட்டியலில் தமிழகம் இரண்டாமிடம்:

•              (கோல்டுகோஸ்ட்) 21வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெற்றுள்ள 66 பதக்கங்களில் ஹரியானா -22 பதக்கங்கள், தமிழ்நாடு – 11 பதக்கங்கள், மகாராஷ்டிரா-8 பதக்கங்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.

 

ஐ.நா துணை அமைப்புகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி:

•              பொருளாதாரம், சமூகநலம், சுற்றுச்சுழல் ஆகிய முப்பரிமாணங்களில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா அமைப்பின் கீழ் பொருளாதார, சமூக கவுன்சில் (ECOSOC) செயல்பட்டு வருகிறது.

 

•              மேற்கண்ட கவுன்சிலின் கீழ் இயங்கம் அரசு அமைப்பு சாரா பல்வேறு அமைப்புகளுக்கு ஐ.நா.வில் தேர்தல் நடைபெற்றது.

 

•              இதில் இந்தியா, சீனா, பஹ்ரைன், பாகிஸ்தான், பிரேசில், கியூபா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் 46 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது.

 

•              இந்த நாடுகளின் பதவிக் காலம் வரும் ஜனவரி 1 முதல் 2021 வரை டிசம்பர் மாதம் வரை ஆகும்.

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi