Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

19.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

 

டென்னிஸ் விளையாட்டில் புதிய சாதனை படைத்தார் ரோஜர் பெடரர்:

•              36 வயதான ரோஜர் பெடரர் அதிக முறை ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை (20 முறை) வென்று சாதனை படைத்துள்ளார்.

 

•              தற்போது உலகின் முதல் 4 வீரர்களில் 700 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தை வகித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். (கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஒபன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது).

 

12வது தெற்காசிய கால்பந்து போட்டி:

•              வங்கதேசத்தில் தெற்காசிய கால்பந்து போட்டி (SAFF) வரும் செப்டம்பர் 4 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

•              7 முறை கோப்பை வென்ற இந்தியா தற்போதும் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

•              SAFF – South Asian Football Federation

 

•              இந்த விளையாட்டானது 1993 முதல் நடைபெற்ற வருகிறது. இதில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், பங்ளாதேஷ், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய 8 நாடுகள் உள்ளன.

 

•              இந்தியா முறையே 1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2015 ஆகிய ஆண்டுகள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

 

•              2020-ல் 13வது SAF போட்டி பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

 

•     உலகிலேயே அதிக மின் அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள்  அமைக்கும் திட்டம் சீனாவில் சாங்ஜிஹீ  மாகாணத்திலிருந்து  அன்ஹீ மாகாணத்திலுள்ள வூஹீ நகரம் வரை ( யாக்ஸே ஆற்றின் மேல்) இதற்கான டிரான்ஸ்பார்மர் கம்பிகள் நிறுவப்பட்டுள்ளது. (தூரம் - 304 மீட்டர்) இதில் 100 கிலோ வாட் அல்ட்ரா ஹை வோல்டேஜ் நேரடி மின்சாரம் கடத்தப்பட  உள்ளது.

 

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தகவல் தொழில்நுட்ப போட்டி – 2018.

•              “மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான சர்வதேச தகவல் தொழில்நுட்பச் சவால்கள் - 2018” போட்டி நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நவம்பர் 8 முதல் 11 வரை டெல்லியில் நடைபெறுகிறது.

 

•              இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவின் சமூகநீதி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை அமைச்சகமும், கொரியாவின் சமூகநீதி சர்வதேச அதிகாரமளித்தல் மற்றும் மறு குடியமர்த்துதல் அமைச்சகமும் கையெழுத்திட்டன.

 

•              ஆசிய பசிபிக் பிராந்தியப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. முன்னதாக கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளது.

 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்:

•             கடந்த 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆய்வு செய்ய மத்திய சட்ட ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

 

•              இதனையடுத்து, இது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான பி.எஸ் சவுகான் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.

 

•              இந்த ஆணையம் 128 பக்க பரிந்துரைகளை  மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத்திடம் அளித்தது.

 

•       அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பையும் (BCCI), அதன் மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி உலக அளவில் விளையாடும் இந்த அமைப்பு 10 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி வரி விலக்கு பெற்றுள்ளது என்றும் அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

 

•              சஞ்சார் காந்தி யோஜனா – எனும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் ராமன்சிங் மே மாதம் தொடங்கி வைக்கிறார். இதில் இல்லத்தரசிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi