Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

20.04.2018 current affairs (tamil)

 

டெஸ் செயற்கைக்கொள்:

• டிரான்சிட்டிங் எக்ஸோ பிளானெட் சர்வே சாட்டிலைட் (டெஸ்) எனப்படும் செயற்கைக்கோளை நாசா விண்ணில் ஏவியுள்ளது.

 

• இது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள பாதையில் 2 ஆண்டுகள் சுற்றிவந்து புதிய கிரகங்களையும், சூரிய குடும்பத்தில் உள்ள சிறுசிறு கிரகங்களையும், அதிக ஒளியுள்ள ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் ஸ்கேன் செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும் என நாசா தெரிவித்துள்ளது.

 

கியூபாவிற்கு புதிய அதிபர் தேர்வு:

•  கியூபா அதிபர் பதவியிலிருந்து ரஷல் காஸ்ட்ரோ (ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரர்) 19.04.18-ல் ஓய்வு பெற்றார். 86 வயதான இவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பாத காரணத்தால் கியூபாவின் துணை அதிபரான மிகயேல் டியேஸ்-கனேல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

 

•  1959 முதல் தற்போது வரை ஃபிடல் காஸ்ட்ரோவின் குடும்ப உறுப்பினர் மட்டுமே அதிபர் பதவியில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் 2026- யூத் ஒலிம்பிக் போட்டி:

•  2026 ஆம் ஆண்டில் யூத் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 

•   இதனையடுத்து போட்டிகளை நடத்த போதுமான வசதிகள் உள்ளனவா என்பதை ஆராய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் இந்தியா வந்துள்ளார்.

 

•  மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

குஜராத்தி மொழியில் கவிதை:

• லண்டனில் ‘பாரத் கீ பாத், சப்கேசாத்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தான் குஜராத்தி மொழியில் ராமதா ராம் அகேலா என்ற தலைப்பில் 10 வரிகளில் கவிதை எழுதியுள்ளதாகவும் அதை இணையதளத்தில் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

 

திறம்பட செயல்படாத மருத்துவமனைகள் - பட்டியலிட முடிவு:

•  சிறப்பாகச் செயல்படும் பொது சுகாதார மையங்களுக்கு விருது வழங்கும் வகையில் ‘காயகல்ப்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ல் தொடங்கியது.

 

•  இத்திட்டத்தின்கீழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ‘எனது மருத்துவமனை’ என்னம் செயலியின் மூலமாக நோயாளிகளால் நேர்மறையான கருத்துக்கள் தெரிவிக்கப்படாத மருத்துவ மனைகளின் பெயர்களை வெளியிடவும் அவற்றை பட்டியலிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

உலக அளவில் சிறந்த தலைவர் பட்டியல்:

• 2018-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலை அமெரிக்காவின் ஃபர்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

 

•  50 பேர் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி (24 வது இடம்), மனித உரிமைகள் ஆர்வலர் இந்திரா ஜெய்சிங் (20வது இடம்) ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

 

•  ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பட்டியல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

இ-ஸ்டாம்பிங் முறை:

•  தமிழகத்தில் வழக்கு தொடர்வதற்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் இ-ஸ்டாம்பிங்  முறை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

•  நிலுவை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர 149 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் - விராட்கோலி:

• அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

 

•   இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட் கோலி இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

 

• சத்யா நாதெல்லா (மைக்ரோசாப்ட் நிறுவன CEO), நடிகை தீபிகா படுகோன், பவிஷ் அகர்வால் (ஓலா துணை நிறுவனர்) ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறு, நடுத்தர தொழில்களுக்கான சர்வதேச மாநாடு

•  சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சர்வதேச மாநாடு முதன்முறையாக புதுதில்லியில் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரையில் நடைபெறுகிறது.

 

• சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகம் இந்த மாநாட்டை 35 சர்வதேச தொழில் மேம்பாட்டு அமைப்புகளுடன் தொடர்புகொண்டு நடத்துகின்றது.

 

சென்னை – பிரசல்ஸ் ஒப்பந்தம்:

• தகவல் தொழில்நுட்பம், நிர்வாகத்திறன் பரிமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் புரிந்துணர்வு ஏற்படவும், பொதுவான வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் சென்னை – பிரசல்ஸ் (பெல்ஜியம் தலைநகர்) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

• சென்னையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி முன்னிலையில் பெருநகர சென்னை மாநாகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், பிரசல்ஸ் நகர மண்டல மாநில செயலாளர் டியான்கா டிபேட்ஸ் ஆகியோர் நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

 

சி.ஐ.ஏ-விற்கு புதிய இயக்குநர்:

•  அமெரிக்க உளவு அமைப்பான CIA-வின் இயக்குநராக இருந்த ரெக்ஸ் டில்லர்சனை அதிபர் டிரம்ப் பதவி நீக்கியதை அடுத்து புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல் சிஐஏ-வின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

6வது மிகப்பெரிய பொருளாதார நாடு:

• சர்வதேச நாணய நிதியம் IMF வெளியிட்டுள்ள World Economic Outlook (WEO) அறிக்கையின்படி உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. USA, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. 7வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. (IMF-ன் தலைவர் கிறிஸ்டின் லகார்டே)

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi