Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

21.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

இ-விதான் திட்டம்

•              இ-விதான் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள மாநில சட்டப் பேரவைகளைக் காகிதப் பயன்பாடு இல்லாத அடிப்படையில் செயல்பட வைப்பதற்கான இயக்க அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். மத்திய அரசின் விரிவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமையும். இதன்மூலம் காகிதத்தின் பயன்பாட்டை மிகப் பெரிய அளவில் குறைத்து தூய்மையையும், சுற்றுச்சூழலையும் பராமரித்துப் பாதுகாக்க இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

•           தற்போது நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் ‘இ-விதான்’ திட்டத்துக்கான மத்திய திட்ட கண்காணிப்பு பிரிவின் புதிய அலுவலகத்தை நாடாளுமன்ற விவகாரங்கள், புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் விஜய் கோயல் தொடங்கி வைத்தார்.

 

நகர்புற வளர்ச்சி மாநாடு

•               நகர்ப்புற மேம்பாடு, தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் நிர்வாகச் சவால்கள் என்ற தலைப்பின் கீழ் 2 நாட்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாநாடு நடைபெற்றது.

 

•              இம்மாநாட்டினை அசோகாம் அமைப்பின் குஜராத் கிளை, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுயாட்சி ஆராய்ச்சி அமைப்பான வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிதித்துறை அமைச்சகம் நடத்தியது.

 

‘மலாலா’ – கிராமம்

•              பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிரான வன்முறையில் தீவிரவாதிகளால் சுடப்பட்டவர் மலாலா. இவர் மீண்டும் பெண்கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினை இந்தியாவின் சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து வழங்கப்பட்டது. மிகவும் இளவயதில் (17 வயதில்) நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையையும் மலாலா பெற்றார்.

 

•              மலாலா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் சென்ற மலாலா தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் நினைவாக ராவல்பிண்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு ‘மலாலா’ என பெயர்சூட்டப்பட்டது.

 

மிகச்சிறந்த மருத்துவமனை

•              2017 ஆம் ஆண்டுக்கான ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் பிரிவில் மிகச் சிறந்த சேவை மருத்துவமனைக்கான பாதுகாப்பு அமைச்சர் கோப்பையை மேற்கத்தி; படைப்பிரிவின் ‘சந்திமந்திர்’ மருத்துவமனைக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

 

•         2வது சிறந்த மருத்துவமனை என்ற பெருமையை தெற்கத்திய படைப்பிரிவின் ‘புனே’ மருத்துவமனை பெற்றது.

 

ஷாங்காய் கூட்டுறவு மாநாடு

•              ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு 1996 ஏப்ரல் 26-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் உறுப்பினராக இருந்தன இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இதில் முழுநேர உறுப்பினர்களாக 9 ஜீன் 2017-ல் இணைந்தன. (உஸ்பெகிஸ்தான் 2011 முதல் உறுப்பினராக உள்ளது).

 

•              இந்த அமைப்பிற்கான மாநாடு ஏப்ரல் 24-ல் ஷாங்காய் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. சுஷ்மா சுவராஜ் சீனா சென்றுள்ளார்.

 

பெடரேஷன் கோப்பைக்குப் பதில் சூப்பர் கோப்பை போட்டிகள்

•              பெடரேஷன் கோப்பைக்குப் பதிலாக ‘சூப்பர் கோப்பை’ போட்டிகளை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிமுகம் செய்தது.

 

•                புவனேஸ்வரில் நடைபெற்ற போட்டியில் பெங்களுரு எஃசி அணி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

 

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் எண்ணிக்கை 19 கோடி

•              உலகவங்கி வங்கிக் கணக்கு இல்லாதவர் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதலில் சீனா (225 மில்லியன்) இரண்டாவது இந்தியா (190 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன.

 

•                    உலகளவில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களில் 11% பேர் இந்தியாவில் உள்ளனர்.

 

•              கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை விட ஆண்கள் 20 சதவீத வங்கிக் கணக்குகளை அதிகம் பெற்றுள்ளனர் என்றும் அது தற்போது 6 சதவீதமாக மாறியுள்ளது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

மத்திய மின்சார அமைச்சகம் - SGVN நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்:

•          நாட்டின் மிகப்பெரிய நீர்மின்சக்தி நிலையங்களின் ஒன்றான் நாத்பா ஜாக்ரி நீர்மின்சக்தி நிலையத்தை நடத்தும் SGVN நிறுவனம் (1500 மெகாவாட் திறன் கொண்டது), மத்திய மின்சார அமைச்சகத்துடன் 2018-19 ஆவது நிதி ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெல்லியில் கையெழுத்திட்டது.

 

•              இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி SGVN நிறுவனம் குறிப்பிட்ட ஆண்டில் இச்சிறப்பு பிரிவின் கீழ் 9,200 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அரியவகை தாது அடங்கிய தீவு கண்டுபிடிப்பு

•        ஜப்பானின் டோக்கியா நகரின் தென்கிழக்கில் சுமார் 1,150 மைல்கள் தொலைவில் மினாமி தொரிசிமா எனும் தீவு உள்ளதைக் கண்டறிந்து இதன் மதிப்பு சுமார் 360 பில்லியன் பவுண்ட்ஸ் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

•       இந்தத் தீவில் சுமார் 16 மில்லியன் டன் அரியவகை உலோகங்கள் உள்ளதாகவும் இவற்றால் ஹைடெக் தயாரிப்புகள் பலவற்றை உருவாக்க முடியும் என ஜப்பானிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

•          இத்தீவிலிருந்து எடுக்கப்பட்ட அரிய உலோகங்களில் ஒன்றான ‘இயிற்றியம்’ என்ற உலோகத்தால் மொபைல்போன் திரைகள் மற்றும் கேமிரா லென்ஸ்கள் தயாரிக்கலாம். இது ஒரு பவுண்டு 3400 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2018 காமன்வெல்த் கண்டுபிடிப்பு குறியீடு:

•              2018 காமன்வெல்த் கண்டுபிடிப்பு பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. இதில் இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் கனடா நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன.

 

•          இந்த குறியீட்டை லண்டன் நகரில் நடைபெற்ற 2018 காமன்வெல்த் அரசு தலைவர்கள் கூட்டத்தில் (CHOGM 2018) இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi