Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

22.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

 

விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு சதவீதம் இட ஒதுக்கீடு

•           சிறப்பாக விளையாடி மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில்2% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் கே.சந்திரபாபு ராவ் கூறியுள்ளார்.

 

நிதி மோசடி குற்றவாளிகளைத் தண்டிக்க அவசரச்சட்டம்

•            வங்கிகளில் கடன்பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வகையில் பொருளாதார சட்டம் 2018-க்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

 

•        அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள், முத்திரைத்தாள், கரன்சிகளை போலியாக அச்சடித்தவர்கள், போதிய நிதி இல்லாமல் காசோலை திரும்புதல் கடன் அளித்த வங்கிகளை ஏமாற்றுவோர் ஆகியோரைத் தண்டிக்கும் வகைகள் சட்ட வழிகள்  இந்த அவசரச் சட்டத்தில் உள்ளன.

 

•             இதன்படி துணை இயக்குநர் அந்தஸ்த்தில் உள்ளவர் சிறப்பு நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடிச் சட்டம் 2002-ன் கீழ் மனுதாக்கல் செய்யலாம். அம்மனுவில் இந்தியாவிற்கு திரும்ப மறுப்பவர் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டால் போதுமானது.

 

•         சம்பந்தப்பட்டவர் 6 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் மோசடி குற்றவாளிகளுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி அதுகுறித்து சிறப்பு நீதிமன்றத்துக்கு 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

 

•              இச்சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றவுடன் நடைமுறைக்கு வரும்.

 

உத்திரப்பிரதேச அரசின் வாடகை சைக்கிள் திட்டம்

•           உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வாடகை சைக்கிள் திட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டார். அப்பகுதி மேயர் சம்யுக்தா இத்திட்டத்தை துவக்கி வைத்தார். ஒரு மணி நேரப் பயன்பாட்டிற்கு ரூ.2 வசூலிக்கப்படும்.

 

•       வாடகை சைக்கிள் திட்டத்திற்காக ‘ஜீம்கார்’ என்னும் மொபைல் அப்ளிகேஷனும் வெளியிடப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் வசதியுடன் ரகசிய எண் கொண்ட பூட்டுடன் கூடிய வாடகை சைக்கிளை இந்த மொபைல் அப்ளிகேஷன் வசதி கொண்டு பயன்படுத்த முடியும்.

 

உலகத்தின் மொத்த கடன் 164 லட்சம் கோடி டாலர் - IMF தகவல்

•              உலகத்தின் மொத்த கடன் தொகை 164 லட்சம் கோடி டாலர் என IMF (சர்வதேச செலாவணி நிதியம்) தெரிவித்துள்ளது.

 

•          உலகின் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது மற்றும் நிதி அமைப்பில் இறுக்கமான சூழல் ஏற்பட்டால் கடனைத் திருப்பி செலுத்துதல் போன்றவை இதனால் கடினமாகும் என்றும் IMF தெரிவித்துள்ளது.

 

RBI -ன் அனுமதியைப் பெற்ற ‘YES’ பேங்க்

•       வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு உதவ வெளிநாடுகளில் கிளை தொடங்க RBI -யிடம் ‘YES’ வங்கி அனுமதி கோரியிருந்தது. இதற்கு RBI -யும் அனுமதி வழங்கியுள்ளது.

 

•           லண்டன் மற்றும் சிங்கப்பூரில் இந்த கிளைகள் தொடங்கப்பட உள்ளன. தற்போது செயல்பட்டு வரும் அலுவலகங்களுடன் இந்த இரு கிளைகளும் தொடங்கப்பட உள்ளதால் சர்வதேச நிதி சூழலில் YES வங்கி முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. YES வங்கியின் நிர்வாக இயக்குநர் ரானா கபூர்.

 

தாதா சாகேப் பால்கே விருது

•              பத்மாவத் படத்தின் கதாநாயகனாக ஷாகித் கபூருக்கு முன்னணிப் பாத்திரத்தில் மறக்க முடியாத நடிகர் விருதும், இப்படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங்கிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் தாதா சாகேப் பால்கே விருதின் கீழ் வழங்கப்பட்டது.

 

அசர்பைஜான் நாட்டிற்கு புதிய பிரதமர்

•              அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டு அதிபரின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக பணியாற்றி வந்த ‘நோர்வுஸ் மாமேடோவ்’ என்பவர் நியமிக்கப்பட அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

•              அசர்பைஜான் அதிபராக இல்ஹாம் அலியாவ் உள்ளார்.

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi