Copyright © All Rights Reseverd | Websolution by ebbitech
23.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் - ரபேஃல் நடால் சாம்பியன்
• மோனாகோவில் நடைபெற்ற மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஜப்பானின் கெய் நிஷிகோரியை வீழ்த்தி 11வது முறையாக பட்டம் வென்றார்.
• இதன் மூலம் ஓபன் எராவில் ஒரு போட்டியில் 11 முறை சாம்பியன் ஆன முதல் வீரர் என்ற சாதனையை நடால் படைத்துள்ளார்.
தேசிய இளையோர் தடகளம்: ஹரியானா ஒட்டுமொத்த சாம்பியன்
• 16வது ஃபெடரேஷன் கோப்பைக்கான இளையோர் தடகளப்போட்டிகளை தமிழ்நாடு தடகளச் சங்கம் கோவையில் நடத்தியது.
• இப்போட்டியில் ஹரியானா 177.50 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. தமிழகம் 151.50 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும் பெற்றது.
• ஆடவர் பிரிவில் ஹரியானா தமிழ்நாடு முதல் இரு இடங்களையும் மகளிர் பிரிவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியன முதல் இரு இடங்களையும் பிடித்தன.
• இதில் சிறந்த தடகள வீரராக ஹரியானாவின் ஆசிஷ் ஜாக்கரும், சிறந்த வீராங்கனையாக ஜார்கண்டைச் சேர்ந்த சப்னா குமாரியும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜீடோ-சாம்பியன்ஷிப்
• 8-வது தெற்காசிய ஜீடோ சாம்பியன்ஷிப் நேபாளத்தின் லலித்பூர் நகரில் 22.07.18-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அடல் அம்ரித் அபியான் திட்டம்
• அஸ்ஸாம் மாநில அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டமான அடல் அம்ரித் அபியான் திட்டத்தை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார்.
• ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (அஸ்ஸாம் மாநில முதல்வர் : சர்பனந்தா சோனோவால், ஆளுநர் - ஜெகதீஷ் முகி)
ராணுவத்தில் பெண்களுக்கு அனுமதி
• கத்தார் நாட்டில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட வேண்டும் என அந்நாட்டு அரசின் உத்தரவு நடைமுறையில் உள்ளது.
• தற்போது 18 வயதுள்ள பெண்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேர கத்தார் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் 3 மாதங்கள் ராணுவத்தில் பணிபுரியலாம் ஆண்கள் ஒரு ஆண்டு கட்டாயம் பணி புரிய வேண்டும்.
ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தில் மாற்றம்
• கடந்த 2016-17 மத்திய பட்ஜெட்டின் போது தேசிய கிராம சுயாட்சி திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
• உள்ளாட்சி அமைப்புகள் தற்சார்புடனும் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மையுடனும் கூடுதல் செயல்திறனுடனும் செயல்பட வேண்டி தேசிய கிராம சுயாட்சி திட்டம் (RGSA) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
• இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
• இந்தத் திட்டம் முதல் கட்டமாக 115 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டங்களை ஏற்கனவே நிதி அயோக் தேர்வு செய்துள்ளது.
• இந்தத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த நிதி அயோக் துணைத் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த திட்டத்தை பிரதமர் ஏப்ரல் 24-ல் மத்தியப் பிரதேசத்தில் தொடங்கி வைக்கிறார்.
சுவாசிலாந்து – பெயர் மாற்றம்
• ஆப்பிரிக்கா நாடான சுவாசிலாந்து தனது 50வது சுதந்திர தின அறிக்கையை வெளியிட்டுள்ளது.
• அதில் அந்நாட்டின் பெயர் ‘eSwatini’ என மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மன்னர் கிங் சுவாதி-3 அறிவித்துள்ளார். இந்நாட்டின் தலைநகர் லோபாம்பா.
விஞ்ஞானி கிரிக்கிகேரியன் மரணம்
• உலகிலேயே முதன் முறையாக அணுகுண்டு தயாரித்த அமெரிக்க விஞ்ஞானி நெர்சஸ்கிரிக் கிகோரியன் (97) மரணமடைந்தார்.
• இவரது பெற்றோர் அர்மீனியாவிலிருந்து அகதிகளாக வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் மூத்த பெண் மரணம்:
• உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக கின்னஸ்ஸில் இடம்பிடித்த ஜப்பானின் நபி தஜிமா (4-8-1900 ல் பிறந்தார்) உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.