Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

24.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவதில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

•              வெளிநாடுகளில் வேலை செய்யும் பிறநாட்டவர்கள் சொந்த நாட்டிற்குப் பணம் அனுப்பும் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

•              2017 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வெளிநாடுகளில் பணி செய்யும் இந்தியர்கள் அனுப்பி வைத்த மொத்த தொகை 6,900 கோடி டாலர் என்றும் இதுவே உலகளவில் அதிகம் என்றும் உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நைஜீரியா, எகிப்து நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

 

இந்திய சீன உறவில் இந்தி மொழியின் பங்களிப்பு

•              சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-ஐச் சந்தித்தபின் “இந்திய சீன உறவில் இந்தி மொழியின் பங்களிப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. மேலும் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில் இருநாட்டு உறவுகளும் பலப்பட இரு நாட்டு மொழிகளைக் கற்க வேண்டும் என்று கூறினார்.

 

உதகை HPF தொழிற்சாலை மூடல்

•              உதகையில் மத்திய அரசின் கனரகத் தொழில்துறை சார்பில் 1967-ல் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

•              தென்கிழக்கு ஆசியாவிலேயே இயங்கி வந்த ஒரே போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை இதுவாகத்தான் இருந்தது.

•              1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் நஷ்டம் அடையத் தொடங்கியது.

•              1996 ஆம் ஆண்டிற்குப் பின் இது நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. 50 ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்கிய உதகை HPF தொழிற்சாலையின் வரலாறு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

 

மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டி

•              அமெரிக்காவில் நடைபெற்ற மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் உலகின் 255 ஆம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான்ஐசெலெவை தோற்கடித்து பட்டம் வென்றார். இது வேலவன் வெல்லும் முதல் உலக ஸ்குவாஷ் டூர் பட்டமாகும்.

 

ஜீலன் கோஸ்வாமிக்கு சிறப்புத்தபால் தலை வெளியீடு

•              இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிகவும் மூத்த வீராங்கனையான ஜீலன் கோஸ்வாமி (35) மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகளின் பட்டியலில் 200 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இவர் மகளிர் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

•              மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக இவரைக் கவுரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

•              இவர் 2007-ல் ICC -ன் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை விருது 2010-ல் அர்ஜீனா விருது, 2012-ல் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச ஆய்வக விலங்குகள் தினம்

•              உலக அளவில் ஆய்வுக் கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன.

•              ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்கு உள்ளாவதைத் தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் (லண்டன்) 1979 ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது. இந்நாளை ஒட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகள் வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது

.

சிறந்த கிராமப்பஞ்சாயத்து – திகம்பர்பூர்

•              தேசிய அளவில் சிறந்த கிராமப் பஞ்சாயத்தாக மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பதர்பிராட்டிமா ஒன்றியத்தைச் சேர்ந்த திகம்பர்பூர் என்ற பஞ்சாயத்து தேர்வாகி உள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் :

முதல்வர் - மம்தா பானர்ஜி, ஆளுநர் - கேசரிநாத் திரிபாதி

 

29வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்:

•              29வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை (ஏப்ரல் 23) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். மேலும் இந்தியாவில் சாலைத் தகவல் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக தென் கொரியாவுடன் ஒப்பந்தம் செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது “பாதுகாப்பான இந்தியா சவால்-18” என்ற இணையதளமும் தொடங்கி வைக்கப்பட்டது.

 

“மெனு ஆன் ரயில்ஸ்” – செயலி அறிமுகம்

•              ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வகைகள் மற்றும் அதன் விலை அடங்கிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

•              உணவு வகைகள் மற்றும் அதன் விலைகள் அடங்கிய விபரங்களை தெரிந்து கொள்ளும் விதமாக “மெனு ஆன் ரயில்ஸ்” எனும் புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் உருவாக்கியுள்ளது.

 

மேகாலயாவில் ஆயுதப்படைச் சிறப்புச்சட்டம் வாபஸ்:

ஆயுதப்படை சிறப்புச்சட்டம்:

•              இந்திய நாடாளுமன்றத்தில் 1958 செப்டம்பர் 11 ஆம் தேதியில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA) இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அருணாச்சலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் ‘அமைதி குறைவான பகுதிகள்’ என்று சட்டம் குறிப்பிடும் இடங்களில் இந்திய படைத்துறையின் ஆயுதமேந்திய படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை பாதுகாப்பு வேண்டி வழங்குகிறது. இச்சட்டம் 1990 ஜீலையில் ஜம்மு & காஷ்மீர்  மாநிலத்திற்கும் விரிவாக்கப்பட்டது

•              இந்தச் சட்டம் தற்போது மேகாலயா மாநிலத்தில் இருந்து முழுவதுமாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

•              மேலும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சரணடையும் தீவிரவாதிகளுக்கு ரூ.1லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையில் நிதி வழங்கப்படும் என்றும் தீவிரவாதிகள் சரண் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் அடிப்படையில் இந்த நிதியை வழங்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

டாடா குழுமத்தின் சர்வதேச விவகார பிரிவு தலைவர் நியமனம்:

•              டாடா குழுமத்தின் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் பிரிவின் தலைவராக ஜெய்சங்கர் நியமனம்.

•              இவர் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டீசிஎஸ் நிறுவனம் சாதனை

•              டாடா குழுமத்தின் அங்கமான சாஃப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (TCS) நாட்டின் முதலாவது 100 பில்லியன் டாலர் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

TCS -ன் தலைவர் - நடராஜன் சந்திரசேகரன்

TCS -ன் CEO -ராஜேஷ் கோபிநாதன்

 

100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது நகரம்

•              பகல் நேரத்தில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது பொலிவுறு நகரம் என்ற பெருமையை டையூ பெறுகிறது.

•              டையூ ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13000 டன் கரியமிலவாயு வெளியேற்றத்தைத் தவிர்க்கிறது. குறைந்தசெலவிலான சூரிய எரிசக்தி காரணமாக குடியிருப்புப் பிரிவுகளில் மின் கட்டணம் சென்ற ஆண்டு 10% அளவிற்கும் இந்த ஆண்டு 15% அளவிற்கும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் - (ஏப்ரல் 23)

•              பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை கடந்த UNESCO –வின் 28வது மாநாட்டில் அறிவைப் பரப்புவதற்கும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

•              ஏப்ரல் 23-ல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக இலக்கியத்திற்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக UNESCO தெரிவித்துள்ளது.

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi