Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

25.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

இந்தியாவில் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி

•             வரும் 2019 ஆம் ஆண்டு ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

•              உஸ்பெகிஸ்தான் நாட்டின் அர்கெஞ்ச் நகரில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற ஆசிய பளு தூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 

தமிழில் ரயில் டிக்கெட் அறிமுகம்

•             தமிழகத்தில் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் பயண விவரங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தன.

•              24.04.18 முதல் தமிழ்  மொழியிலும் பயண விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்றும் இது தற்போது ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் அமலுக்கு வருவதாகவும் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழில் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட் கிடைக்கும் என மத்திய இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

•             ஏற்கனவே கர்நாடகாவில் கன்னட மொழியிலும், ஆந்திராவில் தெலுங்கு மொழியிலும் ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

•              விரைவில் கேரளாவில் மலையாள மொழியிலும் ரயில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

ரயில்வே காவல்துறையும் தமிழக சுற்றுலா துறையும் இணைந்து உதவி மையம் தொடக்கம்:

•              சுற்றுலா பயணிகளுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக சுற்றுலாத்துறையும், ரயில்வே காவல் துறையும் இணைந்து அமைத்துள்ள உதவி மையத்தை ரயில்வே IG பொன் மாணிக்கவேல் தொடங்கிவைத்தார்.

 

S.M பாலாஜிக்கு பேராசிரியர் டேவிட் விருது:

•              ஜெர்மனியில் நடைபெற்ற 12வது சர்வதேச அண்ணப்பிளவு மற்றும் கபால சீரமைப்பு மாநாட்டில் உதடு மற்றும் அண்ணப்பிளவுக்கான சர்வதேச அமைப்பின் சார்பில் மிகவும் உயரிய அறிவியல் ஆராய்ச்சிக்கான பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருதினை S.M .பாலாஜிக்கு அந்த அமைப்பின் தலைவர் கென்னத் சல்யர் வழங்கி கௌரவித்தார்.

•              இதன்மூலம் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை S.M .பாலாஜி பெற்றுள்ளார்.

 

மின்சார செலவைக் குறைக்க எல்.இ.டி பல்புகள் ஆந்திர முதல்வர் அறிவிப்பு

•              ஆந்திர மாநிலம் முழுவதும் வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் 100 சதவீதம் எல்.இ.டி பல்புகள் பொருத்தப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

•              இதற்காக ‘சந்திர கிராந்தி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் எல்.இ.டி பல்புகள் பொருந்துவதன் மூலம் மின்சார செலவு 40% முதல் 50% வரை குறைக்கலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

•            நாட்டிலேயே முதலாவதாக 100 சதவீதம் எல்.இ.டி பல்புகள் பொருத்தப்பட்ட மாவட்டமாக ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா – மங்கோலியா இடையே ஒப்பந்தம்:

•              இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக மங்கோலியா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் மங்கோலிய வெளியுறவுத்துறை மந்திரி தம்பதின் சோக்படாரை சந்தித்தபின் இருநாடுகளுக்குமிடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

         * மங்கோலிய அதிபர் - நம்பர்யின் எங்க்பயர்

        *  மங்கோலிய பிரதமர் - சஞ்சாகின் பயர்

 

புதுதில்லியில் சர்வதேச SME மாநாடு – 2018:

•            2018 ஏப்ரல் 22-ல் தொடங்கி ஏப்ரல் 24 வரை நடைபெறும் முதலாவது சர்வதேச சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் (Micro, Small and Medium Enterprises) மாநாடு டெல்லியில் நடந்தது.

•              இந்த இரண்டு நாள் மாநாட்டில் ‘எல்லைகளைக் கடந்து’ என்றழைக்கப்படும். காதி ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பெண் தொழில் முனைவோருக்கும் சிறப்பு அமர்வு உள்ளது குறிப்பிடத்தக்கது. 37 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

 

சிங்கப்பூரில் இந்திய –சீன  வம்சாவளி பெண்ணுக்கு கேபினட் அமைச்சர் பதவி:

•              சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங் தனது மந்திரி சபையை மாற்றி அமைத்தார். இதில் இந்திய –சீனா வம்சாவளி பெண் தலைவர் இந்திராணி ராஜாவிற்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

•              இவர் 2006-2011 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

•              தற்போது பிரதமர் அலுவலக பொறுப்பு, நிதி மற்றும் கல்வித்துறையில் இரண்டாவது அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

 

வங்கதேச பிரதமருக்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது:

•              அமெரிக்காவைச் சேர்ந்த மகளிர் அமைப்பின் சார்பில் 2018-ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் உச்சிமாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏப்ரல் 26-ல் நடைபெறுகிறது. இதில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது ஏப்ரல் 27-ஆம் தேதி வழங்கப்படுகிறது.

•              மியான்மரில் சிறுபாண்மை இனத்தவர்களான ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் பல லட்சம் மக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை வரவேற்று தற்காலிக முகாம்கள் அமைத்து மீண்டும் மியான்மரில் குடியமர்த்த மியான்மருடன் புணர்வாழ்வு ஒப்பந்தம் செய்தார்.

•              வங்கதேச நாட்டுப் பெண்கள் கல்வி, தொழிலில் முன்னேற அரும்பணி ஆற்றியுள்ளார். இவரின் சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

 

‘ஐ கேர்’ என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக உயர்கல்வித்துறை ஒப்பந்தம்

•              கல்வி நிறுவனங்களின் தரவரிசைக்கான இந்திய மையம் (ஐகேர்) என்ற தனியார் நிறுவனம், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களில் மதிப்பீடு, தரவரிசை குறித்த கட்டமைப்பைக் கட்டணமின்றி உருவாக்க முன்வந்துள்ளது.

•              தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்கள் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்புக்கு தகுதிபெற்று விண்ணப்பித்தன.

•            2018 ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் அண்ணா பல்கலை, பாரதியார், அழகப்பா, காமராசர், பாரதிதாசன், பெரியார் போன்ற 7 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெள்ளி வென்றார் - ரிஸ்வி:

•          ன்கொரியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரிஸ்வி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

•          ரஷ்யாவின் ஆர்ட்டெம் செர்வோவ்சோவ் தங்கமும், பல்கேரியாவின் சாமுய்டான்கோவ் வெண்கலமும் வென்றனர்.

 

கிராம சுயராஜ்ய திட்டத்தை மோடி துவக்கிவைத்தார்.

•              தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான (ஏப்ரல் 24) நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் ராம் நகரில் தேசிய கிராமப்புற சுயராஜ்ய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi