Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

27.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

நேரடி நியமனம் பெற்ற முதல் பெண் வழக்குரைஞர்:

•              உச்சநீதிமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

•              கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.

•              கீழ் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணி புரியாமல் நேரடியாக உச்ச நீதிமன்ற முதல்பெண் நீதிபதி என்ற பெருமையை இந்து மல்ஹோத்ரா பெற்றுள்ளார்.

•              இந்தியாவின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி என்பது குறிப்பிடத்தக்கது (1989-1992)

 

சாம்பியன்ஸ் உலகக் கோப்பை டி-20 போட்டியாக மாற்றம்:

•              2021-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையானது உலக டி-20 போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. (இதில் 8 நாடுகள் பங்கேற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது).

•              கொல்கத்தாவில் ICC வாரியக் கூட்டம் 5 நாள்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பை போட்டியில் 16 அணிகள் போட்டியிடும் என்றும் இதற்கு BCCI பிரதிநிதி அமிதாப் சவுத்ரியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

கேல்ரத்னா விருது – விராட்கோலி பெயர் பரிந்துரை:

•              இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதாகும்.

•              இந்த ஆண்டு இவ்விருதிற்கு கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை மத்திய அரசுக்கு BCCI பரிந்துரை செய்துள்ளது.

 

ICGSC - 438 ரோந்துப் படகு அர்ப்பணிப்பு:

•              இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியத்திற்கு ICGSC -438 என்ற புதிய ரோந்து படகு ஆந்திரமாநிலம் காக்கி நாடாவில் முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

•              இந்திய கடலோர காவல் படையின் கிழக்குப் பிராந்தியத்தின் தலைமையிடம் - சென்னை

 

புதிய கிரகம் கண்டுபிடிப்பு:

•              நாஸாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பிரிட்டனின் ‘கீல்’ பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வாஸ்ப்-104பி எனும் கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர்.

•              இது பூமியிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்றும் இது நிலக்கரியை விட கருப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

 

உலக வங்கியுடன் இந்தியா ஒப்பந்தம்:

•              உள்நாட்டுக் கண்டுபிடிப்பு, உற்பத்தி மற்றும் வணிக மயமாக்கல் நடைமுறையை ஊக்குவிக்கும் நோக்கிலான பல்வேறு திட்டங்களுக்காக உலக வங்கியிடம் 125 மில்லியன் டாலர் (ரூ.825 கோடி) நிதியைக் கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையொப்பமானது.

•              உலகவங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் ஹிசாம் அப்டோ ஆவார்.

 

காயகல்ப் திட்டத்தின் கீழ் ஜிப்மருக்கு பரிசு:

•              காயகல்ப் திட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் துப்புரவுக்கான மூன்றாவது பரிசாக ஜிப்மர் மருத்துவமனைக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi