Copyright © All Rights Reseverd | Websolution by ebbitech
28.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)
மியான்மருக்கான சிறப்புத்தூதர் நியமனம்:
• மியான்மர் விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு தூதராக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டீன்ஷ்ரானெர் பர்கெனரை ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் நியமித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரானார் பாம்பியோ:
• அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக நாட்டின் உளவு அமைப்பான CIA -வின் முன்னாள் தலைவர் மைக்கேல் பாம்பியோ பொறுப்பேற்றுள்ளார்.
தேனீக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லிக்கு தடை:
• உலகிலுள்ள 90 சதவீத பயிர்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அந்த பயிரினம் தழைத்தோங்க தேனீக்கள் மிகவும் உதவிகரமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
• இந்த நிலையில் அண்மைக்காலமாக தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், இதனால் சுற்றுச்சுழல் மிகவும் பாதிப்படைவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தடுக்க தேனீக்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இதற்கு ஆதரவாக அதன் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளன.
சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை:
• கேரள கடலோர பகுதிகளில் விழிஞ்ஞம் முதல் சாகர்க்கோடு வரை இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் பல்துறைகளும் இணைந்து 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை (சாகர் கவாஜ்) நடத்தியது.
• இந்தியக் கடற்படையின் தளபதி, சுனில் லாம்பா.
உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச டி20 அந்தஸ்து – ICC:
• சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ICC) மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகள் மட்டும் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர்.
• தற்போது 104 உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச டி20 போட்டி விளையாட்டு அந்தஸ்து ICC வழங்கியுள்ளது.
ICC-ன் தலைவர் - சீனிவாசன்
ICC-ன் தலைமைச் செயல் அதிகாரி – டேவிட் ரிச்சர்ட்சன்