Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

29.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

 

தேஜாஸ் போர் விமானத்திலிருந்து ஏவுகணை சோதனை வெற்றி:

•           உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தில் பல்வேறு வகையான ஏவுகணைகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல் தயாரிப்பான அதி நவீன ‘டெர்பி’ ரக ஏவுகணை சோதனை கோவா கடற்கரைப் பகுதியில் 27.04.18ல் நடத்தப்பட்டது. சோதனையின் போது டெர்பி ஏவுகணை இலக்கைத் துல்லியமாக தாக்கி அழித்தது.

•              வான்வெளியில் இருந்து வான்வெளியில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

•              ஏற்கனவே ரஷ்யாவின் R-73 ஏவுகணைகள், உள்நாட்டு தயாரிப்பான அஸ்திரா ஏவுகணைகள் தோஜாஸ் விதானத்திலிருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

•              மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன (DRDO) தலைவர் - கிறிஸ்டோபர்.

 

தேஜாஸ் விமானம்:

•      தேஜாஸ் என்றால் (சமஸ்கிருதத்தில்) சுடரொளி என்று பெயர். மே 4,2003 அன்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் தேஜாஸ் என அதிகாரப் பூர்வமாக பெயரிடப்பட்டது. (முதலில் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் (LCA) என பெயரிடப்பட்டது).

•              இதனை Hindustan Aeronautics Limited நிறுவனம் தயாரிக்கின்றது. Aeronautical Development Agency வடிவமைத்தது. 13.20 மீட்டர் நீளமும் 4.40 மீட்டர் உயரமும் கொண்டது. இது Mach 1.6 முதல் 1500 m வேகம் வரை செல்லக்கூடியது

 

டயானா எடுல்ஜி, பங்கஜ்ராய்க்கு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது:

•              மூன்று நபர் BCCI உறுப்பினர் குழு வாழ்நாள் சாதனையாளர் விருது டயானா எடுல்ஜி மற்றும் பங்கஜ் ராய் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

•              முன்னாள் இந்திய தொடக்க வீரரான பங்கஜ் ராய் 43 டெஸ்ட் பொட்டிகளில் விளையாடி 5 சதங்களுடன் 2442 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 1956-ல் சென்னையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வினுமன்கட் உடன் இணைந்து 413 ரன்கள் குவித்து உலக சாதனை புரிந்தார். அந்த சாதனை 52 வருடங்கள் நிலைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

•              இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது BCCI நிர்வாகக் குழுவின் (COA) உறுப்பினருமான எடுல்ஜி டயானா 20 டெஸ்ட்போட்டிகள் மற்றும் 34 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்று (டெஸ்ட்) 63 மற்றும் (ஒருநாள்)  46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

•              இவ்விருதிற்கு ரோஜர் பின்னி பெயரும் பரிசீலனைக்கு வந்தபோது அவரது மகன் ஸ்டூவர்ட் பின்னி தற்போது ஆடிவருவதால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

•              இதற்கிடையே டயானா எடுல்ஜி COA அமைப்பின் உறுப்பினராக உள்ளதால் அவர் தனக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற மறுத்துவிட்டார்.

 

ஆசிய பாட்மிண்டன்:

•              சீனாவின் ஹீஹான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் நடப்புச் சாம்பியன் சீன தைபேயின் டைசு பிங்கியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். சாய்னா நேவால், டைசுயிங்குக்கு எதிராக 8வது முறையாக தோல்வியைத் தளுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

•              ஆடவர் அரையிறுதியில் இந்தியாவின் பிரணாய் சீனாவின் சென் லோங்கியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi