Copyright © All Rights Reseverd | Websolution by ebbitech
JUNE 2018 DAILY CURRENT AFFAIRS (TAMIL)
30.06.2018 TNPSC CURRENT AFFAIRS
ரஷியா மீதான பொருளாதாரத் தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
✦ உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அந்நாட்டு அரசுக்கும், ரஷிய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2014-ல் உள்நாட்டு போர் ஏற்பட்டது.
✦ உக்ரைனில் ரஷிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வசிக்கும் கிரைமியா பகுதி பொது வாக்கெடுப்புக்குப் பின்பு ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
✦ மலேசியன் ஏர்லைன்ஸ் MH 17, கடந்த 2014-ல் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
✦ இதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது தற்போது மேலும் 6 மாதங்களுக்கு பொருளாதார தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாடு – பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸெல்ஸில் நடைபெறுகிறது.
✦ இதில் போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐ.நா.சபையின் மில்லினியம் வளர்ச்சி இலக்கு
✦ 2030ம் ஆண்டுக்குள் மகப்பேறின் போது தாய்மார்கள் இறப்பு விகிதத்தை 130 ஆக குறைக்க வேண்டும் என்பது ஐ.நா சபையின் வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும்.
✦ தமிழ்நாட்டின் தாய்மார்கள் இறப்பு விகிதம் 62/1000
✦ நம் நாட்டின் தாய்மார்கள் இறப்பு விகித சராசரி 130/1000
காரீப் பயிர்களுக்கு அதிக விலை நிர்ணயம்
✦ 2018-19 ஆம் ஆண்டில் நெல் உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கு உற்பத்தி செலவைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக நிர்ணயிக்கும் முடிவை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
✦ காரீப் பயிர்களுக்கு சில உதாரணங்கள்: நெல், கரும்பு, பருத்தி, திணை, நிலக்கடலை
✦ காரிப் மற்றொரு பெயர் பருவமழை பயிர்கள்
இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்து இடையே ஒப்பந்தம்
✦ 2019 ஜனவரி மாதம் முதல் சட்ட விரோதமாக ஸ்விஸ் வங்கியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் பட்டியலை அந்நாடு அளிப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்து இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
✦ டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி நிலையில் உள்ளன
1 டாலர் = ரூ.68.56
காரணிகள்:
1)கச்சா எண்ணெய் உயர்வு
2)சர்வதேச வர்த்தக பனிப்போர்
3)இந்தியாவில் முதலீடு செய்திருந்த பல முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை திரும்ப பெறுதல்
கல்வித்துறை மேம்பாட்டுக்கு இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 3 ஒப்பந்தங்கள்
✦மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் ஆஸ்திரேலியப் பயணத்தின் போது இருநாடுகளுக்கிடையே கல்வித்துறை மேம்பாட்டுக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
✦ இதைப்போல் கர்ட்டின் பல்கலை-கவுகாத்தி IIT இடையேயும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மேற்கு சிட்னி பல்கலை இடையேயும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஐதராபாத்தில் UAE-ன் தூதரகம்
✦ ஐதராபாத்தில் UAE-ன் தூதரகம் அமைக்க UAE-ன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின்சையத் அல் நயன் ஒப்பந்தம் மேற்கொண்டார்.
★ 2019ல் மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறும் இடம் - இலண்டன்
29.06.2018 TNPSC CURRENT AFFAIRS
No Toilet No Pride Campaign
✦ கழிவறை இல்லாத வீட்டுக்கு பெண் கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி No Toilet No Pride எனும் பிரச்சாரத்தை நடத்தும் மாநிலம் - ஹரியானா
✦ இந்த பிரச்சாரம் 2005 முதல் நடைபெற்று வருகிறது.
✦ தற்போது ஹரியானாவில் Godikan கிராம பஞ்சாயத்து சார்பில் கழிவறை இல்லாத குடும்பத்துக்கு பெண் கொடுக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
52வது ஸ்கோச் உச்சி மாநாடு – டெல்லி
✦ டெல்லியில் நடைபெற்ற ஸ்கோச் மாநாட்டில் தமிழக வேளாண்துறை உருவாக்கிய உழவன் செயலிக்கு ஸ்கோச் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.
✦ உழவன் செயலி ஏப்ரல் 5, 2018ல் தொடங்கப்பட்டது.
✦ உள்கட்டமைப்பு துறையில் சிறந்த செயல்பாட்டிற்காக, சாகர்மாலா திட்டத்திற்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
சூரியசக்தி கிசான் யோஜனா
✦ சூரியசக்தி கிசான் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்-குஜராத்
✦ விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சக்தியை சூரிய ஆற்றல் மூலம் உற்பத்தி செய்தல்.
Panni Bacho,Paise Kamao Campaign
✦ Panni Bacho, Paise kamao பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மாநிலம்-பஞ்சாப்
✦ ஆழ்துளை கிணறுகள் மூலமாக பாசனம் செய்யும் விவசாயிகள் நீர் சிக்கனத்தை மேற்கொள்ள வலியுறுத்தி இப்பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சில் (Global Environment Facility)
✦ இந்தியா, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலுக்கு 15 மில்லியன் டாலருக்கும் அதிகமான மானியத்தை வழங்கியுள்ளது.
✦ GEF கவுன்சிலில் இந்தியாவின் பிரதிநிதியாக அபர்ணா சுப்ரமணி செயல்படுகிறார்.
✦ ரியோ பூமி மாநாட்டில் 1992ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
✦ இந்த அமைப்பில் 183 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
கன்யா வான் சம்ருதி யோஜனா
✦ கன்யா வான் சம்ருதி யோஜனாவை தொடங்கி உள்ள மாநிலம் - மகாராஷ்டிரா
✦ இதில் விவசாயிகள் குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது தோட்டத்தில் நட, மரக்கன்றுகள் வழங்கப்படும்.
ஆக்ஸிட்டோசின் மருந்து தயாரிக்க புதிய கட்டுப்பாடுகள்
✦ 2018 ஜீலை 1 முதல், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்நாட்டு பயன்பாட்டிற்கு ஆக்ஸிட்டோசின் சூத்திரங்கள் தயாரிக்கப்படுவதை கட்டுப்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தமிழ் அமைப்புகள் மாநாடு
✦ தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், உலக தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
Reunite செயலி
✦ காணாமல் போன குழந்தைகளை கண்காணிக்கவும் மற்றும் கண்டுபிடிக்கவும் இச்செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
NITI Aayog’s Delta Ranking of Aspiration Districts Programme
✦ நிதி ஆயோக் தனது முதல் ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டங்கள் டெல்டா தரவரிசையை வெளியிட்டது.
✦ முதலிடம் - தஹோத் மாவட்டம் (குஜராத்)
✦ 2வது இடம் - மேற்கு சிக்கிம் மாவட்டம் (சிக்கிம்)
★ தேசிய புள்ளியியல் தினம் - ஜீன் 29
★ பிரதமரின் கீழ், பேறுகால இறப்புகளை குறைத்தமைக்காக விருது பெற்ற மாநிலம் மத்திய பிரதேசம்.
28.06.2018 TNPSC CURRENT AFFAIRS
UGC-க்கு மாற்றாக உயர்கல்வி ஆணையம்
✦ பல்கலைக் கழக மானியக் குழு (UGC) 1953-ல் ஏற்படுத்தப்பட்டது.
✦ UGC தகுதிவாய்ந்த கல்லூரிகளுக்கு நிதியுதவிகளை வழங்கியும், அவற்றின் தரக்கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தேசிய புள்ளியியல் தினம் ஜீன் 29
✦ புள்ளிவிவர மேதை மெஹல் நோபிஸின் பிறந்த தினமான ஜீன் 29ஐ தேசிய புள்ளியியல் தினமாக 2007ம் ஆண்டு அறிவித்தது.
✦ அவரது 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரூ.125 மற்றும் ரூ.5 புதிய நாணயத்தை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிடுகிறார்.
பழங்குடியின பெண்களுக்கிடையேயான அழகிப் போட்டி
✦ பழங்குடியின பெண்களுக்கிடையேயான அழகிப் போட்டி நடைபெற்ற இடம் - புவனேஸ்வரர் (ஒடிஷா)
✦ பழங்குடியின ஆதிராணி (Tribal Queen) பட்டம் வென்றவர் - பல்லவி துர்கா
15வது கூட்டம்
✦ 15வது இந்திய – ஆஸ்திரேலிய அமைச்சர்கள் நிலையிலான கூட்டு ஆணையக் கூட்டம் நடைபெற்ற இடம் - கேன்பெரா (ஆஸ்திரேலியா)
விண்வெளியிலுள்ள குப்பைகளை அகற்ற செயற்கைக்கோள்
✦ உலகில் முதன்முறையாக விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்ற செயற்கைக்கோளை அனுப்பிய நாடு - இங்கிலாந்து
✦ செயற்கைக்கோள் பெயர் - ரிமூவ் டெப்ரீஸ்
27 நாடுகளின் கடற்படை போர் பயிற்சி
✦ இந்தியா உள்ளிட்ட 27 நாடுகள் கலந்துகொள்ளும் போர் பயிற்சி – நடைபெறும் இடம் ஹவாய் தீவு
✦ இந்த பயிற்சியின் பெயர் - Rim of the pacific (RIMPAC)
இந்தியா மீது பொருளாதார தடை அமெரிக்கா எச்சரிக்கை
✦ ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.
✦ இந்தியாவுக்கு அதிகளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈராக், சவூதி அரேபியா நாடுகளுக்கு அடுத்து 3வது இடத்தில் ஈரான் உள்ளது.
✦ அணுசக்தி விவகாரத்தில் வல்லரசு நாடுகள் ஈரான் மீது 2011-ல் பொருளாதார தடை விதிக்கப்பட்டது
✦ ஈரானுடன் வல்லரசு நாடுகள் 2015-ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
✦ கடந்த மே, 2018-ல் ஈரான் நாட்டு உடன் வல்லரசு நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.
✦ நவம்பர் 4, 2018 பின்பு ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
Solar Charkha Mission
✦ உலக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தினத்தை (ஜீன் 27) முன்னிட்டு உதயம் சங்கம் என்ற மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் Solar Charkha Mission -ஐ தொடங்கி வைத்தார்.
✦ இதன் மூலம் 50 தொழிற் குழுமங்கள் வாயிலாகதலா 400 முதல் 2000 கைத்தொழில் கலைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது நோக்கம்.
✦ பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாஸர் ஜான்ஜீவா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
27.06.2018 TNPSC CURRENT AFFAIRS
நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்
✦ நாட்டிலேயே முதன் முறையாக, நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் குறித்த வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
✦ ‘தென்னகத்தின் தண்ணீர் தொட்டி’ என்று அழைக்கப்படும் மாவட்டம் - நீலகிரி.
பிரெக்ஸிட் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
✦ 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில் 1973ல் பிரிட்டன் உறுப்பினராக இணைந்தது.
✦ பிரெக்ஸிட்-பொது வாக்கெடுப்பில் (2016) ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தனர்.
✦ தற்போது ‘ஐரோப்பிய யூனியன் விலகல் மசோதா’ –பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டுள்ளன.
✦ ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறபோகும் நாள் மார்ச் 29, 2019
பாகிஸ்தான் விமான விபத்து
✦ எஃப் டி-7 பிஜி ரகத்தை சேர்ந்த பயிற்சி விமானம் பெஷாவர் அருகே விழுந்து நொறுங்கியது.
✦ எஃப்டி -7பிஜி விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
✦ ஐரோப்பாவிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் -ஹீத்ரு விமான நிலையம் (பிரிட்டன்)
இந்தியா மற்றும் செஷல்ஸ்
✦ சேஷல்ஸ் நாட்டிற்கு இந்தியா அளித்த விமானத்தின் பெயர் - டார்னியர்
✦ செஷல்ஸின் அஸ்ஸம்ஷன் தீவில் கடற்படை தளம் அமைக்க இந்தியா (ம) ஷெசல்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
“எம்பாஸ்போர்ட் சேவா ஆப்”
✦ கடவுச் சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிப்பதற்கான செயலியாகும்.
ஆர்.சி.தேகா கமிட்டி
✦ நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க பல்கலை கழக மானிய குழுவால் R.C.தேகா கமிட்டி (UGC) அமைக்கப்பட்டுள்ளது.
✦ இக்கமிட்டி 11 உறுப்பினர்களை கொண்டது.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
✦ ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 3வது ஆண்டு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
✦ சர்வதேச அளவில் 7வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் வாங்கும் திறன் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3வது இடத்திலும் இந்தியா உள்ளது.
✦ இவ்வங்கி ஜனவரி 16, 2016ல் உருவாக்கப்பட்டது.
✦ தன் தலைமையிடம் பெய்ஜிங்-ல் உள்ளது.
✦ இது 87 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது
✦ இவ்வங்கி சீனாவால் முன் மொழியப்பட்ட பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.
✦ அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 100 பில்லியன்.
உலகளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல்
✦ மெர்சர் நிறுவன அறிக்கை (USA)
✦ உலகிலேயே செலவு மிகுந்த நகரமாக ஹாங்காங் முதலிடத்தை பிடித்துள்ளது.
✦ இரண்டாமிடம் டோக்கியோ
✦ மும்பை 55 வது இடம்
✦ டெல்லி 103 வது இடம்
✦ சென்னை 144 வது இடம்
✦ பெங்களுரு 170 வது இடம்
✦ கொல்கத்தா 182 வது இடம்
★ உலகிலேயே மிக அதிகளவில் தாமிர உற்பத்தி செய்யும் நாடு –சிலி
★ பாகிஸ்தான் நாட்டின் முதல் பார்வையற்ற நீதிபதியாக யூசப் சலீம் பதவியேற்றார்.
26.06.2018 TNPSC CURRENT AFFAIRS
துருக்கி அதிபர் தேர்தல் - எர்டோகன் மீண்டும் வெற்றி
✦ பிரதமராகவும், அதிபராகவும் துருக்கியை 15 ஆண்டுகளுக்கு ஆண்ட ரிஸப் தயீப் எர்டோகன் தற்போது நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் துருக்கியின் அதிபரானார்.
✦ துருக்கியில் ஒருவர் இருமுறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற விதிமுறை இருந்தாலும், அண்மையில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு இதுதான் முதல் தேர்தல் என்பதால் அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு, வரும் 2028 ஆம் ஆண்டுவரை அவரால் அதிபர் பதவியை வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியா கலவரம்
✦ மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெரோம் இன விவசாய பழங்குடியினருக்கும் ஃபுலான இன நாடோடிப் பழங்குடியினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
வில்வித்தை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தீபிகாவுக்கு தங்கம்
✦ அமெரிக்காவின் சால்ட்லேக் சிட்டியில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கம் வென்றுள்ளார்.
✦ இதன்மூலம் 4 முறை உலகக் கோப்பையில் வெள்ளி வென்ற தீபிகா துருக்கியில் நடைபெறவுள்ள வில்வித்தை இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுவிட்டார்
✦ 4வது உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டி ஜீலை 16 முதல் 22-ஆம் தேதி வரை பெர்லினில் நடக்கவுள்ளது.
UAE அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு
✦ இந்தியா வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE) நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல் பின் சயீது அல் நயானை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து இருநாடுகள் உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடற்படை தளம் அமைக்கும் திட்டம்
✦ செஷல்ஸ் அதிபர் டோனி ஃபாரே 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மோடியுடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஷெஷல்ஸ் தீவின் அஸ்ஸம்ஷன் தீவில் கடற்படை தளம் அமைக்கும் திட்டம், இணையதள குற்றங்கள் தடுப்பதில் ஒத்துழைப்பு, பரஸ்பரம் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்துவது, செஷல்ஸ் தூதரக அதிகாரிகளுக்கான பயிற்சி, சரக்கு கப்பல் போக்குவரத்து விவரத் தகவல்கள் பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
✦ மேலும் செஷல்ஸ் நாட்டுக்கு ரூ.680 கோடி கடனுதவியும், அந்நாட்டுக்கு 2015ல் உறுதியளித்தபடி டார்னியர் விமானமும் வழங்கப்பட உள்ளதாக மோடி தெரிவித்தார். செஷல்ஸ் நாட்டின் தேசிய தினத்திற்குள் (ஜீன் 29) டார்னியர் விமானம் அந்நாட்டிற்கு சென்றுவிடும் என்று கூறியுள்ளார்.
✦ செஷல்ஸ் பிரதமர் இந்திய பிரதமருக்கு 2 ராட்சத ஆமைகள் பரிசளித்துள்ளார். அவை ஹைதராபாத் உயிரியல் பூங்கா பராமரிக்கப்பட உள்ளன.
உலக வெண்புள்ளி தினம்
✦ வெண்புள்ளி என்பது தொற்றுநோய் அல்ல ஹார்மோன் குறைபாட்டினால் தோல் தனது நிறத்தை இழந்து விடுகிறது. ஆனால் பலர் இதனை தொற்று நோயாகக் கருதுகின்றனர். அவ்வாறின்றி அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 25 ஆம் தேதியை உலக வெண்புள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்
✦ பாலியல் பலாத்காரம் கொத்தடிமையாக நடத்துதல், வல்லுறவு, கட்டாயத் திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பதால் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது கடந்த 2011-ல் இதே ஆய்வில் 4வது இடத்தில் இருந்தது.
✦ தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.
✦ இதில் ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
தேசிய இணைய நூலகம் தொடக்கம்
✦ மத்திய மனித வளத்துறை அமைச்சகம் டெல்லியில் இந்திய தேசிய இணைய நூலகத்தை ஜீன் 19 அன்று அதிகாரப் பூர்வமாக தொடங்கியுள்ளது.
✦ இந்த இணைய நூலகத்தை IIT காரக்பூர் வடிவமைத்துள்ளது. நாட்டின் 170 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட 200 மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. முகவரி ndl.iitkgp.ac.in
பர்மிங்காம் ஓபன் டென்னிஸ் - பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்
✦ விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் பெண்களுக்கான பங்மிங்காம் ஓபன் டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ஸ்லோவாகியாவின் மக்டலேனா ரிபாரி கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்
✦ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.60 கோடி செலவில் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என தமிழக முதலவர் K.பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
உலகில் பட்டினி கிடப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
✦ ஐநாவின் “நிலையான வளர்ச்சி இலக்குகள் 2018” என்ற அறிக்கையில் உலகில் பட்டினி கிடப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் (ஜீன் 20ல்) வெளியாகியுள்ளன.
✦ 2015ல் உலகில் 77.7 கோடியாக இருந்த பட்டினி கிடப்போர் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 3.8 கோடியாக அதிகரித்து 81.5 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3வது வருடாந்திர கூட்டம்
✦ “கட்டமைப்புக்கு நிதி திரட்டுதல் கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு” என்ற மையக்கருத்துடன் AIIB-ன் 3வது வருடாந்திர கூட்டத்தை மும்பையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
25.06.2018 TNPSC CURRENT AFFAIRS
செஸ் கிராண்ட்மாஸ்டர் - பிரகனாநந்தா
✦ உலகின் 2வது இளைய செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரகனாநந்தா (சென்னை) (12வயது 10 மாதங்கள், 13 நாட்கள்)
✦ முதலாமிடம் - செர்ஜெட் கார்ஜாகி (உக்ரைன்) (12 வயது, 7 மாதங்கள்)
நெருக்கடி நிலை பிரகடனம்
✦ 1975, ஜீன் 25ம் தேதி நாட்டில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி பிரகடனம் செய்தார்.
✦ 1975-ல் நெருக்கடி நிலைக்கு அனுமதியளித்த குடியரசு தலைவர் -
✦ 1975 ஜீன் 25 – 1977 மார்ச் 21 வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.
✦ இது 3வது தேசிய நெருக்கடி நிலையாகும்.
சரத்து 163
✦ 1993-ல் துப்புரவுத் தொழிலாளிகள் மனிதக் கழிவுகளை அகற்றுவது சட்டப்படி தடை செய்யப்பட்டது.
✦ மனிதர்களை மலம் அள்ளும் வேலைக்கு அமர்த்துவதற்கு தடை மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 2013.
FIFA World Cup
✦ 21வது FIFA கால்பந்து போட்டியை நடத்தும் நாடு ரஷ்யா (2018)
✦ 22வது FIFA கால்பந்து போட்டியை நடத்தும் நாடு (Host Country) – கத்தார் (2022)
✦ 23வது FIFA கால்பந்து போட்டியை நடத்தும் நாடுகள் - கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா (2026)
உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர்
✦அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மிகச்சிறிய கம்ப்யூட்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
✦ 0.3மி.மீ நீளம்
✦ இதற்கு முன்பு 1 மி.மீ நீளமுள்ள சிறிய கம்ப்யூட்டரை ஐபிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018
✦ இளம் தலைமுறையினரிடையே படைப்பாற்றலை உருவாக்கவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும் தேசிய அளவிலான திறன் போட்டியாகும்.
✦ கே.சி.ஜே என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுள் முதலிடம் பிடித்தனர்.
சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள்:
✦ சிறந்த படம் - தும்கரிசுலு
✦ சிறந்த நடிகை - ஸ்ரீதேவி (மாம்)
✦ சிறந்த நடிகர் - இர்ஃபான் கான் (இந்தி மீடியம்)
✦ சிறந்த பாடலாசிரியர் - மனோஜ் முன்ட்டஷிர்
✦ ஸ்டைல் ஐகான் விருது – க்ரீத்தி சனான்
மங்கோலியா குத்துச் சண்டை தொடர் - இந்தியாவிற்கு 9 பதக்கம்
✦ மங்கோலியாவில் நடைபெற்ற உலான்பர்ட்டார் கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்தியாவுக்கு (1 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்) 9 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
✦ இந்தியாவின் மந்தீப் ஜங்க்ரா மட்டுமே தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஹாலே ஓபன் டென்னிஸ்
✦ ஜெர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் குரோசியாவின் போர்னா கோரிச் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
டெல்லியில் 3வது கட்ட மெட்ரோ சேவை
✦ டெல்லியின் முந்தா பகுதியிலிருந்து ஹரியானாவின் பகதூர்கர் பகுதி வரையிலான புதிய மெட்ரோ சேவையை (11கி.மீ) ஜீன்-24ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
24.06.2018 TNPSC CURRENT AFFAIRS
பரபரப்பான சர்வதேச வான்வழித் தடம்
✦ 2017-18-ம் நிதியாண்டில் மிகவும் பரபரப்பு மிகுந்த 10 சர்வதேச வான்வழித்தட பட்டியலில் துபை-மும்பை முதலிடத்தை (25 லட்சம் பயணிகள்) பிடித்துள்ளது.
✦ இரண்டாமிடம் துபை-டெல்லி (20 லட்சம் பயணிகள்)
✦ மூன்றாமிடம் துபை-கொச்சி (10 லட்சம் பயணிகள்)
தூய்மை நகரங்கள் பட்டியல்
✦ நகர்புற உள்ளாட்சி மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மை, பொதுமக்கள் கருத்து, ‘ஸ்வச்சத்தா’ செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீதான தீர்வு, திறந்தவெளியில் மலம் கழித்தலை தடுப்பது போன்ற அம்சங்களின் மூலம் மதிப்பிடப்பட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது.
✦ முதலிடம் -இந்தூர், இரண்டாமிடம் -போபால், மூன்றாமிடம் -சண்டிகர், 100வது இடத்தில் சென்னை உள்ளது.
பாரத் வாஹினி கட்சி
✦ ராஜஸ்தானில் ‘பாரத் வாஹினி கட்சியை’ தொடங்கியவர் - கான்ஷிராம் திவாரி
இந்தியா – கியூபா இடையே ஒப்பந்தம்
✦ உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-கியூபா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
✦ இந்தியாவில் திறன்மிக்க வெள்ள மேலாண்மைக்கு உதவ கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
போர் நினைவகம்
✦ முதல் போரில் உயிர்நீத்த இந்தியர்களின் நினைவாக – போர் நினைவகம் (War Memorial) நிறுவப்படும் இடம் - Villers Guislain (பிரான்ஸ்)
யோகா கிராமம்
✦‘யோகா கிராமம்’ அமையவுள்ள இடம் - விஷ்வபாரதி பல்கலைக்கழகம் (மேற்கு வங்காளம்)
வியட்நாமில் BHEL கிளை
✦ BHEL நிறுவனத்தின் முதல் பிரதிநிதித்துவ அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ள இடம் - ஹனாய் (வியட்நாம்).
பிளாஸ்டிக்கிற்கு தடை
✦ தமிழகத்தில் 2019, ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
✦ ஜீலை 1, 2018 முதல் சேலத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
✦ மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக்கு தடை விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
SBI -ன் நிர்வாக இயக்குநராக அர்ஜித்பாசு நியமிக்கப்பட்டுள்ளார்
✦ மோகன்புரா நீர்ப்பாசன திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் - மத்திய பிரதேசம்
✦ தமிழகத்தில் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவையை தொடங்க தேர்வு செய்யப்பட்ட இடங்கள்-ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரம்.
23.06.2018 TNPSC CURRENT AFFAIRS
2018 சாகித்ய அகாடமியின் இளைஞர், சிறார் இலக்கிய விருதுகள்
✦ 2018 யுவ புரஷ்கார் விருது பெறுபவர் சுனீல் கிருஷ்ணன் (அம்பு படுக்கை-சிறுகதை)
✦ 2018 பால சாகித்ய புரஷ்கார் விருது பெறுபவர் கிருங்கை சேதுபதி (சிறகு முளைத்த யானை – கவிதை)
காவிரி மேலாண்மை ஆணையம்
✦ இவ்வாணையம் 9 உறுப்பினர்களை கொண்டது
✦ தலைவர் -மசூத் ஹீசைன்
✦ தலைமையிடம் - டெல்லி
✦ மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் - 1956
✦ சரத்து 262-ன் படி இச்சட்டம் உருவாக்கப்பட்டன.
6 நாள் பயணமாக இந்தியா வந்தார் செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி
✦ இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ் ஆகும்.
✦ இதில் 155 தீவுகள் உள்ளன.
✦ 1976-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.
தேசிய சுகாதார இயக்கத்தின் 11வது ஆய்வறிக்கை
✦ 2013-க்கு பின்பு MMR (தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி, ரூபெல்லா) இந்தியாவில் 22% குறைந்துள்ளன.
✦ மகப்பேறு இறப்பு விகிதம் (2011-13)-167
✦ மகப்பேறு இறப்பு விகிதம் (2014-16)-130 ஆக குறைந்துள்ளது.
தேசிய அளவிலான பழங்குடி அருங்காட்சியகம்
✦ தேசிய பழங்குடியின அருங்காட்சியகம் தில்லியில் அமைக்க பழங்குடியின விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
✦ குஜராத்தில் நர்மதா மற்றும் ராஞ்சியில் பிர்ஸா முண்டா சிறையில் அமைக்கப்பட்டு வருகிறது.
சூரியனை போன்று நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்
✦ அபிஜித் சக்கரவர்த்தி தலைமையிலான அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி கூட விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
✦ பி.ஆர்.எஸ் மேம்பட்ட தேடல் (பாராஸ்) கருவியின் உதவியுடன் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
★ பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக மகாராஷ்டிர மாநில அரசுக்கும், கனடாவின் கியூபர்க் மாகாணத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
★ திருமதி உலக அழகி பட்டத்தை வென்றவர் - ஜெயஸ்ரீ மகேஷ்(கோவை)
22.06.2018 TNPSC CURRENT AFFAIRS
உலக வங்கியின் வறுமை வரையறை:
✦ நாளொன்று 1.25 டாலர் (ரூ.85)-க்கும் குறைவாக வருவாய் பெறுபவர்களை வறுமையில் வாடுபவர்கள் என்று உலக வங்கி வரையறுத்திருக்கிறது.
யோகா-கின்னஸ் சாதனை
✦ 2018, ஜீன் 21ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சூரினாம் வளர்ச்சிக்கு இந்தியா ரூ.247 கோடி நிதியுதவி
✦ லத்தீன் அமெரிக்க நாடான சூரினாமுக்கு 3 நாள் சுற்று பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார்.
✦ ரூ.247 கோடி நிதியுதவி வழங்குவதாக ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
✦ தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவ மையம் அமைத்தல், தூதரக அகாதெமியின் இடையேயான ஒத்துழைப்பு, தேர்தல் போன்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
✦ சூரினாம் பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். குடியரசு தலைவர் அந்தஸ்தில் இருக்கும் ஒரு வெளிநாட்டுத் தலைவர் அங்கு உரையாற்றுவது இது முதல் முறையாகும்.
நேபாளத்தில் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றவர் - கே.பி.சர்மா ஓலி
✦ கே.பி சர்மா ஓலி பதவியேற்ற பின்பு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட நாடு-சீனா
✦ இருதரப்பு உறவை மேம்படுத்த 8 முக்கிய ஒப்பந்தங்கள் சீனாவும் நேபாளமும் மேற்கொண்டுள்ளன.
மும்பை-புனே ஹைபர்லூப் திட்டம்
✦ ஹைபர்லூப் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் விர்ஜின் ஹைபர்லூப் ஒன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
✦ இத்திட்டத்தினால் மும்பையில் இருந்து புனேவுக்கு மணிக்கு சுமார் 700 மைல் வேகத்தில், 25 நிமிடத்தில் செல்ல முடியும்.
உலகில் 100 கோடிக்கு மேற்பட்ட துப்பாக்கிகள்: ஐ.நா ஆய்வறிக்கை
✦ சட்டப்பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் பொதுமக்களில் அதிகமாக துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடம், இரண்டாவது இடத்தில் இந்தியா, மூன்றாவது இடத்தில் சீனா உள்ளது.
✦ இராணுவத்தில் அதிகமாக துப்பாக்கிகள் வைத்திருக்கும் வரிசையில் முதலிடம் ரஷ்யா, 2 வது இடத்தில் சீனா உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
✦ அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய கிளையான அகியுஸ் (இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா), ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கிளையான ஐ.எஸ்.ஐ.எஸ்.கே (ஈராக்கின் இஸ்லாமிய அரசு (ம) ஷாம் கொராசன்) அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இலங்கையில் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.155 கோடி நிதியுதவி இந்தியா வழங்கியுள்ளது.
21.06.2018 TNPSC CURRENT AFFAIRS
ஜம்மு – காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்:
✦ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சட்டத்தின் 92வது பிரிவின் படி ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
✦ தனக்கென தனி அரசியலமைப்பை கொண்ட ஒரே மாநிலம் - ஜம்மு காஷ்மீர்.
✦ ஜம்மு காஷ்மீரின் தற்போதைய ஆளுநர் N.N.வோரா
✦ ஜம்மு காஷ்மீரின் புதிய தலைமை செயலாளராக சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
✦ ஜம்மு காஷ்மீரில் கடந்த 40 ஆண்டுகளில் 8வது முறையாக ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது
ஜீன் 21 சர்வதேச யோகா தினம்
✦ 4வது சர்வதேச யோகா தினத்தையொட்டி டேராடூனில் நடைபெறும் நிழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
✦ கருப்பொருள் - ‘அமைதிக்கான யோகா’
✦ ஐ.நா.பொதுச்சபை 2014 டிசம்பரில் ஜீன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரித்தது.
✦ 2015ம் ஆண்டு ஜீன் 21ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை
✦ தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1500 கோடி செலவில் அமையவுள்ளது.
✦ மத்திய பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் ‘பிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, ஹிமாச்சல பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது
✦ ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் 2006-ல் ஏற்படுத்தப்பட்டது
✦ இவ்வாணையத்தில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
✦ ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தற்போதைய தலைவர் - Vojislav Suc
அதிக கோல் அடித்த கால்பந்து வீரர்
✦ சர்வதேச கால்பந்தில் 85 கோல்கள் அடித்த முதல் ஐரோப்பிய வீரர் என்ற சாதனையை படைத்தவர் கிரிஸ்டியானா ரொனால்டோ (போர்ச்சுக்கல்) ஆவார்.
லக்ஸம்பர்க் பிரதமருடன் சுஷ்மா பேச்சுவார்த்தை
✦ லக்ஸம்பர்க் சென்றுள்ள முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆவார்.
மிஸ் இந்தியா 2018 அழகிப் போட்டி
✦ மும்பையில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் - அனுகீர்த்தி வாஸ் (தமிழ்நாடு)
✦ 2வது இடம் - மீனாட்சி சௌத்ரி (அரியானா)
✦ 3வது இடம் - ஷ்ரேயாராவ் (ஆந்திரா)
✦ உலக அழகி – 2018 போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளவர் - அனுகீர்த்தி வாஸ்
✦ 2017-ன் மிஸ் இந்தியா – மனுஷி ஷில்லார்
அவ்வையார் விருது
✦ பெண்கள் மேம்பாடு, சமூக சீர்திருத்தம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் பெண்களுக்கு அவ்வையார் விருது 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
✦ 2018 ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை பெறுபவர் - சின்னப்பிள்ளை பெருமாள் இவர் களஞ்சியம் பெண்கள் சுய உதவிக் குழு அமைப்பின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு ரூ.1 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது
✦ ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது தொடங்கப்பட்ட ஆண்டு 2000
✦ மகளிர் மேம்பாட்டு பணிகளை பாராட்டி மத்திய அரசால் இவ்விருது வழங்கப்படுகிறது.
மரம் நடும் மாணவர்களுக்கு ரூ.50 ஊக்கத்தொகை
✦ மரம் நடும் மாணவர்களுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
✦ சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் (6ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள ஹரியானாவில்) மரம் நடும் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.50 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
M.S.சுவாமிநாதனுக்கு டாக்டர் பட்டம்
✦ குவாலியரிலுள்ள (மத்திய பிரதேசம்) ITM பல்கலைக்கழகம் M.S.சுவாமிநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
கஞ்சா
✦ கஞ்சாவை பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கி பயன்படுத்தவும் கனடா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
✦ உருகுவே நாடு 2013 ம் ஆண்டு கஞ்சா விற்பனைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தது.
தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா
✦ மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் பதவிணை ராஜினாமா செய்துள்ளார். இவர் 2014 ஆம் அண்டு அக்டோபர் மாதம் இப்பதவியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புனேயில் விவசாய மாநாடு
✦ மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் விவசாய மாநாடு (ஜீன் 21ல்) தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார்.
ஹீண்டாய் ஆடி நிறுவனங்கள் ஒப்பந்தம்
✦ Fuel cell தொழில்நுட்பத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்களை உருவாக்கும் வகையில் ஆடி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஹீண்டாய் மோட்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
★ சிக்கிம் அரசின் விளம்பர தூதராக ஏ.ஆர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்
20.06.2018 TNPSC CURRENT AFFAIRS
உலகின் பணக்காரர் பட்டியல்:
போர்ப்ஸ் பத்திரிக்கை
• அமேசான் நிறுவனத்தின் ஜெப்பேசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். சொத்து மதிப்பு 141.9 பில்லியன் டாலர்.
• ஜெப்பேசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994ம் ஆண்டு தொடங்கினார்.
• 2வது இடம் - மைக்ரோசாப்ட் நிறுவனர் - பில்கேட்ஸ். இவரின் சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர்.
• 5வது இடம் - மார்க் ஷீகர்பெக் (பேஸ்புக் நிறுவனர்)
• 22வது இடம் - முகேஷ் அம்பானி
Sanskar Programme
• மூட நம்பிக்கைகளுக்கு எதிராக Sanskar என்ற பிரச்சாரம் தொடங்கப்படும் என அஸ்ஸாம் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேர சேவை – திரிபுரா அறிமுகம்
• பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்குவதற்காக 24 மணி நேர மொபைல் போலீஸ் சேவையை திரிபுரா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
Auto Disable Syringes
• நோய் தொற்றை தடுப்பதற்கும் அனைத்து மருத்துவ பயன்பாட்டிற்காகவும் தானாக முடங்கிவிடவல்ல மருத்துவ ஊசிகளை (Auto Disable Syringes) பயன்படுத்தும் இந்தியாவின் முதலாவது மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவாகியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி தரவரிசைப் பட்டியல்
1st – நாக்பூர்
2nd– வதோரா
14rd– கோவை
37th– சென்னை
கின்னஸில் இடம்பெற்ற உலகின் மிக வயதான ஒராங்குட்டான் மரணம்
• ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள 62வயது ஒராங்குட்டானின் பெயர் புயான். இது தற்போது மரணமடைந்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்
• வரும் ஜீலை 27 ம் தேதி பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கோள் வருகிறது.
• இந்த அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
அமெரிக்கா-தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சி ரத்து
• சிங்கப்பூரில், அமெரிக்கா-வடகொரியா இடையே அணு ஆயுத ஒழிப்பு உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த கூட்டு இராணுவப் பயிற்சி இரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் -சம்மிட்
• அமெரிக்காவின் ஓக் ரிடேஜ் தேசிய சோதனைக் கூட்டத்தில் மிக அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
• சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் முன் இருந்த சூப்பர் கம்ப்யூட்டரை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டது.
இந்தியாவுடன் இராணுவ உறவுகளை பலப்படுத்தும் மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்
• அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ல்அறிவித்தது.
• அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மசோதாவுக்கு மேல்சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.
19.06.2018 TNPSC CURRENT AFFAIRS
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம்
✦ உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த, அபார சாதுர்யத்துடன் செயல்படக்கூடிய அதிவேக கணினியை அமெரிக்க நாட்டின் எரிசக்தி துறையைச் சேர்ந்த ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘சம்மிட்’ எனப் பெயர்சூட்டப்பட்ட இந்த கணினியை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தக் கணினி நொடிக்கு 2 லட்சம் டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = ஒரு லட்சம் கோடி) கணக்கீடுகளை செய்ய வல்லது.
ஐசிஐசிஐ வங்கிக்கு புதிய அதிகாரி நியமனம்
✦ விடியோகான் நிறுவனத்துக்கு கடன் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை முடிவடையும் வரையில் தலைமைச் செயலதிகாரி சாந்தா கெச்சாருக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
✦ தற்போது ஐசிஐசிஐ வங்கியில் புதிய CEO -வாக சந்தீப் பாக்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிரீஸ் நாட்டில் ராம்நாத்கோவிந்த்
✦ ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு ஜீன் 16 ஆம் தேதி முதல் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
✦ இதன்படி கிரீஸ் நாட்டுக்கு சென்ற குடியரசுத்தலைவர் அந்நாட்டு அதிபர் புரோகோபிஸ் பாவ்லோபௌலோவையம் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸையும் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
✦ கடந்த 11 ஆண்டுகளில் கிரீஸ் சென்ற முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு
✦ அரசுமுறைப் பயணமாக இத்தாலி சென்றுள்ள இந்திய வெளியுறவுத்தறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டுப் பிரதமர் ஜிஸெப்பே கான்டேவை சந்தித்து பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும், இணையவழி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி ஒப்புதல் தெரிவித்தனர். இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் என்ஸோ மோவெரோவையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார்.
✦ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்.
கேரளத்தில் ஆர்டர்லி முறை ஒழிப்பு
✦ ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட ஆர்டர்லி முறை (உயரதிகாரிகளின் வீடுகளில் தனிப்பட்ட உதவிகளை புரிய இளநிலை காவலர்களை பணியமர்த்தும் முறை) முற்றிலும் ஒழிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
பாஜகஆதரவு வாபஸ் - கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளிக்கிறார் மெகபூபா முப்தி
✦ கடந்த 2015-ல் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில்(87 இடங்கள்) ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும் பாஜக 28 இடங்களையும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களையும் இதரகட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.
✦ ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சி பாஜக ஆதரவுடன் 1-3-2015 ஆட்சி அமைத்தது முப்தி முகமது சயீத் முதல்வராகவும், பாஜக தரப்பில் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். பின்னர் அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வரானார். இந்நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக அறிவித்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்ய ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி முடிவெடுத்துள்ளார்.
தண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும்
✦ அமெரிக்காவின் கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் முருங்கை மரம் தண்ணீரை சுத்தப்படுத்த உதவும் என கண்டுபிடித்துள்ளனர்.
காற்று மாசு குறித்து ஆய்வு – சென்னை விஞ்ஞானிக்கு தைவான் விருது
✦ பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு தைவானின் டாங் விருது வழங்கப்பட்டது.
✦ அதில் சென்னையைச் சேர்ந்த வீரபத்ரன் ராமநாதன் என்ற விஞ்ஞானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காற்றுமாசு குறித்து நடத்திய ஆய்வுக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ஒருமில்லியன் டாலர் (ரூ.6 ½ கோடி) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவின் அதிபராகிறார் இவான் டியூக்
✦ மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் செனட் உறுப்பினர் இவான் டியூக் மற்றும் முற்போக்காளர் கட்சி சார்பில் முன்னாள் மேயர் மற்றும் கொரில்லா போராளியாக இருந்த டாவோ பெட்ரோ போட்டியிட்டனர்.
✦ இதில் இவான் டியூக் (41 வயது) வெற்றி பெற்று, அந்நாட்டின் வரலாற்றில் இளவயது அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
உலகின் மிக ஆபத்தான சுற்றுலாத் தளங்கள்
✦ உலகின் மிக பிரபலமான சர்வதேச நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. (அதிக எண்ணிக்கையிலான பயணக் காப்பீடு பெறுவதை வைத்து)
✦ அதில் தாய்லாந்து நாடு முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.தனபாலன் காலமானார்
✦ கடந்த 2005 ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த வி.தனபாலன் மூத்த நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
✦ கடந்த 2015 மே 1ல் ஓய்வு பெற்றார். இவர் (ஜீன் 18ல்) நேற்று மாரடைப்பால் காலமானார்.
18 MLA தகுதி நீக்க வழக்கு – 3வது நீதிபதியாக எஸ்.விமலா நியமனம்
✦ தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு இறுதித் தீர்ப்பு அளிக்க மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலா (2002-ல் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி) நியமிக்கப்பட்டுள்ளார்.
18.06.2018 TNPSC CURRENT AFFAIRS
ஸ்டட்கர்ட் டென்னிஸ் - ஃபெடரர் பட்டம் வென்றார்
✦ ஸ்டட்கர்ட் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் கனடாவின் மிலோஸ் ரனோயிக்கை வீழ்த்திபட்டம் வென்றார். இது ஃபெடரர் பெறும் 98வது ஏடிபி பட்டம் ஆகும். இந்த வெற்றி மூலம் அவர் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
அகில இந்திய பாட்மிண்டன் தரவரிசைப் போட்டி – சௌரவ் வர்மா, உஜிதா ராவ் முதலிடம்
✦ இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் பெங்களுருவில் நடைபெற்ற யோனக்ஸ் -சன்ரைஸ் அகில இந்திய பாட்மிண்டன் தரவரிசைப் போட்டியில் சௌரவ் வர்மா, உஜிதா ராவ் ஆகியோர் பட்டம் வென்றனர்.
ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சௌரவ் வர்மா, பிரதுல் ஜோஷியை வீழ்த்தி பட்டம் வென்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய் உஜிதா ராவ், ரிதுபர்ண தாஸை வீழ்த்தி பட்டம் வென்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜீன் - ராமசந்திரன் இணை கிருஷ்ணா-துருவ் இணையை வென்றது.
மகளிர் இரட்டையர் பிரிவில் ரிதுபர்ணா – ஆராதா இணை சிம்ரன் சிங்கி – ரித்திகா இணையை வென்றது.
கலப்பு இரட்டையரில் துருவ் மேகனா இணை, அருண்-ஆராதா இணையை வென்றது.
4 நாடுகள் சுற்றுப்பயணம் தொடங்கினார் - சுஷ்மா
✦ இத்தாலி, பிரான்ஸ், லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய 4 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக தனது சுற்றுப்பயணத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கியுள்ளார்.
சாந்தா கெச்சார் விவகாரம் - ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி
✦ ICICI வங்கி தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கெச்சார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தலைமை தாங்குமாறு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீராமகிருஷ்ணாவை ICICI வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் இந்திய சுற்றுலா கண்காட்சி
✦ இந்தியாவின் சுற்றுலாத் துறையைப் பிரபலப்படுத்தவும் இந்தியாவுக்கான அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கிலும் அமெரிக்காவில் 5 நாள் சாலை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
✦ அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, ஹவுஸ்டன் உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் இந்தியா சார்பாக சுற்றுலா சாலைக் கண்காட்சிகள் இம்மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘Incredible India Road Show’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை இந்தியாவின் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் K.J.அல்போன்ஸ் மற்றும் இத்துறை சார்ந்த உறுப்பினர்கள் பலர் பங்கேற்று நடத்துகின்றனர்.
சுற்றுலாத் துறைக்குப் புதிய இணையம்
✦ இந்திய சுற்றுலாத்துறைக்காக NEW INCREDIBLE INDIA இணையதளத்தை மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் அல்ஃபோன்ஸ் புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
✦ ஆன்மிகம், பாரம்பரியம், சாகசம், கலாச்சாரம், யோகா, ஆரோக்கியம், உள்ளிட்ட பெரும் அனுபவங்களை சுற்றியதாக இந்தியாவை ஒரு முழுமையான இடமாக இந்த இணையம் எடுத்துக்காட்டும்.
✦ மேலும் இந்த இணையதளம் இந்தியாவை கண்டிப்பாகக் காண வேண்டிய இடமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே போக்குகள் மற்றும் தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்தில் பின் தொடருகிறது.
ஆயுஷ்மேன் பாரத் - தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் 20 மாநிலங்கள் கையெழுத்து
ஆயுஷ்மேன் பாரத் - தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு இந்த ஆண்டின் பட்ஜெட்டில் அறிவித்தது.
இத்திட்டத்தை ‘மோடி கேர் திட்டம்’ என்றும் அழைத்தனர்.
தற்போது இந்த திட்டத்தை 20 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாக ஜே.பி நட்டா கூறியுள்ளார்.
17.06.2018 TNPSC CURRENT AFFAIRS
உலக தந்தையர் தினம் (ஜீன் 17)
✦ தந்தையர்களைக் கௌரவிப்பதற்காக தந்தையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் உலகின் 52 நாடுகளில் ஜீன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலும் கொண்டாடப்படுகிறது.
ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு – ஆய்வறிக்கை வெளியிட்டது நிதி அயோக்
✦ இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவை மற்றும் மாநிலங்களின் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதன்முதலாக நிதி அயோக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
✦ மத்திய நீர்வளத்துறை மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் அமைச்சகங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ‘ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு’ என்ற அந்த அறிக்கையை நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். இதன்படி 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
✦ நீர் மேலாண்மை விவகாரத்தில் இந்திய மாநிலங்களை பொது மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் என இரண்டாக நிதி அயோக் பிரித்துள்ளது. இதில் பொது மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மத்திய பிரதேசம் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.
✦ வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா முதலிடத்திலும், இமாச்சலபிரதேசம், சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஜார்கண்ட், ஹரியானா, உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் மிகவும் மோசமான நீர் மேலாண்மையைக் கொண்டிருப்பதாக நிதி அயோக்கின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பின் வேர்ல்டு பேக்ட்டிக் வெளியீடு
✦ அமெரிக்க உளவு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) 1962 முதல் வேர்ல்டு புக் என்ற அறிக்கையை அமெரிக்க எம்பிக்களுக்கு உதவும் வகையில் (‘உலக உண்மைத் தகவல் நூல்’) வெளியிடுகிறது. இது கடந்த 1975 ஆம் ஆண்டிலிருந்தே மக்களின் பார்வைக்கு வந்தது.
✦ இதில் பல்வேறு நாடுகளின் வரலாறு அங்கு செயல்படும் அமைப்புகள் மத அமைப்புகள், அரசியல் அமைப்புகள் மக்கள், அரசுகள், கட்சிகள், பொருளாதாரம், எரிசக்தி, புவியியல், தகவல்தொடர்பு, போக்குவரத்து ராணுவம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
✦ அந்த வகையில் இந்தியாவில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் ஆகியவை மதரீதியான தீவிரவாத அமைப்புகள் என தெரிவித்துள்ளது.
✦ அதே சமயம் அரசியல் ரீதியாக பின்புலத்திலிருந்து பல்வேறு நெருக்கடியை அரசுக்கு அளிக்கும் குழுக்கள், ஆனால் தேர்தலில் போட்டியிடாத அமைப்புகள் என்ற அடிப்படையில் RSS அமைப்பைப் பட்டியலிட்டுள்ளது.
✦ மேலும் காஷ்மீரின் ஹீரியத் மாநாட்டுக் கட்சி, ஜாமியாத் உலேமா இ ஹிந்த் ஆகியவை அரசியல் நெருக்கடி தரும் அமைப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூகினியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்
✦ பாப்புவா நியூகினியா நாட்டின் சதர்ன் ஹைலேண்ட் மாகாண ஆளுநர் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அந்த மாகாணத்திற்கு தொடர்ந்து 9 மாதங்கள் நெருக்கடி நிலை அமலில் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் பீட்டர் ஓ நீல் அறிவித்துள்ளார்.
நிலக்கரித்துறை அமைச்சகத்தின் செயலாளராக இந்தர் ஜித் சிங் நியமனம்
✦ அமைச்சரவைச் செயலகத்தின் செயலர் (ஒருங்கிணைப்பு), இந்தர் ஜித் சிங் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் செயலராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
16.06.2018 TNPSC CURRENT AFFAIRS
மேயர் பதவிக்கு முதல் முறையாக கருப்பின பெண் தேர்வு
✦ ஆமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகர மேயர் பதவிக்கு, கருப்பினத்தைச் சேர்ந்த லண்டன் பிரீட் (சான்பிரான்சிஸ்கோ நிர்வாக வாரிய தலைவர்) என்னும் பெண் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக வழித்தடம் குறித்த திரைப்படம்
✦ பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக வழித்தட திட்டம் குறித்து ‘The Journey’ (பயணம்) என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கின்றன.
✦ இந்த திரைப்படத்திற்கு வாங் ஹைபிங்தான் திரைக்கதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம்
✦ நிதி அயோக் அமைப்பின் நிர்வாகக் குழுவின் 4வது கூட்டம் தில்லியில் (ஜீன் 17ல்) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
✦ அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ள இக்குழு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி
✦ சர்வதேச கபடி பெடரேஷன் சார்பில் துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் 6 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி வரும் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை துபாயில் அல்வாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது. (இந்தியா, பாகிஸ்தான், கென்யா, ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா)
விண்ணில் செலுத்தப்டும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்
✦ இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருத்துறை ஆராய்ச்சி போன்றவற்றில் இவரது பங்கு மகத்தானது.
✦ பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்
✦ இவரின் குரல் அடங்கிய பாடல் விண்வெளியில் செலுத்தப்பட்ட உள்ளது. 6 நிமிடங்கள் அடங்கிய இந்த பாடலின் இடையில் ஹாக்கிங்கின் குரல் உள்ளது.
✦ இது ஐரோப்பிய விண்வெளி நிலையத்திலிருந்து செபிரியாஸ் ஆண்டனா வழியாக பூமியிலிருந்து 3500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிளாக் ஹோலிற்கு அனுப்பப்படுகிறது.
அஞ்சல்துறை சார்பில் சென்னையில் சிறப்பு தபால் கண்காட்சி
✦ ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில் அஞ்சல்துறை சார்பில் ‘கால்பந்து மற்றும் ரஷ்யா’ என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல் தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாணவருக்கு ஜெர்மனி விருது
✦ நெதர்லாந்து நாட்டில் உள்ள டெல்ஃப்ட் தொழில்நுட்பம் பல்கலைக்கழகத்தில் பயிலும் கவுதம் ராமின், சூரிய ஒளியை நேரடியாக மின்சார கார்களுக்குப் பயன்படுத்துவது குறித்த ‘டாக்டர்’ படத்துக்கான ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார் இதற்கு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் ‘மின்சார வாகனத்துறையில் புதிய தொழில்நுட்பத்துக்கான விருது’ வழங்கப்பட்டது.
புவிசார் குறியீடு – மேற்குவங்க மாநிலம்
✦ மேற்குவங்க மாநிலத்தின் புருலியாவை சேர்ந்த சாவ் முகமூடிக்கும் (Chau mask of purulia), குஷ்மாண்டியை சேர்ந்த மர முகமூடிக்கும் (Wooden mask of Kushmandi), வங்காளத்தின் டோக்ராவிற்கும் (Dokras)> படாசித்ராவிற்கும் (Patachitra), மதுர்கதிக்கும் (ஒரு வகையான பாய் - Madhurkathi)
✦ இந்திய புவிசார் குறியீடு பதிப்பகம் (ம) அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (Geographical Indication Registry and Intellectual property India) புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு விருது
✦ சமூக நல்வாழ்வு களத்தில் ஆற்றிய மாபெரும் பங்களிப்பிற்காக தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா அமைப்பால் யுவராஜ் சிங்கிற்கு சமூக நல்வாழ்விற்கான ஆண்டினுடைய மிகவும் சிறந்த நபர் விருது (Most Inspiring Icon of the year) வழங்கப்பட்டு உள்ளது.
DRDO தலைவராக சஞ்சய் மித்ரா நியமனம்
✦ பாதுகாப்பு ஆராய்ச்சி (ம) மேம்பாடு அமைப்பு (Defense Research and development Organization) என்பது ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைவராக சஞ்சய் மித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
DRDO தலைமையிடம் - டெல்லி
1958ல் நிறுவப்பட்டது
தமிழர் உருவாக்கிய Calzy3 செயலிக்கு சிறந்த வடிவமைப்புக்கான விருது
✦ ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய மேம்பாட்டாளர்கள் கருத்தரங்கில் (WWDC 2018) சென்னையை சேர்ந்த ராஜா விஜயராமன் உருவாக்கிய Calzy 3 செயலி சிறந்த வடிவமைப்புக்கான விருது பெற்றுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய CEO -ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் - கலிபோர்னியா
டிஜிட்டல் இந்தியா
✦ நாட்டு மக்கள் அனைவரும் அரசின் சேவைகளை இணையதளம் மூலமாக நேரடியாக பெறுவதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது.
✦ டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய அறிவுசார் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் 1700 கல்வி (ம) ஆராய்ச்சி நிறுவனங்கள் நூலகங்கள், அரசு அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் - 2002
பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் - மௌலானா ஃபஸீல்லா
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம்
✦ இது ஒரு மருத்துவ காப்பீடு திட்டமாகும்.
✦ இத்திட்டத்தின்படி ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் வரை பயன்பெறும்
✦ ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கையின் ஆசிரியர் - சுஜாத் புஹாரி சுட்டு கொல்லப்பட்டார்.
முல்லை பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினர் ஆய்வு
✦ 5 உறுப்பினர்களை கொண்டது
✦ இக்குழுவின் தலைவர் - ராஜேஷ் (மத்திய அரசின் நீர்வள ஆதார அமைப்பின் செயற்பொறியாளர்).
15.06.2018 TNPSC CURRENT AFFAIRS
ஹிமாச்சல், உத்ரகாண்ட் நிலநடுக்கம்
✦ ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் மாநிலங்களில் (ஜீன் 14ல்) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
✦ ஹிமாச்சலின் சம்பா மாவட்டத்தில் ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளியும், உத்ரகாண்ட், உத்ரகாளி மாவட்டத்தில் 4 புள்ளி அளவும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பேறுகால விடுப்பு – ஆண்களுக்கு சலுகை காட்டாத நாடுகளின் பட்டியலில் இந்தியா
✦ இந்தியா உள்பட 90க்கும் மேற்பட்ட நாடுகள், பிரசவ காலத்தின் போது ஆண்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை என்று UNICEF அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர் திருமணம் 7 நாள்களுக்கு பதிவு செய்யப்பட வேண்டும்
✦ இனிவரும் காலத்தில் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்களது திருமணத்தை 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
✦ கடந்தவாரம் இப்பதிவானது 48 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியிருந்தார். தற்போது திருமணப் பதிவிற்கான காலம் 7 நாள்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளது.
✦ தற்போதைய நடைமுறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது திருமணத்தைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜகதல்பூர் - ராய்ப்பூர் இடையே விமான சேவை தொடக்கம்
✦ பிரதமர் நரேந்திர மோடி (ஜீன் 13ல்) சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் சென்று நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைத்தார். மேலும் தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார்.
✦ பின்னர் ஜகதல்பூர் - ராய்ப்பூர் இடையே விமான சேவையை தொடங்கி வைத்தார். பின் பிலாய் நகருக்கு சென்று விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
✦ மேலும் ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் கிராம பஞ்சாயத்துக்களை இணையத்தின் வழியாக ஒன்றிணைக்கும் பாரத் நெட் சேவையின் இரண்டாவது கட்டப்பணிகளை தவக்கி வைத்து இதற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
✦ பிலாய் IITக்கான புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
மணப்பாறை, திண்டிவனம் தொழில் பூங்காக்களில் ரூ.148 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
✦ மணப்பாறை, திண்டிவனம் வட்டங்களில் அமைக்கப்படும் சிப்காட் தொழில் பூங்காக்களில் 148 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதி உருவாக்கப்படும் என்று முதல்வர் கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
✦ திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தில் உள்ள கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி கிராமங்களிலும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திலுள்ள பெலாக்குப்பம், கொள்ளார் மற்றும் வெண் மணியத்தூர் கிராமங்களிலும் இந்த தொழில் பூங்காக்கள் அமைய உள்ளன.
உலகின் மிக நீளமான வட்ட வடிவ கண்ணாடி பாலம் திறப்பு
✦ சீனாவில் மலைப்பாதைகளுக்கு இடையே அந்தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பாலங்கள் மிகவும் பிரபலமானவை.
✦ இந்த கண்ணாடி பாலம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஃபுக்ஸி (FUXI) மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான வட்ட வடிவ கண்ணாடி பாலமாகும்.
சென்னையில் Trans Union தொழில்நுட்ப மையம்
✦ சென்னை டிஎல்எஃப் சைபர் சிட்டியில் Trans Union நிறுவனம் தனது உள் அக மையத்தை (GIC) அமைத்துள்ளது இந்நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியில் அமைக்கும் முதல் தொழில்நுட்ப மையமாகும்.
✦ தகவல் பாதுகாப்பு, தகவல் ஆய்வு, மென்பொருள் உருவாக்கம் போன்றவற்றுக்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளதாக Trans Union தெரிவித்துள்ளது.
✦ உலகளாவிய கடன் தர மதிப்பீடு மற்றும் தகவல் வழங்கும் நிறுவனமான Trans Union கடந்த 17 ஆண்டுகளாக ‘சிபில்’ என்ற பெயரில் கடன் தர மதிப்பீடு சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகிறது. கடன் தர மதிப்பீட்டு சேவைகளின் மூலம் வங்கிகள் கடன் வழங்க எடுத்துக்கொள்ளும் கால அளவு குறைந்திருப்பதாக Trans Union சிபில் தலைமைச் செயல் அதிகாரி சதிஷ் பிள்ளை கூறியுள்ளார்.
வெனிசுலா துணை அதிபராக டெர்லி ரொட்ரிகள் தேர்வு
✦ வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மீண்டும் மதுரோ அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
✦ அந்நாட்டின் துணை அதிபராக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான டெல்சி ரொட்ரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
14.06.2018 TNPSC CURRENT AFFAIRS
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு மசோதா - இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
✦ இலங்கை அரசின் புள்ளி விவரத்தின்படி, விடுதலை புலிகள் அமைப்புடன் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் போது, வடக்குப் பகுதியில் 20000 மக்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
✦ போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்று இலங்கைக்கு தொடர்ந்து சர்வதேச நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், போரால் காணாமல் போனவர்களைக் கண்டறிய 7 நபர்கள் அடங்கிய அலுவலகம் ஒன்றை அதிபர் மைத்ரிபால சிறீகேனா கடந்த பிப்ரவரி மாதம் அமைத்தார்.
✦ இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க மேற்கண்ட குழுவினருக்கு அதிகாரமளிக்கும் சட்ட மசோதாவை இலங்கை அரசு கொண்டு வருகிறது.
வியட்நாமில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
✦ அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங்கை (ஜீன் 13ல்) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட்
✦ பயங்கரவாதம் மற்றும் போரிலிருந்து மீண்டு வரும் ஆப்கானிஸ்தான், சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தடம் பதிப்பது கிரிக்கெட் சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
✦ ஆப்கானிஸ்தான் - இந்தியா அணிகள் விளையாடும் டெஸ்ட்போட்டி பெங்களுரில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆஷ்கர் ஸ்டானிக்ஸாயும், இந்திய அணிக்கு அஜிங்க்ய ரஹானேவும் கேப்டனாக உள்ளனர்.
இந்தியாவுக்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க ஒப்புதல்
✦ இந்தியாவிற்கு 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஷெல்பயர், ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை விற்பனை செய்ய டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் பெயரை மாற்ற மாசிடோனியா சம்மதம்
✦ 1991-ல் யுகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. எனினும் கிரீஸின் வடபகுதியும் மாசிடோனியா என்று அழைக்கப்படுவதால் மாசிடோனியா என்று பெயரை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்தது.
✦ மேலும் மாசிடோனியா நாடு ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்பில் இணைவதை கிரீஸ் நாடு தனது ரத்து அதிகாரம் மூலம் தடை செய்தது. சுமார் 27 ஆண்டுகள் பிரச்சினை தீரும் வகையில் மாசிடோனியா நாடு தனது பெயரை வடக்கு மாசிடோனியா குடியரசு (மாசிடோனிய மொழியில் செவர்னா மேக்டோனிஜா) என மாற்றம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது.
அணைகளைப் பாதுகாக்க சட்டம்
✦ நாட்டில் 5200க்கும் மேற்பட்ட பெரிய அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. மேலும் 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
✦ இந்த அணைகளைப் பாதுகாக்க மத்திய அரசு புதிய சட்டம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுநர்களின் ஆலோசனை பெற்று இயற்றப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
சுலப் இண்டர்நேஷனல் நிறுவனருக்கு ஜப்பான் நாட்டின் உயரிய நிக்கி ஆசியா பரிசு
✦ ஆசிய நாடுகளில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, கலாச்சாரம் மற்றும் சமூகத்துக்கு சேவையாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜப்பான் நாட்டில் 1959 ஆம் ஆண்டு முதல் நிக்கி ஆசியா பரிசு வழங்கப்படுகிறது.
✦ இந்நிலையில், இந்தியாவில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், பொதுமக்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படவும் தொண்டாற்றிய சுலப் இண்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்கிற்கு இந்த ஆண்டுக்கான நிக்கி ஆசியா பரிசு வழங்கப்பட்டுள்ளது.
✦ இந்தப் பரிசினை இதற்குமுன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி ஆகியோர் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
FORBES – உலகின் மதிப்புமிக்க கால்பந்து கிளப் பட்டியலை வெளியிட்டுள்ளது
✦ போர்ப்ஸ் பத்திரிக்கை கால்பந்து கிளப் அணிகளில் எது மதிப்புமிக்க அணி என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட், (4.12 பில்லியன் கோடி) உள்ளது.
✦ ரியல் மாட்ரிட் (4.08 பில்லியன்), பார்சிலோனா (4.06 பில்லியன்) முறையே 2 மற்றும் 3 வது இடத்தில் உள்ளன.
நமது கிராமம், நமது ஆட்சி
✦ இடஒதுக்கீடு சார்ந்து தெலங்கானாவில் சுமார் 2000 கிராமங்களில் பழங்குடியினர் தாங்களே தங்களுக்கான அரசு என்று அரசியலமைப்பு சட்டம் 5வது பிரிவின்படி மே 31 நள்ளிரவில் அறிவித்துள்ளனர்.
✦ நமது கிராமம் நமது ஆட்சி எனும் முழக்கத்துடன் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.
✦ தெலுங்கானா ஆளுநர் - ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
சிடிஎஸ் துணைத் தலைவராக டிசோசா நியமனம்
✦ காக்னிசென்ட் (சிடிஎஸ்) நிறுவன CEO-வான பிரான்ஸிஸ்கோ டிசோசா அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
✦ இவர் அமெரிக்காவின் சிறந்த CEO பட்டியலிலும் நிறுவன முதலீட்டாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக இரத்ததான நாள்
✦ WHO அமைப்பு, இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக (2005 ஆம் ஆண்டிலிருந்து) ஒவ்வொரு ஜீன் 14 ஆம் தேதியையும் உலக இரத்த தான நாளாக அறிவித்தது.
✦ இந்தநாள் ABO இரத்தகுழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற கார்ல்லாண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
✦ (ஒரு யூனிட் ரத்தத்தின் அளவு 350 மி.லி)
அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண் நியமனம்
✦ சென்னைப் பெண்ணான திவ்யா சூர்யதேவரா அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனத்தின் மிக முக்கியமான பதவிக்கு வரும் 2வது பெண் ஆவார். தற்போதைய CFO -சக்ஸ்டீவன்ஸின் ஓய்வுக்குப்பின் திவ்யா பதவியேற்பார்.
வேளாண்மைத்துறையின் பெயர் மாற்றம்
✦ திரிபுராமாநிலம் உதய்பூரில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் பிப்லப்தேவ் வேளாண்மைத் துறையானது இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும் என்றார்.
கரூர் வைஸ்யா வங்கி – மேக்ஸ்பூபா ஒப்பந்தம்
✦ மருத்துவ காப்பீடு பாலிசிகளை விநியோகம் செய்வதற்காக மேக்ஸ் பூபா நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இதன் மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் 790 கிளைகளில் மேக்ஸ் பூபா நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு பாலிசிகளை வாங்க முடியும்.
கரூர் வைஸ்யாவின் CEO-B.Rசேஷாத்ரி
மேக்ஸ் பூபாவின் CEO – ஆஷிஷ் மெஹ்ரோத்ரா
13.06.2018 TNPSC CURRENT AFFAIRS
10-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பெண்காவலர் ரேகா மிஸ்ரா
✦ மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க வழிவகுத்த பெண் காவலர் ரேகா மிஸ்ரா பற்றிய பாடம், அம்மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
✦ கடந்த 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் ஆதரவின்றி சுற்றித் திரிந்தசுமார் 1150 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களில் 434 குழந்தைகள், தங்களின் பெற்றோர்களுடன் சேருவதற்கு காவலர் உறுதுணையாக இருந்துள்ளார்.
அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு
✦ மத்திய அரசின் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரராக இணையும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு 60 வயதுக்குப் பின்பு 5 அடுக்குகளில் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
✦ ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பெட்ரா) தலைவர் ஹேமந்த் ஜி.காண்டிராக்டர் கூறுகையில் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை (5 ஆயிரத்திலிருந்து) ரூ.10 ஆயிரமாக) உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பான பரிந்துரையை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளோம் என்றும் கூறியுள்ளனர்.
✦ இதே போல் அடல் பென்சன் யொஜனா திட்டத்திற்கான உச்சவரம்பு 50 ஆக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில் முதல் அரசு கண்வங்கி
✦ தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் சுமார் ஒரு கோடி முதலீட்டடில் அமைக்கப்பட்டுள்ள அரசு ‘கண்’ வங்கியை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி.லக்ஷ்மா ரெட்டி திறந்து வைத்தார்.
✦ மேலும் நாட்டின் முதல் கருவுற்றல் மையம் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா – வடகொரியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
✦ சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடைபெற்றது.
✦ இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின குறிப்பாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் வடகொரியா அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
நீர்த் தேக்கங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்க ரூ.1125 கோடியில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்கள்
✦ தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்த்தேக்கங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்க ரூ.1125 கோடியில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையங்கள் சாத்தியக்கூறு அடிப்படையில் அமைக்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
✦ சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் இந்த அறிவிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
✦ மேலும், நெல்லை மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உற்பத்தியாகும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை வெளிக்கொண்டு வர சமூக ரெங்கபுரத்தில் ரூ.600 கோடியில் 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம் கோந்தகை, கோவை மாவட்டம் பரலி ஆகிய இடங்களில் தலா 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் ரூ.1669 கோடியில் அமைக்கப்படும்.
இந்திய டென்னிஸ் வீரர்களின் தரவரிசை
✦ இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான யூகி பாம்ப்ரி சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 84வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
✦ பிரஜினேஷ் குணேஸ்வரன் 169வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
✦ இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா 22வது இடத்திலும், திவிஜ்ஷரன் 43வது இடத்திலும், லியாண்டர் வயஸ் 59வது இடத்திலும், புரவ் ராஜா 77வது இடத்திலும் உள்ளனர்.
உபேர் திட்டம் - 7 இந்திய மொழிகளில் விரிவாக்கம்
✦ தமிழ், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட 7 இந்திய மொழிகளில் உபேர் செயலியை விரிவாக்கம் செய்ய உபேர் திட்டம் முடிவெடுத்துள்ளது.
✦ இதன் மூலம் கூடுதல் சந்தையை கைப்பற்ற முடியும் என உபேர் திட்டமிட்டிருக்கிறது மேலும் போட்டியை சமாளிக்க ‘உபேர் லைட்’ என்னும் செயலி பிரிவினை அறிமுகம் செய்துள்ளது. சோதனை முயற்சியாக டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத்தில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வண்ணதாசனுக்கு இயல் விருது
✦ இலக்கிய உலகில் வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான ‘இயல்விருது’ இந்த ஆண்டு எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
✦ கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இவ்விருது வழங்கும் விழா ஜீன் 10-ல் கனடாவில் நடைபெற்றது.
பிற விருதுகள்:
புனைவு –வேங்கை நங்கூரத்தின் ஜீன்
குறிப்புகள் – தமிழ்மகள்
கவிதை – அம்மா – பா.அகிலன்
மொழிபெயர்ப்பு – பாலசரஸ்வதி, அவர் கலையும் வாழ்வும் - டி.ஐ.அரவிந்தன் (மின்னம்பலம் - நிர்வாக ஆசிரியர்)
ஆங்கில இலக்கியப்பரிசு – அனுக் அருட்பிரகாசம்
சுந்தரசுவாமி நினைவு கணிமை விருது சசிகரன் பத்மநாபன்
தமிழ் இலக்கிய சிறப்புப் பரிசு – கலாநிதி நிகோலப்பிள்ளை தி.ஞானசேகரன்
மாணவர் கட்டுரைப்போட்டி பரிசு – செல்வி சங்கரி விஜேந்திரா
கவிஞர் செழியன் நினைவுப் பரிசு – துளசி சிவகுமாரன்
✦ விழாவில் வண்ணதாசனின் ‘அந்தரப்பூ’ கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
12.06.2018 TNPSC CURRENT AFFAIRS
பார்முலா-1 கார்பந்தயம்
✦ பார்முலா 1 கார்பந்தயத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான சீசனின் 7வது கிரான்ட் பிரிக்ஸ் கனடாவில் நடைபெற்றது. இதில் பெர்ராரி அணியின் செபஸ்தியன் வெட்டல் வெற்றி பெற்றார். இது இவர் பெறும் 50வது கிராண்ட் பிரிக்ஸ் பட்டமாகும்.
உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
✦ ஐக்கிய நாட்டின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ILO) 2002 ஆம் ஆண்டு முதல் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜீன் 12 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது “எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்காக போராடுவோம்” என்பது இந்த ஆண்டுக்கான கருதுகோள் ஆகும்.
மின்கழிவு உற்பத்தியில் இந்தியா முன்னணி
✦ உலகளவில் மின்கழிவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக ‘அசோசாம்-என்சிசி’ அமைப்பு (ஜீன் 4-ல்) தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. (இந்தியா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, அமெரிக்கா)
✦ இந்தியாவில் 5 சதவீத மின்கழிவு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக மின் கழிவுகளை உற்பத்தி செய்யும் மாநிலங்கள்
1)மகாராஷ்டிரம் - 19.8%
2)தமிழ்நாடு – 13%
3)உத்திரபிரதேசம் -10.1%
4)கர்நாடகம் - 8.9%
5)குஜராத் - 8.8%
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா ஆய்வு
✦ இந்திய விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்ய 20 பேர் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் குழு (NDAA) ஜீன் 8-ல் கோவாவுக்கு வந்துள்ளனர்.
✦ இந்த ஆய்வு உலகின் பருவநிலை மாற்றத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்று இக்குழு தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதில் இந்தியா முதலிடம்
✦ அமெரிக்காவின் ப்யூக் பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் ஆய்வின்படி உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக அதிர்ச்சித் தகவல் அளித்துள்ளனர்.
✦ இதன்படி 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்ததைவிட யுரேனியா கலப்பு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பான குடிநீரில் ஒரு லிட்டருக்கு 30 மைக்ரோ கிராம் அளவு யுரேனியா அளவு இருக்கலாம் என்று WHO -கூறியுள்ளது.
✦ அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் ராஜஸ்தானில் 3-ல் 1 கிணற்றில் யுரேனிய செறிவு அதிகம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
✦ மேலும் நிலத்தடி நீர் மட்டம் பெரிதும் குறைந்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மத்திய நிலத்தடி நீர் வாரிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தலைவருக்க டாக்டர் பட்டம்
✦ சென்னையிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழக 8ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவின்போது இஸ்ரோ தலைவர் K.சிவன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
தரவுகள் காட்சிப்படுத்துதல் செயலி
✦ UNICEF அமைப்பானது இந்தியாவில் கல்வி சூழ்நிலைகளின் சிக்கலான பகுப்பாய்வுகளை எளிய முறையில் காட்சிப்படுத்தி மக்களுக்கு வழங்குவதற்காக தரவுகள் காட்சிப்படுத்துதல் செயலியை (Data Visualization App) வெளியிட்டுள்ளது.
✦ இந்த செயலி கல்விக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட தகவல் அமைப்பு (Unified District Information System for Education – UDISE) தேசிய மதிப்பீட்டு ஆய்வு (National achievement Survey – NAS) மற்றும் மக்கள் தொகை தரவு ஆகியவற்றை பயன்படுத்துகிறது.
சீனாவில் இந்தியாவின் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப தாழ் வாரம்
✦ சீனாவின் வளர்ந்து வரும் மென்பொருள் சந்தையில் ஆதாயம் திரட்டி தனது இரண்டாவது தகவல் தொழில்நுட்ப தாழ்வாரத்தை Information Technology Corridor தென்மேற்கு சீனாவில் உள்ள குயியாங் மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளது.
✦ கடந்த டிசம்பர் மாதம் நாஸ்காம் அமைப்பு சீனாவின் துறைமுக நகரமான டாலியன் நகரத்தில் இந்தியாவின் முதல் தகவல் தொழில்நுட்ப மையமான SIDCOP மையத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகளாக கடலில் மிதந்த உலகின் பெரிய பனிமலை
✦ கடந்த 2000- ஆம் ஆண்டு மார்ச் மாதம் அண்டார்ட்டிகாவில் இருந்து மிகப்பெரிய மலை அளவுக்கு பனிக்கட்டி உடைந்து பிரிந்தது, இதன் நீளம் 296 கி.மீ அகலம் 37 கி.மீட்டர் இதற்கு B-15 என்று நிபுணர்கள் பெயரிட்டனர்.
✦ அண்டார்டிகாவின் ரோஸ்ஜஸ் ஷல்ப் பகுதியிலிருந்து உடைந்த இந்த B-15Z பனிக்கட்டியானது சிறிது சிறிதாக உருகி வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணிகள் சேவை பெறவும் புகார்களை அளிக்கவும் 2 புதிய செயலிகள்
✦ நாடு முழுவதும் ரயில் பயணிகள் Twitter, Face book, Helpline போன்றவற்றைத் தொடர்ந்து பயணிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ரயில்வே புதிய செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.
✦ ரயில் பயணிகளுக்க அளிக்கப்படும் 96 வகையான உணவுப் பொருட்கள், அதன் விலை குறித்து அறிந்து கொள்ளவும், உணவுப் பொருள்கள் தொடர்பாக புகார்களைத் தெரிவிக்கவும் Menu on Rails என்ற IRCD ன் புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
✦ இதுபோன்று ரயில் பயணிகளுக்கு ஏற்படும் குறைகள், பாதுகாப்பு, அசுத்தமான கழிவறைகள் பற்றி புகார்கள் தெரிவிக்கவும், அவசரகால உதவி உள்ளிட்டவை குறித்து உதவி பெறவும் ‘ரயில் மதாத்’ (Rail Mades – ரயில் உதவி) என்ற ஒரு செயலியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
11.06.2018 TNPSC CURRENT AFFAIRS
பிரெஞ்சு ஓபன்
✦ பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரரும் நடப்புச் சாம்பியனுமான ரஃபேல் நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தி 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
✦ கடந்த 2005 முதல் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் 10 முறை நடால் பட்டம் வென்றிருந்தார். தற்போது 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து ஒரேகிராண்ட்ஸ்லாம் போட்டியில் மகளிர் பிரிவில் மார்க்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 1960 முதல் 1973 வரை 11 முறை பட்டம் வென்ற சாதனையை சமன் செய்தார் நடால்.
✦ கிராண்ட்ஸ்லாம் பட்டத்தில் ரோஜர் பெடரர் முதலிடத்திலும் (20 முறை), நடால் இரண்டாமிடத்திலும்(17 முறை), காம்ப்ராஸ் மூன்றாமிடத்திலும் (14 முறை) உள்ளனர்.
✦ இதேபோல் பிரெஞ்சு ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வில்ஹெர்பர்ட் - மஹீட் இணை மாராச்-பவிக் இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.
✦ மகளிர் இரட்டையர் பிரிவில் சினேகோவா – கிரெஜிகோவா இணை நினோமியா – ஹோஸ்மி இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.
ஆசிய மகளிர் போட்டி
✦ கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய மகளிர் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது வங்கதேசம் பெறும் முதல் அசிய மகளிர் சாம்பியன் பட்டம் ஆகும்.
இந்தியாவுக்கு இன்டர் கான்டினென்டல் கோப்பை
✦ மும்பையில் நடந்த இன்டர் கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கென்ய கால்பந்து அணியை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி கோப்பையை வென்றது.
✦ உலகின் இரண்டாவது அதிக கோல்களை அடித்த வீரராகத் திகழும் சேத்ரி, பிரபல வீரர் மெஸ்ஸி 64 கோல்கள் அடித்த சாதனையையும் சமன் செய்துள்ளார்.
இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம்
✦ இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.
✦ இந்த அருங்காட்சியகத்தை வரும் அக்டோபர் மாதம் போலீஸ் நினைவு தினமான 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
ஆசிய தடகளம் - இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
✦ ஜப்பானில் நடைபெற்ற அசிய ஜீனியர் தடகளப் போட்டியில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட மொத்தம் 17 பதக்கங்களைக் கைப்பற்றி 3வது இடத்தைப் பிடித்தது.
✦ கடைசிநாள் போட்டியில் (ஜீன் 10) ஆடவர் பிரிவில் இந்திய வீரர் கமல்ராஜ் கனகராஜ் மும்முறைத் தாண்டுதல் போட்டியிலும், அஜித்குமார் 5000 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றனர்.
✦ 400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் இந்திய மகளிர் அணி வெள்ளியும், 200 மீட்டர் மகளிர் பிரிவு ஓட்டத்தில் ஜின்னா மேத்யூ வெண்கலமும் வென்றனர்.
மலிவு விலையில் நாப்கின் ஹரியானா அரசு முடிவு
✦ ஆகஸ்ட் 2018 முதல் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 விலையில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
✦ மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சார்ந்த பெண்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இதே விலையில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
ஹரியானா முதல்வர் - மனோகர் லால் கட்டார்
ஆளுநர் - தப்டன் சின் சொலாங்கி
குஜராத் வந்த ரஷ்யாவின் இயற்கை வாயு
✦ ரஷ்யாவின் Ga2prom நிறுவனத்திடமிருந்து முதல் முறையாக இயற்கை எரிவாயு ஜீன் 4ல் கப்பல் மூலம் குஜராத் மாநிலம் தாஹெஜ் நகருக்கு கொண்டுவரப்பட்டது.
✦ கத்தார், ஆஸ்திரேலியா, அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவிடமிருந்து LNG இறக்குமதி செய்யப்பட்டது.
✦ உலகளவில் இயற்கை வாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் தென்கொரியா, ஜப்பான், சீனாவுக்கு அடுத்து இந்தியா (4வது இடம்) உள்ளது.
✦மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் - தர்மேந்திர பிரதான்
3வது தேசிய சுகாதார ஊடக ஆசிரியர்கள் மாநாடு
✦ 3வது தேசிய சுகாதார ஊடக ஆசிரியர்கள் மாநாட்டை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் 2018 ஜீன் 5-ல் தொடங்கி வைத்தார்.
✦ பத்திரிக்கைத் தகவல் அலுவலகம் மற்றும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து ஆயுஷ் துறை இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
✦ ஜீன் 21ல் சர்வதேச யோகா தினம் தொடங்குவதையொட்டி, “யோகா பற்றி ஆதாரம் சார்ந்த சமீபத்தில் புதுமையான ஆராய்ச்சிகள் - யோகா ஆராய்ச்சி பற்றி ஒரு மறு ஆய்வு” என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜீலை 10-ல் ஹைதராபாத்தில் IKEA கிளை
✦ ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பர்னிச்சர் நிறுவனமான ஐகேஇஏ அடுத்த மாதம் இந்தியாவில் (ஹைதராபாத்தில்) தன்னுடைய முதல் கடையை திறக்க உள்ளது. இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாகவும் பல வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெலுங்கானா அரசின் முதன்மை செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கிரிஷி கல்யாண் திட்டம்
✦ 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்கு திட்டத்திற்கு ஏற்ப மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தொடங்கியுள்ள கிரிஷி கல்யாண் திட்டம் 2018 ஜீன் 1 முதல் ஜீலை 31 வரை செயல்படுத்தப்படுகிறது.
✦ விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆலோசனை கூறி உதவும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
10.06.2018 TNPSC CURRENT AFFAIRS
பிரெஞ்சு ஓபன் - சிமோனா ஹாலப் பட்டம் வென்றார்
✦ பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் அமெரிக்காவின் ஸ்லோவன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். இது சிமோனாவின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சுகாதார திட்டம்
✦ அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்ய ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
✦ இதன் ஒரு பகுதியாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை ஆகஸ்ட்-15 ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
✦ இத்திட்டத்தின்கீழ் 10 கோடி குடும்பத்தினருக்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
✦ இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் இமாச்சல், ஹரியானா, காஷ்மீர், உத்ரகாண்ட் உள்ளிட்ட 8 மாநில அரசுகளுடனும் சண்டிகர் உள்ளிட்ட 4 யூனியன் பிரதேசங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்தியா, சீனா இடையே 2 ஒப்பந்தம் கையெழுத்து
✦ சீனாவின் ஷான்டாங் மாகாணத்தின் க்விங்டாவ் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18வது (ஜீன் 9ல்) மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
✦ அதன்பின் சீன அதிபர் ஜிஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது இரு நாடுகளில் பாயும் பிரம்மபுத்ரா நதியின் நீரோட்டம் பற்றிய தகவலை பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலத்தில் (மே 15 முதல் அக்டோபர் 15 வரை) பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அது குறித்த தகவலை இந்தியாவுக்கு சீனா தெரிவிக்கும். பருவ மழை இல்லாத காலத்தில் வெள்ளம் குறிப்பிட்ட அளவைத் தாண்டினாலும் அதுகுறித்த தகவலையும் சீனா தெரிவிக்கும்.
✦ மேலும் பாசுமதி தவிர மற்ற அனைத்து வகை அரிசியையும் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
✦ மேலும், இரு நாடுகளுக்கிடையேயுள்ள வர்த்தக பற்றாக் குறையைப் போக்க வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில் அது சம்பந்தமான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம்
✦ மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் (ஜீன் 10ல்)
✦ அமெரிக்காவில் உள்ள பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை பார்வையிடுவதுடன் அந்த தொழில்நுட்பங்களை மகாராஷ்டிர மாநிலத்தில் கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
✦ மேலும். மும்பை நகரை புனேவுடன் இணைக்கும் அதிநவீன சாலை வசதி தொடர்பான ஒப்பந்தத்தை செய்துள்ள விர்ஜின் குழுமத்தின் சான்பிரான்சிஸ்கோ நகர தலைமையகத்தையும் பார்வையிடுகிறார்.
உத்ரகாண்ட் காற்றில் மிதக்கும் பலூன் மூலம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி
✦ தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் செல்போன் டவர்கள் அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. இது போன்ற பகுதிகளில் காற்றில் பறக்கும் பலூன் மூலம் செல்போன் - இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதியை மும்பை IIT கண்டுபிடித்துள்ளது.
✦ இந்த பலூன் இன்டர்நெட் சேவை வசதியை முதன் முதலாக உத்ரகாண்ட் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் டேராடூனில் தொடங்கி வைத்தார்.
ஐ.நா.பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு
✦ சர்வதேச விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.
✦ இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ரஷியா ஆகியன நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.
✦ 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில் ஆண்டுக்கொருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர் தேர்வு நடைபெறுகிறது. 10 தற்காலிக நாடுகள் ஆண்டுதோறும் 5 நாடுகள் வெளியேறுகின்றன.
✦ இந்த ஆண்டு ஜெர்மனி, டொமினிக்கன் ரிபப்ளிக் நாடுகள், தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியம் மற்றும் இன்தோனேசியா ஆகிய 5 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளன.
மத்திய விழிப்புணர்வு ஆணையராக தேசிய பாதுகாப்பு முகைமையின் முன்னாள் தலைவர் நியமனம்
✦ ஊழல் தடுப்பு பிரிவின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்ட மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கு தேசிய அளவில் ஒருவரும் மேலும் இரு ஆணையர்களுக்கும் உறுப்பினராக உள்ளனர்.
✦ மத்திய விழிப்புணர்வு ஆணையர் பதவி கடந்த பிப்ரவரி முதல் காலியாக இருந்து வந்த நிலையில் புதிய ஆணையராக தேசிய புலனாய்வு முகைமையில் முன்னாள் தலைவர் சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2020 வரை இப்பதவியில் இருப்பார்.
அமெரிக்கா இன்டர்-யுனிவர்சிட்டி சாம்பியன்ஷிப்
✦ அமெரிக்காவில் National Collegiate Athletic Association சார்பில் Truck and Field சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
✦ இதில் உயரம் தாண்டுலில் இந்தியாவின் தேசிய சாதனை படைத்துள்ள தேஜஸ்வின் சங்கர் கலந்து கொண்டு (2.24 மீட்டர்) தங்கப் பதக்கம் வென்றார்.
✦ NCAA டைட்டிலை வென்ற 3வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
09.06.2018 TNPSC CURRENT AFFAIRS
கனடா – கஞ்சா விற்பனைக்கு சட்டப்பூர்வ அனுமதி
✦ கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்தே மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. எனினும் போதைப்பொருளாக அதனைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
✦ இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான திருத்தத்தைக் கஞ்சா தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
✦ கனடாவில் தற்போது கள்ளச் சந்தையில் கஞ்சா விற்கப்படுவதால் சிறார்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே அதன் விற்பனையை சட்டப்பூர்வமாக்குவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ விளக்கமளித்துள்ளார். மேலும் கனடாவின் தேசிய நாளான ஜீலை 1-ஆம் தேதி முதல் சட்டப்பூர்வ கஞ்சா விற்பனை தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதவாத அரசியல் - 7 மசூதிகளை மூட ஆஸ்திரியா முடிவு
✦ ஆஸ்திரியாவில் மதவாத அரசியலைத் தடுக்கும் வகையில் 60 முஸ்லீம் இமாம்களுக்குத் தடை விதிக்கவும், 7 மசூதிகளை மூடவும் அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிய ஜீனியர் தடகளம் - ஜிஸ்னாவுக்கு தங்கம்
✦ ஜப்பானின் ஜிபுநகரில் ஆசிய ஜீனியர் தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 400 மீ ஓட்டத்தில் நடப்புச் சாம்பியனும், இந்திய வீராங்கனையுமான ஜிஸ்னா மேத்யூ 53.26 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இலங்கை, சீனதைபே ஆகியன முறையே அடுத்தடுத்த இடங்களைப் படித்தன.
490 ரன்கள் குவித்து நியூஸிலாந்து மகளிர் அணி உலக சாதனை
✦ அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.
✦ ஆடவர் கிரிக்கெட் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 444 ரன்கள் எடுத்ததே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
✦ மகளிர் கிரிக்கெட்டில் 400 ரன்களைக் கடப்பது இது மூன்றாவது முறையாகும்.
வட்டிவிகிதம் அதிகரிப்பு – IMF வரவேற்பு
✦ இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் உயர்த்தியுள்ளதற்கு IMF வரவேற்பு தெரிவித்துள்ளது.
✦ ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போரேட்) 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டியும் (ரிவர்ஸ் ரெப்போரேட்) 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 6 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் இணைய ‘தனுஷ்’ பீரங்கி தயார்
✦ இந்தியாவிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்டதும், நீண்டதூர இலக்கைத் தாக்கக்கூடியதுமான தனுஷ் பீரங்கி தனது இறுதி சாதனையை நிறைவு செய்து ராணுவத்தில் இணைய தயாராக உள்ளது.
✦ இதுகுறித்த தகவலை பீரங்கி கட்டுமான தொழற்சாலையின் (GCF- ஜபல்பூர்) மூத்த மேலாளர் S.K.சிங் வெளியிட்டுள்ளார் இதன்படி தனுஷ் பீரங்கி தயாரிப்பு கடந்த 2011 அக்டோபரில் தொடங்கப்பட்டு 2014-ல் முன்மாதிரி பீரங்கி ஒன்று தயாரானது.
✦ இது சுமார் 38 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்கைத் தாக்க கூடிய இந்த பீரங்கியின் 81 சதவீத பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.
உலக பொருளாதார பேரவை நிர்வாகக் குழுவில் சரிதா நய்யர்
✦ உலக பொருளாதார பேரவை (WEF) நிர்வாகக் குழவில் சரிதா நய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
✦ இந்த அமைப்பின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் தற்போது நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
✦ இதன் மூலம் பொருளாதார பேரவை விரிவாக்க நடவடிக்கைகளில் இவர் தனது பங்களிப்பை அளிக்க முடியும். 2007 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் சேர்ந்த சரிதா நய்யார் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
விப்ரோ இயக்குநர் குழுவில் தாரிக் பிரேம்ஜி
✦ விப்ரோ என்டர்பிரைசஸ் இயக்குநர் குழுவில் அஸிம் பிரேம்ஜியின் இரண்டாவது மகள் தாரிக் பிரேம்ஜி சேர்க்கப்பட்டுள்ளார்.
✦ இதன் இயக்குநர் குழுவின் தலைவராக அஸிம் பிரேம்ஜி உள்ளார்.
நாடாளுமன்ற எம்.பிக்கள் தரவரிசை பட்டியலில் 21வது இடத்தில் தமிழக எம்.பி
✦ எம்.பிக்களின் சிறப்பான அடிப்படையில் ஆண்டுதோறும் ‘சன்சத் ரத்னா’ விருதுகள் வழங்கப்படுகின்றன.
✦ இதில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பது, கேள்விகள் எழுப்புவது, வருகைப் பதிவேடு உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்படும் இந்த ஆண்டிற்கான விருது பிரைம்பாய்ண்ட் என்ற நிறுவனம் சார்பில் சென்னை IIT -ல் ஜீன் 9-ல் வழங்கப்படுகிறது.
✦ இந்த விருதிற்கு மக்களவையில் 6 பேரும் மாநிலங்களவையில் ஒருவரும் தேர்வாகியுள்ளனர்.
✦ ஒட்டுமொத்த 513 எம்பிக்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் மத்திய சென்னை M.P. எஸ்.ஆர்.விஜயகுமார் 21வது இடம் பிடித்துள்ளார்.
ஆவடியில் 105 கோடி மதிப்பில் சோலார் மின்சக்தி ஆலை
✦ சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் 16 மெகாவாட் ஆற்றல் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது.
✦ சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் 105 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு டிரான்ஸ்மிசன் கார்ப்பரேசனுக்கு 110 கிலோவாட் மின்சாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✦ இது தவிர இந்த ஆலையில் கார்பன் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் உற்பத்தி கட்டுப்படுத்துவதால் காற்று மாசுபாடு குறையும் எனவும், இந்த ஆலை மூலம் 4541 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கிரகம் கண்டுபிடிப்பு! இந்திய விஞ்ஞானிகள் சாதனை
✦ பூமியிலிருந்து 600 ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் புதிய ஒரு கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
✦ குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் Physical Research Laboratory எனும் வானியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய கிரகத்துக்கு EPIC 211945201b அல்லது K2-236b என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியைப் போன்று 6 மடங்கு ஆரத்தில் பெரியதும், 27 மடங்கு எடை கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீவ் ரோட்ஸ் நியமனம்
✦ வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சந்திகா ஹதுருசிங்கா பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
✦ இவருக்குப் பதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வால்ஷ் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
✦ இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் ஸ்டீவ் ரோட்ஸை தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளனர். இத்தேர்வுப்பணி தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டனிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா
✦ இந்தியாவின் 4வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமான மேற்குவங்கத்தின் முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி 9 நாள் பயணமாக வரும் 22 ஆம் தேதி சீனா செல்கிறார்.
✦ மேற்குவங்க மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு சீனாவுடன் இணைந்து செயல்படும் வகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் செய்ய முதன்முறையாக சீனா செல்கிறார்.
மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம்
✦ சென்னை சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரயில் நிலையம் 3வது ரயில் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
✦ இதனை (ஜீன் 8ல்) மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், இவர் தாம்பரம் முதல் நெல்லை வரை முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரயிலையும் தொடங்கி வைத்தார்.
கோவை – பெங்களுரு இடையே டபுள் டக்கர் ரயில் சேவை
✦ கோவையிலிருந்து சேலம் வழியாக பெங்களுருவுக்கு டபுள் டக்கர் ரயில் சேவை (ஜீலை 8-ல்) தொடங்கியது
✦ உதய் எக்ஸ்பிரஸ்-ல்’ புதிய டபுள் டெக்கர் ரயில் சேவையை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார்.
08.06.2018 TNPSC CURRENT AFFAIRS
மியான்மர் பௌத்த மதவாதக் குழுவுக்கு முகநூலில் தடை
✦ மியான்மரில் ரோஹிங்யா முஸ்லீம் இனத்தவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டி வந்த பௌத்த மதவாதக் குழுவை முகநூல் சமூக வலைதளம் தடைசெய்துள்ளது.
BCCI விருதுகள்
✦ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு 2016-17, 2017-18 ஆம் ஆண்டுகளுக்கு சிறந்த பேட்டிங்குக்கான விருது வழங்கப்படுவதாக BCCI அறிவித்துள்ளது. சிறந்த சர்வதேச விருதும் (பாலி உமரிகர்) வழங்கப்படுகிறது. இந்த விருதை கோலி பெறுவது 4வது முறையாகும்.
✦ இந்திய மகளிர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் 2016-17-க்கு ஹர்மன்ப்ரீத்கௌருக்கும் 2017-18க்கு ஸ்மிருதி மந்தனாவுக்கு சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படுகிறது.
✦ சிறந்த மாநில சங்கமாக பெங்கால் கிரிக்கெட் சங்கமும் (2016-17), தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கமும் (2017-18) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அருணாச்சலபிரதேசம் புதிய மலருக்கு முன்னாள் முதல்வர் பெயர்
✦ அருணாச்சலப் பிரதேச வனப்பகுதியில் தாவரவியல் ஆய்வாளர் கிருஷ்ணா சௌலு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு புதிய வகை மலரைக் கண்டறிந்தார். அடிப்பகுதியில் வெள்ளைநிறத்திலும், மேல் பகுதியில் ஊதா நிறத்திலும் உள்ள இந்த பூவிற்கு அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகாத்மா காந்திக்கு மரியாதை
✦ 1893 ஆம் ஆண்டு ஜீன் 7 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் பீட்டர் மாட்ரிஸ்பர்க் ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றில் ஏற முற்பட்ட காந்தி அதிலிருந்து இறக்கிவிடப்பட்டார். அந்த தினத்தின் 125 வது ஆண்டு நினைவு தினத்தையடுத்து தென்னாப்பிரிக்கா சென்ற சுஷ்மா ஸ்வராஜ் காந்திக்கு மரியாதை செலுத்தினார்.
100 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி
✦ டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பை சென்டர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் வைஃபை சேவையை கூகுள் நிறுவனம் முதலில் தொடங்கியது.
✦ தற்போது அஸ்ஸாம் மாநிலம், திப்ருகார் ரயில் நிலையத்தில் 400வதாக இலவச வைஃபை வசதி அதிகப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
✦ ரயில்டெல் நிறுவன நிர்வாக இயக்குநர்-கே.மனோகர் ராஜா
அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நவீன முழு உடல் பரிசோதனை மையம்
✦ சென்னை ஓமந்தூரார் அரசின் தோட்டத்திலுள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது. இதை (ஜீன் 8-ல்) முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
உலகப் பெருங்கடல் தினம்
✦ 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் இடம்பெற்ற புவி உச்சி மாநாட்டில் முதன் முறையாக கனடா பெருங்கடல் தினத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தது.
✦ 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை உலகப் பெருங்கடல் தினத்தை அதிகாரப்பூர்வ தினமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.
✦ நம் பூமியின் மூன்றில் ஒரு பகுதி கடல்நீர் உள்ளது. அது நமது பூமிக்கு இதயம் போன்றது அதனைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பிரதமரின் சீனா பயணம்
✦ ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவின் குயிங்டாவோநகரில் ஜீன் 9ல் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சீனா செல்கிறார்.
✦ இந்தியா கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினர் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
கே-லைட் நிறுவனத்துக்கு சர்வதேச விருது
✦ இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் (UAE) வர்த்தக மற்றும் சமூக அமைப்பு மற்றும் URS-ஆசியா ஒன்பத்திரிக்கை மற்றும் URS மீடியா கன்சல்டிங் பிஎல் ஆகியவை இணைந்து நடத்தும் 4வது விருது வழங்கும் விழாவில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கே-லைட் நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
✦ சர்வதேச அளவில் மிகச்சிறந்த பிராண்டாக கே-லைட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட விருது வழங்கப்பட்டது. இந்நிறுவனம் பல வகையான விளக்குகள் தயாரிப்பில் ஈடபட்டுள்ளது. இதன் தலைவர் திலீப் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது.
இந்திய தொழில்முனைவோர் குழு கண்டறிந்த பெண்கள் பாதுகாப்பு கருவிக்கு 10 லட்சம் பரிசு
✦ இந்திய-அமெரிக்க சமூக சேவையாளர்களான அனு மற்றும் நவீன் ஜெயின் முன்னெடுத்த ‘பெண்கள் பாதுகாப்பு எக்ஸ்பிரஸ்’ என்ற போட்டியில் 18 நாடகளின் 85 அணிகள் கலந்து கொண்டன.
✦ இதில் புதுடெல்லியைச் சேர்ந்த லீஃப் வியரபில்ஸ் நிறுவனம் பெண்கள் பாதுகாப்பிற்காக ‘சேஃபர் ப்ரோ’ என்ற கருவியைத் தயாரித்திருந்தது. இதற்கு 10 லட்சம் டாலர் பரிசு கிடைத்துள்ளது.
✦ இந்நிறுவனம் டெல்லி ஐஐடி மற்றும் டெல்லி தொழில்நுட்ப பல்கலை மாணவர்களால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடுவுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு
✦ ஆந்திர மாநில தலைநகரம் அமராவதியில் உட்கட்டமைப்பு வளர்ச்சிகளை கட்டுமானப் பணிகள் குறித்தும், ஆந்திர சுற்றுலாத்துறையில் சிங்கப்பூர் அரசு பங்கேற்பது குறித்தும் பல ஒப்பந்தங்கள் செய்ய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் சந்தித்தார்.
07.06.2018 TNPSC CURRENT AFFAIRS
கௌதமாலாவில் எரிமலை வெடிப்பு
✦ மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவின் எஸ்குயின்ட்லா நகரின் அருகில் உள்ள ஃபியூகோ எரிமலை வெடித்துச் சிதறியதால் 73 பேர் உயிரிழந்ததாகவும், 200 பேர் மாயமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிமலைக்கு அருகே வசிக்கும் 17 லட்சம் பேர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
✦ இதையொட்டி 3 நாள்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று கௌதமாலா அதிபர் ஜிம்மி மோரல்ஸ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு மெழுகுச்சிலை
✦ லண்டனை அடிப்படையாகக் கொண்ட மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் ஒரு கிளை டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இதில் லயோனஸ் மெஸ்ஸி, கபில் தேவ், உசேன்போல்ட் ஆகியோரின் வரிசையில் விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
அதிக வருவாய் - ஃபோர்ப்ஸ் பட்டியலில் கோலி
✦ அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பட்டியல் விபரம்
1)ஃப்ளாய்டு மேவெதர் - அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
2)லயோனஸ் மெஸ்ஸி – அர்ஜென்டீனா கால்பந்து வீரர்
3)கிறிஸ்டியானோ ரொனால்டோ – போர்ச்சுக்கல் கால்பந்து வீரர்
5)நெய்மர் - பிரேசில் கால்பந்து வீரர்
7)ரோஜர் ஃபெடரர் - ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர்
இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 83வது இடம் கிடைத்துள்ளது. இவரது வருவாய் 160 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது
மகளிர் ஆசிய கோப்பை டி20: வங்கதேசத்துக்கு வரலாற்று வெற்றி:
✦ மகளிருக்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது கோலாலம்பூரில் நடைபெற்ற 9வது போட்டியில் இந்தியாவுடன் மோதிய வங்கதேச அணி முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
உலக கிக் பாக்சிங்
✦ ரஷ்யாவின் அனபா நகரில் நடைபெற்ற உலக கிக்பாக்சிங் போட்டியில் சென்னை லேடி ஆண்டாள் பள்ளி மாணவர் வசீகரன் 79கி எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும் 1 சென்னை பப்ளிக் பள்ளி மாணவர் அருண் தனிஷ்க் வெண்கலமும் வென்றனர்.
ஐ.நா சபை மியான்மர் நாட்டுன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
✦ மியான்மரிலிருந்து வெளியேற்றப்பட்டு பங்களாதேஷில் குடியமர்த்தப்பட்ட ரோஹிங்கோ முஸ்லீம் அகதிகள் மீண்டும் பாதுகாப்பாக, சிறந்த முறையில் மியான்மரில் குடியமர்த்தப்படுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஐ.நா சபை மியான்மர் நாட்டுடன் செய்துள்ளது.
பந்தன் வங்கித் தலைவர் H.R.கான்
✦ RBI -ன் துணை கவர்னர் பொறுப்பில் (36 ஆண்டுகள் சுடீஐ-ல் பணியாற்றியவர்) இருந்து 2016 ஜீலை மாதம் ஓய்வு பெற்ற H.R கான் பந்தன் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜீன் 5 முதல் 3 ஆண்டுகளுக்கு இப்பதவியை வகிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயர்லாந்து டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.
✦ அயர்லாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து வித போட்டிகளுக்கும் கேப்டனாக வில்லியம் போர்டர் பீல்ட் இருக்கிறார்.
✦ தற்போது டி20 போட்டிகளுக்கு மட்டும் கேரிவில்சன் கேப்டனாகப் பதவியேற்றுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம்
✦ மத்திய நிர்வாகத்துறை ஆணையத்தின் தலைவரான மசூத் உசைன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
✦ மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்
✦ காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் S.K.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
✦ தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர் மேலாண்மைத் தலைமைப் பொறியாளர் சு.செந்தில்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ.8,500 கோடி நிதி:
✦ சர்க்கரையின் தேவையை விட உற்பத்தி அதிகமான காரணத்தினால் சர்க்கரை இறக்குமதி வரியை 100 சதவீத அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்றுமதி வரியை ரத்து செய்தது சர்க்கரை ஆலைகள் 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
✦ இந்நிலையில் சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்டி, மறுவாழ்வு வழங்குகிற வகையில் ரூ.8500 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
திவால் சட்டதிருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
✦ பெரு நிறுவனங்கள் தொழில் நொடிந்து திவாலாகும் போது, அதன் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோரும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனமும் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவும், அதில் தொடர்புடையவர்களுக்கு உரிய நிதி ஆதாயங்கள் கிடைக்க வகை செய்வதற்காகவும் திவால் சட்டம் கொண்டுவரப்பட்டது.
✦ ஆனால் அதில் உள்ள சில அம்சங்களைத் தவறாகப் பயன்படுத்தி பலர் ஆதாயமடைவது கண்டறியப்பட்டது. இதனால் அதில் சில திருத்தங்கள் மேற்கொண்டு திவால் அவசரச் சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.
✦ திவாலான நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தை அணுக அதில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட ஒரு நிறுவனம் திவாலாவதாக அறிவிக்கப்பட்டால் அதன் உரிமையாளர் மற்றொரு நிறுவனத்தின் வாயிலாக அதை ஏலம் எடுக்க அதில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
✦ புதிய சட்டத்தின்படி, வாராக்கடன்களை திருப்பிச் செலுத்திய பிறகே நலிவடைந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏலத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர் இத்தகைய கட்டுப்பாடுகளால் திவால் சட்டத்தை எவரும் தவறாகப் பயன்படுத்த இயலாத நிலை உருவாகியுள்ளது.
✦ இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (ஜீன்-6ல்) ஒப்புதல் அளித்துள்ளார்.
மங்கேர் மாவட்ட தூய்மை இந்தியா திட்டத்திற்கு தூதர்கள் நியமனம்
✦ பீகார் மாநிலம் மங்கேர் மாவட்டத்தில் உள்ள ஹெம்ஜாபூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர்களான மனோஹர் சவுத்ரி மற்றும் முசோதேவி ஆகியோர் பணவசதி இல்லாத காரணத்தால் பிச்சை எடுக்கும் தொகையில் ஒரு பகுதியை சேமித்தனர். இந்தச் சேமிப்பு பணம் மூலம் தங்களது குடிசை வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றைக் கட்டினர். இதைக்கண்டு வியந்த மாவட்ட நிர்வாகம் அம்மாவட்ட தூய்மை இந்திய திட்டத்தின் தூதர்களாக அவர்களை நியமித்துள்ளது.
சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் புதிய கிரகத்தில் தண்ணீர் - உலோகங்கள்
✦ இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் ஆஸ்ட்ரோ பிஸ்கா கனாரியாஸ் நிறுவன விஞ்ஞானிகள் இரான் டெலஸ்கோப் மூலம் சூரிய குடும்பத்துக்கு வெளியெ வாஸ் 127-பி என்ற கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர்.
✦ இது ஜீபிடர் கிரகத்தை விட 1.4 மடங்கு அகலம் அதிகமாகும். 20 சதவீதம் பெரியது. இதில் தற்போது சோடியம், பொட்டாசியம், லித்தியம் உள்ளதாகவும், தண்ணீரும் இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்குவங்க ஆளுநர் திரிபாதிக்கு கூடுதல் பொறுப்பாக திரிபுரா ஒதுக்கீடு
✦ திரிபுரா மாநில ஆளுநர் டதகாத ராய் விடுமுறையில் சென்றிருப்பதால் மேற்கு வங்க ஆளுநர் கேஷரிநாத் திரிபாதிக்கு திரிபுரா ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியல் - 2018
✦ உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குவாக்கோரெல்லா சைமண்ட்ஸ் (QS) நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
✦ இதன்படி 200 தலை சிறந்த பல்கலைக்கழகப் பட்டியலில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
✦ இந்தியாவில் மும்பை இந்திய தொழில்நுட்ப கல்விநிறுவனம் - 162வது இடத்தையும், பெங்களுரு IISC நிறுவனம் 172வது இடத்திலும், டெல்லி IIT 170வது இடத்திலும் உள்ளன.
06.06.2018 TNPSC CURRENT AFFAIRS
மலேசியாவில் இந்திய வம்சாவளி வழக்குரைஞர் அட்டர்ணி ஜெனரலாக நியமனம்
✦ மலேசியாவின் புதிய அட்டர்ணி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாமிதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
✦ மலேசியாவில், மலாய் இனத்தைச் சாராத முஸ்லீம் அல்லாத ஒருவர் முக்கியத்தவம் வாய்ந்த இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
சிந்து நதிப் பிரச்சினை – பாகிஸ்தானுக்கு உலக வங்கி புதிய அறிவுறுத்தல்
✦ இந்தியா பாகிஸ்தான் இடையே 6 நதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தமானது மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அயூப்கான் ஆகியோர் முன்னிலையில் கடந்த 1960 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
✦ இதன்படி, பஞ்சாபில் இருந்து உருவாகும் பியாஸ், ராவி, கட்லெஜ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கென்றும், ஜம்மு-காஷ்மீரில் உருவாகும் சிந்து, செனாப், ஜீலம் நதிகள் பாகிஸ்தானுக்கென்றும் பங்கிடப்பட்டன. பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நதிகளில் பாயும் நீரில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
✦ இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாயும் அந்த நதிகளின் ஊடே ரத்லே மற்றும் கிஷண்கங்கா பகுதிகளில் மின்திட்டங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதன் தொழில்நுட்ப அம்சங்களுக்கும், வடிவமைப்புக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
✦ இந்நிலையில் இருநாடுகளிலும் சமாதானத்தை ஏற்படுத்தவும், மின் திட்டங்களை அமைப்பதில் நிலவிவரும் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா முன்வைத்த யோசனையை ஏற்குமாறு பாகிஸ்தானை உலக வங்கி கேட்டக் கொண்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ‘டான்’ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்கப் பத்திரிக்கை நினைவகத்தில் 2 இந்தியர்கள்
✦ ஆண்டுதோறும் கொல்லப்படும் பத்திரிக்கையாளர்களை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ‘நியூசியம்’ என்னும் அருங்காட்சியகம் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கௌரி லங்கேஷ் மற்றும் சுதீப் தத்தா பௌக் உள்ளிட்ட 18 பேரை அந்த அருங்காட்சியகம் கௌரவித்துள்ளது.
✦ ‘பத்திரிக்கையாளர்கள் நினைவகம்’ என்று வகைப்படுத்தப்படும் அந்தப்பட்டியலில் மாலத்தீவைச் சேர்ந்த யாமீன் ரஷீத்தும் இடம் பெற்றுள்ளார்.
கௌரிலங்கேஷ்
✦ ஜாதிய அமைப்பு மற்றும் ஹிந்து அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தாம் எழுதிய கட்டுரைகளால் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் கௌரி லங்கேஷ். கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இவர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளப்பட்டார். தமது சொந்தவாரப் பத்திரிக்கையான கௌரி லங்கேஷ் பத்திரிக்கை இதழின் அசிரியராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதீப் தத்தா பௌமிக்
✦ திரிபுராவில் காவல்துறையின் ஊழலுக்கு எதிராக புலனாய்வு தகவல்களை செகரித்து வந்த இவர் உள்ளுர் நாளிதழில் பணியாற்றியவர். கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி துணை ராணுவப்படை ஒன்றின் தலைவர் தபன் தேவ்வர்மாவைச் சந்தித்ததில் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் தபன் தேவ்வர்மா உத்தரவின் பேரில் அவரது பாதுகாவலரால் சுதீப் தத்தா பௌமிக் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ரயிலில் அதிக சுமை எடுத்துச்செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம்
✦ தூங்கும் வசதி பெட்டிகள், 2 ஆம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் நபர்கள் முறையெ 40கி, 35கி எடையுடைய பொருள்களை இலவசமாக கொண்டு செல்லலாம்.
✦ அதுமட்டுமின்றி தூங்கும் வசதி பெட்டிகளில் பயணி ஒருவர் அதிகபட்சமாக 80கி பொருள்களையும், 2 ஆம் வகுப்பு பெட்டிகளில் 70கி பொருள்களையும் எடுத்துவரலாம்.
✦ தற்போது ரயிலில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு பொருள்களை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிப்பதென்று இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை
✦ ஒவ்வோர் ஆண்டும் ஜீன் 5 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழக அரசின் நடவடிக்கையாக 2019 ஜனவரி-1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
✦ பால், தயிர், எண்ணெய், மருத்துவப்பொருள்களுக்கான உறைகள் போன்ற பொருள்களுக்கான பிளாஸ்டிக் உறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்புகள் தலைவர் பங்கேற்பு
✦ உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹெம் பங்கேற்றார். முன்னதாக அவரைப் பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார்.
2017-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகள்
✦ மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக செயலாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
✦ 2017-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்ரமணியன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் M.அண்ணாதுரை, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோருக்கு பசுமை விருதுகள் அளிக்கப்பட்டன.
✦ கடலூர் மாவட்டம் ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி, திருவள்ளுர் யுனைடெட் பரூவரீஸ், நாமக்கல் சேஷசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கும் பசுமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
✦ வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (விஐடி), திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், திண்டுக்கல் காந்தி கிராமம்கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டுக்காக வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்த புதிய செயலி
✦ நாடு முழுவதும் சுமார் 120 போர் நினைவுச் சின்னங்கள் உள்ளன. இங்கு பொதுமக்கள் நாட்டக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு அவ்வப்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
✦ பிரதமர், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ராணுவப் படைகளின் முக்கிய தளபதிகளும் டெல்லியில் இந்திய கேட்டில் உள்ள ‘அமர்ஜவான் ஜோதி’ நினைவுச் சின்னத்திற்கு வருடம் ஒரு முறை வந்து அஞ்சலி செலுத்துவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
✦ தற்போது பிரதமர் நரேந்திரமோடி உத்தரவின் பேரில் “பாரத்கா விர்’’ (இந்தியாவின் வீரன்) என்னும் செயலி அஞ்சலி செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்து அஞ்சலி செலுத்தவதன் மூலம் அஞ்சலி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
168 நாட்களுக்குப்பின் பூமிக்குத் திரும்பிய விஞ்ஞானிகள்
✦ Expedition 55 என்ற குழு விண்வெளியில் உள்ள சர்வதேச வானியல் ஆய்வு மையத்திற்குச் சென்றது. இதில் இடம் பெற்றிருந்த நாசா விஞ்ஞானி ஸ்காட்டிங்கில், ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞான நரிஷிகே கனாய் மற்றும் ரஷ்ய விஞ்ஞானி அன்டன் ஸ்கப்லெரோவ் ஆகியோர் ஜீன் 3 ஆம் தேதி பூமிக்குத் திரும்பினார். 168 நாட்களுக்குப் பின் அவர்கள் பாராசூட் மூலம் கஜகஸ்தானில் தரை இறங்கினார்.
✦ இந்த 3 பேரில் டிங்கில் மற்றும் கனாய் ஆகியோர் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளனர். மற்றொரு விஞ்ஞானி ஸ்கப்லெரோவ்க்கு இது 3வது பயணமாகும். இதுவரை அவர் மொத்தம் 532 நாட்கள் விண்வெளியில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச் சுற்றுச்சூழல்தினம்
✦ ஐக்கிய நாடுகள் அவையில் ஆண்டுதோறும் ஜீன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச் சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
✦ இந்த தினம் 1972-ல் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் 1972-ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்சபையின் சார்பில் இத்தினத்தின் கொண்டாட்டங்களுக்கு பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயல்படுகின்றது. இந்த ஆண்டு இந்தியா இதனை நடத்துகிறது. ‘பிளாஸ்டிக் மாசுவை ஒழிப்போம்’ – என்பதை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கியூபா நாட்டுக்கான புதிய இந்திய தூதர் நியமனம்
✦ கியூபா நாட்டக்கான புதிய இந்திய தூதராக லண்டன் தலைமை தூதரகத்தில் பணியாற்றி வந்த மதுசேத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
05.06.2018 TNPSC CURRENT AFFAIRS
ஆந்திரா: புதிய மாநிலச் சின்னங்கள்:
ஆந்திரப் பிரதேச மாநிலம் 2014 ஜீன் 2-ல் ஆந்திரம், தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்தப் பிரிவினையின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநில அரசு புதிய மாநிலச் சின்னங்களை மே 31 அன்று அறிவித்தது. ஆந்திர மாநிலத்தின் சுற்றுச்சூழல் சின்னங்களை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநில மலராக மல்லிகையும், மாநிலமரமாக வேப்பமரமும், மாநிலப் பறவையாகப் பச்சைக் கிளியும், மாநில விலங்காக வெளிமானும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஆந்திர அரசு சார்பில் Nava Nirmana Deeksha என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
ஆசியப்போட்டி: டென்னிஸ் அணியில் லியாண்டர் பயஸ்
ஆசியப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் போட்டியில் மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் ஃபயஸ் இடம்பெற்றுள்ளார்.
இந்தோனேஷியா ஜாகர்தாவில் வரும் ஆகஸ்ட் மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா சார்பில் 900 பேர் கொண்ட அணி அனுப்பப்படுகிறது. இந்நிலையில் டென்னிஸ் அணிகள் பட்டியலை அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
ஆசியப் போட்டியில் 2 தங்கம் வென்றுள்ள லியாண்டர் பயஸ் உட்பட பல வீரர்கள் கலந்து கொள்கின்றனர் மற்றொரு வீரரான யுகி பாம்ப்ரி அமெரிக்க ஓபன் போட்டியில் பங்கேற்பதற்காக விலக்கு பெற்றுள்ளார். ஆசியப் போட்டிகளில் லியாண்டர் பயஸ் 8 முறை பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளர்கள்:
ஆடவர் அணி – ஜீஷன் அலி
மகளிர் அணி – அங்கிதா பாம்ப்ரி
சுனில் சேத்ரியின் 100வது போட்டி
இந்திய கால்பந்து விளையாட்டில் 100வது சர்வதேச போட்டியில் விளையாடியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார் கேப்டன் சுனில் சேத்ரி
மும்பையில் நடந்து வரும் இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டியில் இந்தியா-கென்யா இடையிலான ஆட்டமே அவரது 100வது ஆட்டமாகும்.
இதற்குமுன் பாய்ச்சுங் பூட்டியா இந்திய அணிக்காக 100 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக எம்.கே.ஜெயின் நியமனம்
ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக கடந்த ஆண்டு ஜீலைவரை S.S. முந்த்ரா இருந்தார். அவர் ஓய்விற்குப் பின் அந்தப் பதவி காலியாக இருந்தது.
தற்போது அந்தப் பதவிக்கு ஐடிபிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள M.K.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக நிதிச்சேவைகள் துறை செயலர் ராஜிவ்குமார் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். RBI -க்கு 4 துணை ஆளுநர்கள் நியமிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம்
பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் (ஜீன் 4) நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார்.
தென்னாப்பிரிக்கா அதிபர் - சிரில் ரமாபோஸா
‘காவலன் டயல் 100’ செயலி அறிமுகம்
தமிழ்நாட்டில் அவசர காலத்தில் 100 என்ற எண்ணை டயல் செய்யாமலேயே செயலியைத் தொடுவதன் மூலம் நேரடியாக மாநில காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தங்களுடைய இருப்பிடத் தகவல்களுடன் தொடர்பு கொள்ள ‘காவலன் டயல் 100’ என்ற செயலி (மாநில காவல் தலைமைக் கட்டப்பாட்டு மையத்தின் மூலம்) உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக ‘காவலன் SOS’ என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதுல்வர் (ஜீன் 4) தொடங்கி வைத்தார்.
தாய்லாந்து வாலிபால் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக இலக்கியா தேர்வு
12வது ஆசிய பெண்கள் வாலிபால் போட்டி மற்றும் பிரின்சஸ் கோப்பைக்கான 20வது தென்கிழக்கு ஆசிய பெண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டு போட்டிகள் கடந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் 12 நாடுகள் கலந்து கொண்டன.
20-வது தென்கிழக்கு ஆசிய பெண்கள் வாலிபால் தொடரில் இந்திய அணி 2-வது இடமும், 12வது ஆசிய பெண்கள் வாலிபால் போட்டியில் இந்திய அணி 8-வது இடமும் பெற்றது.
17 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியான முத்து இலக்கியா இடம்பெற்றிருந்தார் இந்த இரு போட்டிகளிலும் சிறந்த வீராங்கனை என்ற விருதை முத்து இலக்கியா பெற்றுள்ளார். சர்வதேச போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.
2018-ன் மிஸ் கியூன்
2018-ஆம் ஆண்டுக்கான இந்திய மின் கியூன் போட்டியின் இறுதிச் சுற்று கேரள மாநிலம் கொச்சியில் (ஜீன் 4)நடைபெற்றது. இதில் கேரளாவின் லட்சுமி மேனன் முதலிடம் பிடித்து இந்திய மிஸ்கியூன் ஆக தேர்வு பெற்றார். பஞ்சாபின் சிம்ரன் மல்ஹோத்ரா, டெல்லியின் ஐஸ்வர்யா சாதேவ் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
ஆண்களுக்கு மகப்பேறு விடுப்பு - ஹரியானா
பிறந்த குழந்தையை 15 நாட்களுக்குத் தாயால் மட்டும் பராமரிப்பது கடினம். அதனால் குழந்தையைப் பராமரிக்க அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு 15 நாட்கள் விடுப்பு வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
ஹரியானா முதல்வர் - மனோகர் லால்
சிம்லா முதல் சண்டிகர் வரை ஹெலிகாப்டர் டாக்சி சேவை தொடக்கம்
ஹிமாச்சலபிரதேசத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் ஹெலி டாக்சி எனப்படும் வாடகை ஹெலிகாப்டர் சேவையை ஹரியானா முதல்வர் ஜெயராம் தாக்கூர் தொடங்கி வைத்துள்ளார்.
(சிம்லா முதல் சண்டிகர் வரை) இந்த சேவையானது ஜப்பர்ஹாட்டி விமான நிலையத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2 கோடி கார் தயாரித்து சுசூகி நிறுவனம் சாதனை
ஜப்பானின் சுசூகி நிறுவனம் 1983-லிருந்து செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் மத்திய அரசுடன் இணைந்து மாருதி உத்யோக் என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. கடந்த 34 ஆண்டுகளில் 2 கோடி கற்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
தற்போது மாருதி சுசூகி இந்தியா என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
04.06.2018 TNPSC CURRENT AFFAIRS
ஆசியாவில் முதல் முறையாக சர்வதேச அங்கீகாரம் பெறும் இந்திய கடற்கரைகள்
• ப்ளுஃபளாக் எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் பெறும் வகையில் ஆசியாவில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த 13 கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
• சர்வதேச அங்கீகாரம் பெறும் இத்திட்டத்துக்கு ஒடிஸா, மகாராஷ்டிரம், புதுச்சேரி, கோவா, டையூ-டாமன், லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த 13 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
• இந்தத் தகவலை, இந்திய கடற்கரைகளை நிர்வகிக்கும் பொறுப்பேற்று அவற்றை மேம்படுத்தி வருவதும், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஓர் அங்கமான, ‘ஒருங்கிணைந்த கடற்கரைப் பகுதி நிர்வாகத்துக்கான அமைப்பு’ திட்டத் தலைவர் அரவிந்த் நௌதியா கூறியுள்ளார்.
• ப்ளு ஃப்ளாக் தரச்சான்றிதழ் பெற ஒரு கடற்கரை பிளாஸ்டிக் தவிர்ப்பு, சுற்றுலாப் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர், போன்ற 33 நிபந்தனைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சைக்கிள் தினம்
• ஆண்டுதோறும் ஜீன் 3 ஆம் தேதியை உலக சைக்கிள் தினமாக கொண்டாட அண்மையில் ஐ.நா அறிவித்தது அதனடிப்படையில் ஜீன் 3-ல் உலகம் முழுவதும் முதலாவது உலக சைக்கிள் தினம் அனுசரிக்கப்பட்டது.
சராசரி விமான கட்டண விவரம்
• 2014-ஆம் நிதி ஆண்டு முதல் 2018 ஆம் நிதி ஆண்டு வரை உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 19 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
• மேலும் 2015 ஆம் ஆண்டு சராசரி விமான கட்டணங்களுடன் ஒப்பிடும்போது 2017 ஆம் ஆண்டு சராசரி விமான கட்டணம் 18 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.
• அடுத்த 10 ஆண்டுகளில் விமான பயணிகளின் எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்த நப் நிர்மான் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
உலகில் அதிக நேரம் உழைப்பவர்ககள் மும்பை வாசிகளே- ஆய்வில் தகவல்
• உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் பற்றிய ஆய்வை சுவிட்சர்லாந்து வங்கி ஒன்று நடத்தியது.
• இதில் மும்பையைச் சேர்ந்த தொழிலாளர்களே அதிக நேரம் (ஆண்டிற்கு 3,314.7 மணிநேரம்) உழைப்பதாக கூறப்பட்டுள்ளது. ஹனோய், மெக்சிகோ, டெல்லி ஆகியன முறையே அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
விதிஷா தூதுவராக சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா நியமனம்
• இந்தி நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகரும், மத்தியப்பிரதேசத்திலுள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியருமான சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா முக்கியமான விழாக்களில் நடிகர் கோவிந்தாவின் பாடலுக்கு நடனமாடுபவர். இவர் ‘டான்சிங் அங்கிள்’ என்று அழைக்கப்படுகிறார்.
• இந்நிலையில் இவர் விதிஷா நகராட்சியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்
• கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடந்த மே 23 ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
• இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
• இந்நிலையில் இந்த பல்கலைக்கழகம் மணிப்பூரின் இம்பால் நகரில் அமைய உள்ளது.
மாநில ஜீனியர் நீச்சல் போட்டி சிறார் பிரிவில் ஆதித்யா, பிரியங்கா தங்கம்
• தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் 35வது சப்ஜீனியர், 45வது ஜீனியர் மாநில நீச்சல் போட்டிகள் வேளச்சேரியில் உள்ள சர்வதேச நீச்சல்குள வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
• இதில் சிறார் பிரிவில் ஆதித்யா, அகமது, அஸ்ரக்விசேஷ் பரமெஸ்வர் போன்றோரும் சிறுமியர் பிரிவில் பிரியங்கா புகழரசும் தங்கம் வென்றனர்.
ரஷ்யா - இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி
• ரஷ்யா-இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
• இதற்கான தொழிற்சாலையை அமைக்க பெங்களுரூ அருகே தும்கூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அக்டோபருக்குள் முடிவடையும்.
• ரஷ்ய ஹெலிகாப்டர்ஸ் நிறுவனமும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து கமோவ் ரக ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய உள்ளது.
• தற்போது கீட்டா மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்களை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் சிஇஓ-வாக நிகேஷ் அரோரா
• பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நிகேஷ் அரோரா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் கூகுள் நிறுவனத்தில் 2004 முதல் 2014 வரை பணியாற்றினார் பின் சாப்ட்பேங்க் நிறுவனத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் இருந்தார். ஜீன் 6-ல் பொறுப்பேற்பார்.
03.06.2018 TNPSC CURRENT AFFAIRS
புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா
• கோஃபென்-6 எனப்படும் நவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியுள்ளது. இதனுடன் அறிவியல் ஆய்வு செயற்கைக் கோளான லூவோஜியா-1 என்ற செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது.
• கோஃபென்-6 செயற்கைக்கோள் விவசாய வளங்கள் ஆராய்ச்சியிலும், பேரழிவு கண்காணிப்பு நடவடிக்கையிலும் முக்கிய பங்காற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயினில் புதிய பிரதமர் பதவியேற்பு
• ஸ்பெயின் பிரதமராக இருந்த மரியானோ ரஜோய் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகியதையடுத்து 180 பேர் ஆதரவுடன் பெட்ரோ சன் ஹெஸ் புதிய பிரதமராக ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபெலிப் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
கலிபோர்னியா கவர்னர் தேர்தலில் இந்திய வம்சாவளி இளைஞர்
• அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சுபம் கோயல் போட்டியிடுகிறார்.
• இவர் ‘தோற்ற மெய்மை’ (வெர்ச்சுவல் ரியாலிட்டி) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களிடம் இவர் பிரச்சாரம் செய்கிறார்.
• தற்போதைய ஆளுநர் ஜெர்ரி பிரவுனின் பதவிக்காலம் சில மாதங்களில் முடிவடைகிறது.
ஆளுநர்கள் மாநாடு – டெல்லி
• மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஜீன் 4-ல் தொடங்குகிறது.
• இந்த மாநாட்டைக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
• மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளுக்கு பிந்தைய 2வது அமர்வில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உரையாற்றுகின்றனர். அதன்பின் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
பச்சிளங்குழந்தைகளுக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை – குஜராத் அரசு திட்டம்
• அவசர சிகிச்சைகள் தேவைப்படும் போது “பிறக்கும் குழந்தைகளுக்கு என மருத்துவமனைகளுக்கு இடையிலான ஆம்புலன்ஸ் சேவை திட்டம்” எனும் திட்டத்தை குஜராத் மாநிலம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் உள்ள மலருக்கு பிரதமர் மோடி பெயர்
• சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தாவரவியல் பூங்காவிற்கு சென்றார். இந்த பூங்காவில் உள்ள ஒரு வகையான ஆர்கிட் மலருக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது.
7 வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாட்டை அறிய குழு
• உஜ்வாலா யோஜனா, சவுபாக்யா யோஜனா, ஜன்தன் யோஜனா, உஜாலா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா, மிஷன் இந்திர தனுஷ் போன்ற ஏழு திட்டங்களின் செயல்பாட்டை அறிய கிராம ஸ்வராஜ் அபியான் எனப் பெயரிடப்பட்ட குழு ஒன்றை பிரதமர் மோடி அமைத்துள்ளார். இதற்கு தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை சார்பில் 2 மூத்த IAS அதிகாரிகளை நியமித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் வி.முருகேசன்
• அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தராக பேராசிரியர் வி.முருகேசனை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார். இவர் சர்வதேச இதழ்களில் 163 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
தன்னம்பிக்கை சாதனையாளர் விருது
• மல்ட்டிப்பிள் ஸ்க்ளீரோசிஸ் எனப்படும் கொடிய நரம்பு அழற்சி நோயிலிருந்து போராடி மீண்டு, அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்து வரும் மகேஸ்வரி என்பவரைப் பாராட்டி சென்னை ராஜாஜி மருத்துவமனையில் உலக மல்டிப்பிள் ஸ்க்ளீரோசிஸ் நாளை முன்னிட்டு தமிழக அரசு தன்னம்பிக்கை சாதனையாளர் விருதை வழங்கியது. இது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் வழங்கப்பட்டது.
• இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முன்னதாரணமாக உள்ள மகேஸ்வரி, உலக மல்ட்டிப்பிள் ஸ்க்ளீரோசிஸ் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவர். தற்போது மல்ட்டிப்பிள் ஸ்க்ளீரோசிஸ் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினராகவும் பணிபுரிகிறார்.
சென்னை – சந்த்ரகாச்சி புதிய ரயில் சேவை தொடக்கம்
• மத்திய ரயில்வே அமைச்சகம் சென்னை- சந்த்ரகாச்சி இடையே வாரம் ஒருமுறை இயக்கப்படும் புதிய ரயிலுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
5 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றார் சுஷ்மா ஸ்வராஜ்
• BRICS நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு தென்னாப்பிரிக்கா ஜோஹன்ஸ்பெர்க்கில் வரும் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக 5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
எகிப்து அதிபராக இரண்டாவது முறையாக அப்தேல் பதவியேற்றார்
• கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எகிப்தின் அதிபர் தேர்தலில் அப்தேல் ஃபாட்டா அல்சிசீ மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் உள்ளனர். பல்வேறு கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்-சேய் நலனைக் கண்காணிக்க Picme இணையதளம்
• தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் மகப்பேறு மற்றும் சிசு தொடர் மதிப்பீட்டுக்கான பிக்மி (Picme) என்ற இணையதளம் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
• இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கருவுற்ற பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் சுகாதாரத்தை முழுமையாகக் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும்.
• அருகிலுள்ள தமிழக அரசின் இ-சேவை மையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதற்கான இணையதளத்தில் கருவுற்ற பெண்கள், தங்களது பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
கூகுள் - புது செயலி அறிமுகம்
• ‘கூகுள் இந்தியா’ நிறுவனம் ‘நெய்பர்ஹீட்’ (Neighborhood) எனும் புதிய அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது.
• இதன்மூலம் அருகில் செல்லவேண்டிய இடங்களை எளிதில் கண்டுபிடிப்பதுடன் அந்த பகுதி வாசிகளிடம் கூடுதலான தகவல்கள் பெறலாம்.
02.06.2018 TNPSC CURRENT AFFAIRS
ஊழல் குற்றச்சாட்டு - ஸ்பெயின் பிரதமர் பதவி விலகல்
• ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பெரும்பாண்மையை நிரூபிக்க இயலாத நிலையில் ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜேஸ் (சோசலிஸ்ட் உழைப்பாளர் கட்சி) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
• இதனையடுத்து அடுத்த புதிய பிரதமராக பாப்புலர் கட்சியைச் சேர்ந்த பெட்ரோ சன்ஷெஸ் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலராக அமித் கரே பொறுப்பேற்பு
• மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலராக பணியாற்றி வந்த நரேந்திரகுமார் சின்ஹாவின் பணி நிறைவு பெற்றதையடுத்து புதிய செயலராக அமித் கரே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்திற்கென பிரத்யேக பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்
• தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்பு உள்ளதைப் போன்று மேற்குவங்க மாநிலத்திற்கும் தனி பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வு பெற்ற டிஜிபி சுர்ஜித் கர் புரக்ஷ்யாவை நியமனம் செய்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைக்கு ரூ.109 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு
• கடந்த 2015-ல் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின் போது இலங்கைக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி சேவை அளிக்க உறுதி அளித்தார்.
• இதனடிப்படையில் இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு இரு தவணைகளாக ரூ.147.81 கோடி நிதியுதவியில் 297 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர், முதல் உதவி நிபுணர்கள் என அந்நாட்டு ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது.
• இந்த ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையால் நாடு முழுவதும் விரிவுபடுத்த கூடுதலாக ரூ.109 கோடி வழங்க தற்போது இந்தியா முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூருடன் 8 ஒப்பந்தங்கள்
• சிங்கப்பூர் சென்ற இந்தியப்பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் லீசியான் லூங்குடன் கடற்படை தளவாட ஒத்துழைப்பு உட்பட 8 ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
• மேலும் சிங்கப்பூர் முன்னாள் தூதர் டாமிகோவுக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்தார்.
• அமெரிக்கா மற்றும் ஐநாவுக்கான சிங்கப்பூர் தூதராக பணியாற்றிய இவர் அமெரிக்க-சிங்கப்பூர் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் டாமி கோ என்பது குறிப்பிடத்தக்கது.
‘Spelling bee’ போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் பட்டம் வென்றார்
• அமெரிக்காவில் ஆங்கில வார்த்தைக்களைச் சரியாக சொல்லும் ‘National Spelling bee’ போட்டியில் இந்திய வம்சாவளிச் சிறுவன் கார்த்திக் நெம்மானி(14) பட்டம் வென்றுள்ளார். இதற்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசளிக்கப்பட்டுள்ளது.
• இதுவரை கடந்த போட்டிகளில் தொடர்ந்து 11 அண்டுகளாக இந்திய வம்சாவளியினரே பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ICC ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 4 புதிய அணிகள்
• ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ளன. தற்போது 13 மற்றும் 14வது இடத்தில் ஸ்காட்லாந்து மற்றும் UAE அணிகள் இடம்பெற்றுள்ளன. நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகள் இன்னும் 4 சர்வதேச போட்டிகளில் ஆடிய பின்பு சேர்க்கப்படும்.
சிங்கப்பூர் -நியூயார்க் இடையே நீண்டதூர விமான சேவை
• சிங்கப்பூர் முதல் நியூயார்க் (நெவர்க் விமான நிலையம்) வரையில் நீண்டதூர விமான சேவையினை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்துள்ளது 16700 கி.மீ தூரத்தை 18 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த விமானம் கடக்கும்.
• தற்போது தோஹா (கத்தார்) முதல் ஆக்லாந்து (நியூசிலாந்து) வரையில் இயக்கப்படும் விமான சேவையே நீண்ட தூர விமான சேவையாக உள்ளது.
இந்தியா-அமெரிக்கா ஜப்பான் கூட்டு கடற்படை பயிற்சி
• இந்தியா-அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படை பயிற்சியான மலபார் பயிற்சி பிலிப்பைன்ஸ் கடலில் குவாம் கடற்கரைப் பகுதியில் ஜீன் 7 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பெண்கள் தொடர்பான வழக்குகளுக்கான இந்தியாவின் முதல் தடய அறிவியல் பரிசோதனைக் கூட்டம்
• சண்டிகரில் உள்ள மத்திய தடய அறிவியல் பரிசோதனைக் கூட வளாகத்தில் இந்தியாவின் முதல் நவீன தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி அடிக்கல் நாட்டினார்.
• மும்பை, சென்னை, குவாஹத்தி, புனே, போபால் ஆகிய 5 நகரங்களில் இது போன்ற நவீன தடயவியல் சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
• மேலும் இந்த 6 ஆய்வகங்களும் செயல்படும் போது ஆண்டுக்கு 50000 வழக்குகளில் தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
01.06.2018 TNPSC CURRENT AFFAIRS
ஆதார் - வங்கிகளின் தினசரி இலக்கை தளர்த்தியது UIDAI
• ஆதார் அட்டைகள் இல்லாதவர்கள் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், ஆதார் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
• தினமும் குறைந்தது 16 புதிய ஆதார் அட்டைகள் பதிவு செய்ய வேண்டும் அல்லது ஆதார் அட்டைகளில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
• இந்த இலக்கை எட்டுவதில் சில சிரமங்கள் இருப்பதாக வங்கிகள் தெரிவித்ததையடுத்து 16 என்ற இலக்கும் 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
• மேலும் வங்கிக் கிளைகள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தினசரி இலக்கை 12 ஆகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 16-ஆகவும் உயர்த்திக் கொள்ளவேண்டும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
• ஓவ்வொரு வங்கியும் தங்களது 10 சதவீத கிளைகளில் ஆதார் சிறப்பு மையத்தைக் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
• UIDAI – Unique Identification Authority of India (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்)
ஆதார் மெய்நிகர் எண் நடைமுறை
• ‘ஆதார்’ அட்டை தற்போது அனைத்து தேவைகளுக்கும் கட்டாயமாக்கப்படும் நிலையில் தனிநபர்களின் ரகசியத் தகவல்களுக்கு பாதுகாப்பில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
• இந்நிலையில் இந்த விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய நடைமுறை ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. அதன்படி வரும் நாள்களில் ஆதார் எண்ணைத் தெரிவிக்க விரும்பாதவர்கள் அதற்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் எண்ணைத் தெரிவிக்கலாம் என்பதே அந்த திட்டம்.
• தனித்தவ அடையாள ஆணைய இணையதளப் பக்கத்திற்குச் சென்று அந்த மெய்நிகர் எண்ணை சம்பந்தப்பட்டவர்கள் உருவாக்கிக் கொள்ளலாம். கடவுச்சொல் போல (Password) எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை உருவாக்க முடியும் ஒவ்வொரு முறை மெய்நிகர் எண்ணை உருவாக்கும் போதும் சம்பந்தப்பட்டவரின் ஆதார் விவரங்களோடு இணைக்கப்பட்டுவிடும். இதன் மூலம் அவரது சுய விவரம் பாதுகாக்கப்படும்.
• இந்த ஆதார் மெய்நிகர் எண் நடைமுறையை வங்கிகள், சேவை நிறுவனங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் அமல்படுத்துவதற்கு ஜீலை 1 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் காலமானார்
• மகாராஷ்டிர மாநில வேளாண்துறை அமைச்சர் (பாஜக) பாண்டுரங் பண்டிதர்(67) மும்பையில் மாரடைப்பால் காலமானார்.
பணப் பரிவர்த்தனைகளுக்கான 3 முன்னணி செயலிகள் சிங்கப்பூரில் அறிமுகம்
• இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அதனையடுத்து சிங்கப்பூருக்கு (31.5.18)ல் சென்று அந்நாட்டு பிரதமர் லீசியென் லூங் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
• அதன்பின் அந்நாட்டின் மெரீனா பே சாண்ட் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
• அதன்பின் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பணப்பரிவர்த்தனைகளுக்கான 3 செயலிகளை பிரதமர் மோடி சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தினார் (பீம், ரூ-பே மற்றும் எஸ்பிஐ)
ஹரியானா ICAT மையத்தில் மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகள் தொடக்கம்
• மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆனந்த் கீதே, ஹரியானா மாநிலம் மானசேரில் உள்ள சர்வதேச வாகன தொழில்நுட்ப மையத்தில் தேசிய வாகன சோதனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கட்டமைப்பு திட்ட வசதிகளை தொடங்கி வைத்தார்.
• சர்வதேச வாகன தொழில்நுட்ப மையம் வாகன சோதனை மற்றும் தொழில்துறைக்கு சான்றிதழ் அளிக்கும் பணியை 2006 முதல் மேற்கொண்டு வருகிறது. இரைச்சல், அதிர்வு மற்றும் சீரற்ற ஒலி ஆய்வுக்கூடம், மின்காந்த இணக்க ஆய்வகம் மற்றும் டயர் சோதனை ஆய்வகம் போன்ற வசதிகள் இந்த ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதிநவீன பினாகா ராக்கெட் சோதனை வெற்றி
• DRDO நிறுவனத்தின் ரிசர்ச் சென்டர் இமாரட்தான் (RCI) அமைப்பு வழிகாட்டு வசதிகள், கட்டுப்படுத்தும் அமைப்பு வழிகாட்டு வசதிகள், கட்டுப்படுத்தும் அமைப்பு உட்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய ‘பினாகா’ என்றும் ராக்கெட்டைத் தயாரித்துள்ளது.
• இந்த ராக்கெட் ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து (31.05.2018-ல்) ஏவப்பட்டதாகவும் அச்சோதனை வெற்றி பெற்றதாகவும் னுசுனுழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழறிஞர் ம.லெ.தங்கப்பா காலமானார்
• இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழறிஞருமான ம.லெ.தங்கப்பா(84) புதுச்சேரியில் காலமானார்.
• இதுவரை 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளனர். இவர் எழுதிய சோலைக் கொல்லைப் பொம்மை நூல் குழந்தைகள் இலக்கியத்திற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது.
Safe Zone என்ற புதிய செயலி அறிமுகம்
• கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை விற்பனையைத் தடுக்கும் வகையில் Safe Zone என்ற புதிய செயலியை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.வி.சாந்தா அறிமுகப்படுத்தியுள்ளார்.
ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள் மீட்பு
• ராஜராஜசோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவி ஆகியோரின் உருவமுடைய 2 ஐம்பொன் சிலைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாயின.
• இச்சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள கவுதம் சாராபாய் பவுன்டேசன் காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு இதனை மீட்டுள்ளது.
UNWTO Executive Council கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர்
• ஸ்பெயின் நாட்டின் சான் செபஸ்டியன் நகரில் மே 23-25 வரை நடைபெற்ற ஐ.நா உலக சுற்றுலா அமைப்பின் 108-வது செயற்குழு கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் ஜே.கே.அல்போன்ஸ் கலந்து கொண்டுள்ளார்.
காற்று உச்சி மாநாடு
• உலகளவில் முதல் காற்று உச்சிமாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் செப்டம்பர் 25 முதல் 28 வரை நடைபெற உள்ளது.
நாட்டில் முதல்முறையாக கோவையில் புகையிலை தீமைகளை விளக்கும் மின்னணு கையேடு அறிமுகம்
• கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற சர்வதேச புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் நாட்டிலேயே முதன்முiறாக புகையிலையால் ஏற்படும் தீமைகளுக்கான மின்னணு கையேடுகளை கோவை மாநகர காவல் துணை ஆணையர் S.லட்சுமி வெளியிட்டுள்ளார்.
Copyright © All Rights Reseverd | Websolution by ebbitech